4-ஸ்டார் ரேட்டிங் கொண்ட டாடா கார் எட்டா கனியா மாறிட்டு வருது!! ஏழை மக்கள் வாங்குறதா வேணாமா?

டாடா மோட்டார்ஸ் (Tata Motors), இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனம் என்பதை நான் கூற வேண்டியது இருக்காது என நினைக்கிறேன். ஏனெனில், அந்த அளவிற்கு ஒவ்வொரு மாதத்திலும் ஆயிரக்கணக்கிலான கார்களை டாடா நிறுவனம் மார்க்கெட்டில் விற்பனை செய்து வருகிறது. கார்கள் விற்பனையில் டாடா நிறுவனம் அடைந்திருக்கும் இந்த உயரத்துக்கு முக்கியமான காரணமாக விளங்கும் கார்களுள் ஒன்று, டியாகோ (Tiago) ஆகும். டாடா மோட்டார்ஸின் விலை குறைவான ஹேட்ச்பேக் (Hatchback) ரக காரான டியாகோ, டாடா மோட்டார்ஸில் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவிலேயே விலை குறைவான ஹேட்ச்பேக் காராக விளங்குகிறது.

இந்த நிலையில், டியாகோ காரின் விலைகள் ரூ.5,000இல் இருந்து ரூ.10,000 வரையில் வேரியண்ட்களை பொறுத்து அதிகரிக்கப்பட்டு உள்ளன. இதேபோன்று, கடந்த 2024ஆம் ஆண்டில் இறுதியில் அறிமுகம் செய்யப்பட்ட கர்வ் (Curvv) காரின் விலைகளையும் டாடா மோட்டார்ஸ் அதிகரித்துள்ளதை பற்றி சமீபத்தில்தான் நமது செய்தித்தளத்தில் விரிவாக பார்த்திருந்தோம்.

tata tiago car prices increased

அதனை தொடர்ந்து தற்போது டியாகோ காரின் விலை உயர்வு குறித்த விபரங்கள் கிடைக்க பெற்றுள்ளன. டாடா டியாகோ காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் முன்பு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.8.75 லட்சம் வரையில் இருந்தன. இதில் ஆரம்ப விலையான ரூ.5 லட்சத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றாலும், மற்ற வேரியண்ட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டு உள்ளன.

மார்க்கெட்டில் தற்சமயம் எக்ஸ்.இ, எக்ஸ்.எம், எக்ஸ்டி, எக்ஸ்டிஏ, எக்ஸ்.இசட், எக்ஸ்.இசட் என்.ஆர்.ஜி, எக்ஸ்.இசட்.ஏ, எக்ஸ்.இசட் பிளஸ் மற்றும் எக்ஸ்.இசட்.ஏ பிளஸ் என மொத்தம் 9 விதமான வேரியண்ட்களில் டாடா டியாகோ கார் விற்பனை செய்யப்படுகிறது. இதில், எண்ட்ரீ-லெவல் வேரியண்ட்டான எக்ஸ்.இ -இன் விலைகளில் மட்டுமே எந்த மாற்றமும் இல்லை. மற்ற வேறியண்ட்கள் அனைத்தின் விலைகளும் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளன.

tata tiago car prices increased

விலை அதிகரிக்கப்படாத எக்ஸ்.இ வேரியண்ட் ஆனது பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி (CNG) என இரு விதமான என்ஜின் ஆப்ஷன்களிலும் கிடைக்கிறது. இதில், பெட்ரோல் வேரியண்ட்டில் டியாகோ எக்ஸ்.இ காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.5 லட்சம் மற்றும் சிஎன்ஜி வேரியண்ட்டில் ரூ.6 லட்சம் ஆகும். இந்த இரு விலைகளிலும் எந்த மாற்றமும் இல்லை.

மற்ற வேரியண்ட்களின் விலைகள் ஏற்கனவே கூறியதுபோல், ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரம் வரையில் அதிகரிக்கப்பட்டு உள்ளன. பெட்ரோல் என்ஜின் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் உடன் ரூ.5.70 லட்சத்தில் கிடைத்துவந்த எக்ஸ்.எம் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.5.80 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மக்கள் அதிகம் பேர் வாங்கக்கூடிய வேரியண்ட்டாக விளங்கும் இதன் விலை அதிகரிக்கப்பட்டு இருப்பது, டியாகோ காரின் விற்பனையை பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டியாகோ காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. டியாகோ சிஎன்ஜி காரிலும் இதே பெட்ரோல் என்ஜின் தான் பொருத்தப்படுகிறது என்றாலும், டியாகோ சிஎன்ஜி காரில் பெட்ரோலுக்கு பதிலாக அழுத்தத்திற்கு உள்ளாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை நிரப்ப வேண்டும். இதற்காக டியாகோ சிஎன்ஜி காரில் இரு சிஎன்ஜி சிலிண்டர்கள் பின்பக்கத்தில் வழங்கப்படுகின்றன.

டியாகோ காரின் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி வேரியண்ட்கள் இரண்டுமே மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கின்றன. புதிய விலை உயர்வினால், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் டியாகோ காரின் ஆரம்ப விலையே இனி ரூ.6.90 லட்சம் ஆகும். முன்பு இந்த விலை ரூ.5,000 குறைவாக ரூ.6.85 லட்சமாக இருந்தது.

1.2L Petrol-Manual
Variant Old Price New Price Difference
XE ₹4,99,990 ₹4,99,990 No change
XM ₹5,69,990 ₹5,79,990 ₹10,000
XT ₹6,29,990 ₹6,34,990 ₹5,000
XZ ₹6,89,990 ₹6,99,990 ₹10,000
XZ NRG ₹7,19,990 ₹7,29,990 ₹10,000
XZ Plus ₹7,29,990 ₹7,39,990 ₹10,000
1.2L Petrol-Automatic
XTA ₹6,84,990 ₹6,89,990 ₹5,000
XZA ₹7,44,990 ₹7,54,990 ₹10,000
XZA Plus ₹7,74,990 ₹7,84,990 ₹10,000
1.2L CNG-Manual
XE ₹5,99,990 ₹5,99,990 No change
XM ₹6,69,990 ₹6,79,990 ₹10,000
XT ₹7,29,990 ₹7,34,990 ₹5,000
XZ ₹7,89,990 ₹7,99,990 ₹10,000
XZ NRG ₹8,19,990 ₹8,29,990 ₹10,000
1.2L CNG-Automatic
XTA ₹7,84,990 ₹7,89,990 ₹5,000
XZA ₹8,44,990 ₹8,54,990 ₹10,000
XZA NRG ₹8,74,990 ₹8,84,990 ₹10,000

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கார்களின் விலைகளில் ரூ.5,000 அதிகரிப்பு என்பது பெரிய விஷயம் கிடையாது. ஏனெனில், ஒவ்வொரு டீலர்ஷிப் ஷோரூமுக்கு இடையேயும் காரின் விலையில் ஏறக்குறைய ரூ.5,000 வித்தியாசம் இருக்கும். ஆதலால், ரூ.10,000 விலை அதிகரிப்பை பெற்றுள்ள டியாகோ காரின் வேரியண்ட்களை தான் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த தொகுப்பில் நாங்கள் குறிப்பிட்டுள்ள விலைகள் அனைத்தும் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, May 13, 2025, 5:00 [IST]
English summary
Tata tiago hatchback car prices increased upto 10000 rupees check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+