வெறும் 5 லட்சம்தானா! மாருதியை கதற விடும் 28 கிமீ மைலேஜ் கார்! எமனே எதிர்ல வந்தாலும் உசுர காப்பாத்தும்!

இந்தியாவில் டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தின் ஏராளமான கார்கள் மிகவும் பாதுகாப்பானவையாக கருதப்படுகின்றன. இதில், டாடா டியாகோ (Tata Tiago) காரும் ஒன்று. இது ஹேட்ச்பேக் (Hatchback) ரகத்தை சேர்ந்த விலை குறைவான கார்களில் ஒன்றாகும். பாதுகாப்பானது என்பதுடன், விலையும் குறைவாக இருப்பதால், ஒவ்வொரு மாதமும் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை டாடா டியாகோ பதிவு செய்து வருகிறது. இந்த வரிசையில் நடப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதமும் டாடா டியாகோ காருக்கு சிறப்பான ஒரு மாதமாக அமைந்துள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒட்டுமொத்தமாக 8,277 டியாகோ கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கையானது, கடந்த 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6,796 ஆக மட்டுமே இருந்தது. இதன் மூலம் விற்பனையில் 22 சதவீத வளர்ச்சியை டாடா டியாகோ பதிவு செய்து அசத்தியுள்ளது.

Tata Tiago Side Design

முந்தைய வருடம் ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிட்டால்தான் வளர்ச்சி என்றால், அதற்கு முந்தைய மாதமான மார்ச் உடன் ஒப்பிட்டாலும், டாடா டியாகோ விற்பனையில் வளர்ச்சியையே பதிவு செய்துள்ளது. அதாவது நடப்பு 2025ம் ஆண்டு மார்ச் மாதம் ஒட்டுமொத்தமாக 7,946 டாடா டியாகோ கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன.

இந்த எண்ணிக்கையானது, அதன் பின் வந்த ஏப்ரல் மாதம், நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி 8,277 ஆக உயர்ந்துள்ளது. இது 4 சதவீத வளர்ச்சி ஆகும். எனவே நடப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் டாடா டியாகோவிற்கு சிறப்பான ஒன்றாக அமைந்துள்ளது. டாடா டியாகோ காரின் விற்பனை எண்ணிக்கை இவ்வளவு சிறப்பாக இருப்பதற்கு பின்னால் பல்வேறு காரணங்கள் உள்ளன.

Tata Tiago

இதற்கு முதல் காரணம் பாதுகாப்பு ஆகும். குளோபல் என்சிஏபி (Global NCAP) அமைப்பின் மோதல் சோதனைகளில் டாடா டியாகோ கார் 4 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை (4 Star Safety Rating) பெற்றுள்ளது. அத்துடன் சாலை விபத்துக்களில் இருந்து ஏராளமான உயிர்களையும் டாடா டியாகோ காப்பாற்றியுள்ளது.

டாடா டியாகோ காரை இந்திய வாடிக்கையாளர்கள் விரும்புவதற்கு மற்றொரு காரணம் அதன் சரியான விலை நிர்ணயம் ஆகும். டாடா டியாகோ காரின் ஐசி இன்ஜின் வெர்ஷனின் ஆரம்ப விலை வெறும் 5 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலையோ 8.45 லட்ச ரூபாயாக இருக்கிறது.

மறுபக்கம் டாடா டியாகோ இவி எலெக்ட்ரிக் வெர்ஷனின் ஆரம்ப விலை 7.99 லட்ச ரூபாயாக உள்ளது. இதன் டாப் வேரியண்ட்டின் விலையோ 11.14 லட்ச ரூபாயாக உள்ளது. இவை அனைத்துமே எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். ஐசி இன்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் என 2 வெர்ஷன்களில் கிடைப்பதும் டாடா டியாகோ காருக்கு ஒரு பலம்தான்.

இதற்கு அடுத்தபடியாக டாடா டியாகோ காரின் மைலேஜ் (Mileage) மற்றும் ரேஞ்ச் (Range) ஆகியவையும், இந்திய வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுக்கின்றன. டாடா டியாகோ காரின் ஐசி இன்ஜின் வெர்ஷனை பொறுத்தவரையில் இருப்பதிலேயே அதிகபட்சமாக அதன் சிஎன்ஜி/ஆட்டோமேட்டிக் வேரியண்ட்கள் அதிக மைலேஜ் வழங்குகின்றன.

இந்த வேரியண்ட்களின் மைலேஜ் ஒரு கிலோவிற்கு 28.06 கிலோ மீட்டர்கள் ஆகும். மறுபக்கம் எலெக்ட்ரிக் வெர்ஷனை பொறுத்தவரையில், அதன் லாங் ரேஞ்ச் வேரியண்ட்கள், பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 315 கிலோ மீட்டர்கள் பயணம் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை அராய் (ARAI) மைலேஜ் மற்றும் ரேஞ்ச் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Take a Poll

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டாடா டியாகோ காரின் ஐசி இன்ஜின் வெர்ஷன், மாருதி சுஸுகி வேகன் ஆர் (Maruti Suzuki Wagon R) மற்றும் மாருதி சுஸுகி செலிரியோ (Maruti Suzuki Celerio) ஆகிய கார்களுக்கு எல்லாம் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் ஆகும். இதன் எலெக்ட்ரிக் வெர்ஷனானது, எம்ஜி கோமெட் இவி (MG Comet EV), சிட்ரோன் இசி3 (Citroen eC3) ஆகிய கார்களுடன் போட்டியிட்டு வருகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, May 15, 2025, 18:06 [IST]
English summary
Tata tiago sales report april 2025 22 per cent growth
மேலும்... #tata motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+