வெறும் 5 லட்ச ரூபாய்க்கு பைக் மாதிரி மைலேஜ் தரும் காரா! மாருதியை கதிகலங்க வைக்கும் டாடா தயாரிப்பு!
இந்திய சந்தையில் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டாடா டியாகோ (Tata Tiago). ஹேட்ச்பேக் (Hatchback) ரகத்தை சேர்ந்த இந்த கார், மாருதி சுஸுகி செலிரியோ (Maruti Suzuki Celerio), மாருதி சுஸுகி வேகன் ஆர் (Maruti Suzuki Wagon R), சிட்ரோன் சி3 (Citroen C3) உள்ளிட்ட கார்களுடன் போட்டியிட்டு வருகிறது. வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பும் கார்களில் ஒன்றாக இருப்பதால், கடந்த டிசம்பர் மாத விற்பனையில், டாடா டியாகோ வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது. தற்போது வெளிவந்துள்ள சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) மூலமாக இந்த தகவல் தெரியவந்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் 4,852 டியாகோ கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கை, கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5,006 ஆக உயர்ந்துள்ளது. இது 3 சதவீத வளர்ச்சி ஆகும்.

இதன் மூலம் கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாடா கார்களின் பட்டியலில் டியாகோ 3வது இடத்தை பிடித்துள்ளது. முதல் 2 இடங்களில் முறையே டாடா பன்ச் (Tata Punch) மற்றும் டாடா நெக்ஸான் (Tata Nexon) ஆகிய கார்கள் உள்ளன.
ஐசி இன்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் என 2 வெர்ஷன்களிலும் கிடைப்பதுதான், டாடா டியாகோ காரின் மிகப்பெரிய பலம் ஆகும். தற்போதைய நிலையில் டாடா டியாகோ காரின் ஐசி இன்ஜின் வெர்ஷனின் ஆரம்ப நிலை வேரியண்ட்டை வெறும் 5 லட்ச ரூபாய் என்ற விலையிலேயே உங்களால் வாங்க முடியும்.

அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட வெறும் 7.90 லட்ச ரூபாய் என்ற அளவில்தான் உள்ளது. மறுபக்கம் டாடா டியாகோ இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 7.99 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 10.99 லட்ச ரூபாய் ஆகவும் உள்ளது.
இவை அனைத்துமே எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். ஐசி இன்ஜின் வெர்ஷனை பொறுத்தவரையில் இருப்பதிலேயே அதிகபட்சமாக டாடா டியாகோ காரின் சிஎன்ஜி/ஏஎம்டி வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு 28.06 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) வழங்க கூடியவையாக உள்ளன.
மறுபக்கம் எலெக்ட்ரிக் வெர்ஷனை பொறுத்தவரையில் 24 kWh பேட்டரி பொருத்தப்பட்ட லாங் ரேஞ்ச் வெர்ஷன் 315 கிலோ மீட்டர் ரேஞ்ச் (Range) வழங்க கூடியதாக உள்ளது. இவை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவிக்கும் மைலேஜ் மற்றும் ரேஞ்ச் ஆகும். எனவே நடைமுறை பயன்பாட்டில் இந்த எண்கள் மாறுபடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
டாடா டியாகோ ஐசி இன்ஜின் வெர்ஷனின் போட்டியாளர்களை நாங்கள் மேலே குறிப்பிட்டு விட்டோம். மறுபக்கம் இதன் எலெக்ட்ரிக் வெர்ஷனானது, சிட்ரோன் இசி3 (Citroen eC3) மற்றும் எம்ஜி கோமெட் இவி (MG Comet EV) ஆகிய எலெக்ட்ரிக் கார்களுடன் போட்டியிட்டு வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஓரளவிற்கு குறைவான விலையில் ஒரு ஹேட்ச்பேக் காரை வாங்க வேண்டும் என எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு டாடா டியாகோ நல்ல ஆப்ஷன் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து. இது நீங்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக இருக்கும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.


Click it and Unblock the Notifications








