வெறும் 5 லட்சத்துக்கு இப்படி ஒரு காரை வித்துட்டு இருக்காங்களா! டாடாவுக்கு கோயில் கட்டிதான் கும்பிடணும்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டாடா டியாகோ (Tata Tiago). ஹேட்ச்பேக் (Hatchback) ரகத்தை சேர்ந்த டாடா டியாகோ காரின் நடப்பு 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒட்டுமொத்தமாக 6,954 டியாகோ கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6,947 ஆக இருந்தது.

கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம், இந்திய சந்தையில் 7 டாடா டியாகோ கார்கள் மட்டும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில், விற்பனையில் வளர்ச்சி, வீழ்ச்சி எதுவுமே இல்லாமல், அப்படியே சீராக தொடர்கிறது.

2025 Tata Tiago NRG

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டாடா டியாகோ காரின் ஆரம்ப விலை வெறும் 5 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலையோ 8.45 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) என்பதுடன், ஐசி இன்ஜின் வெர்ஷனின் விலை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

மறுபக்கம் டாடா டியாகோ இவி எலெக்ட்ரிக் வெர்ஷனின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 7.99 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 11.14 லட்ச ரூபாயாகவும் இருக்கிறது. இவையும் கூட எக்ஸ்-ஷோரூம் விலைதான். ஐசி இன்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் என 2 வெர்ஷன்களில் விற்பனை செய்யப்படுவது டாடா டியாகோ காரின் பலமாக கருதப்படுகிறது.

2025 Tata Tiago NRG Side Design

விற்பனையில் பெரிதாக வளர்ச்சி, வீழ்ச்சி எதுவும் இல்லாவிட்டாலும் கூட, நடப்பு 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவன கார்களின் பட்டியலில் டாடா டியாகோ கார் 3வது இடத்தை பிடித்துள்ளது.

இந்த பட்டியலில் முதல் இடத்தில் டாடா நெக்ஸான் (Tata Nexon) காரும், 2வது இடத்தில் டாடா பன்ச் (Tata Punch) காரும் உள்ளன. டாடா டியாகோ காரை பற்றிய மற்ற செய்திகளை பொறுத்தவரையில் 2025 டாடா டியாகோ என்ஆர்ஜி (2025 Tata Tiago NRG) கார், வெகு சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

வரும் மாதங்களில் டாடா டியாகோ காரின் விற்பனை எண்ணிக்கை அதிகரிப்பதற்கு இந்த புதிய மாடல் உதவி செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்திய சந்தையில் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift) மற்றும் ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் (Hyundai Grand i10 Nios) ஆகிய கார்களுடன், டாடா டியாகோ போட்டியிட்டு வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: முதல் முறையாக ஒரு புதிய காரை வாங்க போகும் வாடிக்கையாளர்களுக்கு டாடா டியாகோ ஏற்றதாக இருக்கலாம். சிறிய ஹேட்ச்பேக் காரில் இருந்து தொடங்கி படிப்படியாக பெரிய எஸ்யூவி கார்களுக்கு மாற திட்டமிட்டுள்ள வாடிக்கையாளர்கள், டாடா டியாகோ காரை வாங்குவது குறித்து பரிசீலனை செய்யலாம்.

More from DriveSpark

Article Published On: Sunday, March 16, 2025, 23:52 [IST]
English summary
Tata tiago hatchback sales report february 2025 full details here
மேலும்... #tata motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+