28 கிமீ மைலேஜ்! வெறும் 5 லட்சத்துக்கு புது கார் கிடைக்கும்போது இனி எதுக்கு பஸ், ட்ரெயின்ல போய் கஷ்டப்படணும்?

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் ஹேட்ச்பேக் (Hatchback) ரக கார்களில் ஒன்று டாடா டியாகோ (Tata Tiago). விலை குறைவானது மற்றும் பாதுகாப்பானது என்பதுடன், அதிக மைலேஜ்/ரேஞ்ச் தரக்கூடியதாகவும் உள்ளதால், டாடா டியாகோ கார், இந்திய வாடிக்கையாளர்களின் விருப்பமான ஆப்ஷன்களில் ஒன்றாக உள்ளது.

ஆனால் நடப்பு 2025ம் ஆண்டு ஜூலை மாதம், டாடா டியாகோ கார், விற்பனையில் சற்றே சறுக்கியுள்ளது. காடிவாடி தளத்தில் தற்போது வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) மூலமாக இந்த தகவல் நமக்கு தெரிய வந்துள்ளது. இதன்படி பார்த்தால், டாடா மோட்டார்ஸ் நிறுவனம், நடப்பு 2025ம் ஆண்டு ஜூலை மாதம் 5,575 டியாகோ கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது.

Tata Tiago Front Seat

ஆனால் கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம் 5,665 டாடா டியாகோ கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2025ம் ஆண்டு ஜூலை மாதத்தில், 90 டாடா டியாகோ கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 2 சதவீத வீழ்ச்சி ஆகும்.

இதன் காரணமாக நடப்பு 2025ம் ஆண்டு ஜூலை மாதம் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 ஹேட்ச்பேக் ரக கார்களின் பட்டியலில் (Top 10 Hatchbacks July 2025), டாடா டியாகோ காருக்கு, 5வது இடம் மட்டுமே கிடைத்துள்ளது. முதல் 4 இடங்களில் முறையே மாருதி சுஸுகி வேகன் ஆர், மாருதி சுஸுகி ஸ்விஃப்ட், மாருதி சுஸுகி பலேனோ மற்றும் மாருதி சுஸுகி ஆல்டோ கார்கள் உள்ளன.

Tata Tiago

வருடாந்திர ரீதியிலான ஒப்பீட்டில் மட்டுமல்லாது, மாதாந்திர ரீதியிலான ஒப்பீட்டிலும், டாடா டியாகோ கார் விற்பனையில் வீழ்ச்சியைதான் சந்தித்துள்ளது. அதாவது வி3 கார்ஸ் தளம் வெளியிட்டுள்ள சேல்ஸ் ரிப்போர்ட்படி பார்த்தால், நடப்பு 2025ம் ஆண்டு ஜூன் 6,032 டாடா டியாகோ கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன.

ஆனால் அதன் பின் வந்த ஜூலை மாதம், நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி, 5,575 டாடா டியாகோ கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதாவது நடப்பு 2025ம் ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது, அதன் பின் வந்த ஜூலையில், 457 டாடா டியாகோ கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 7.58 சதவீத வீழ்ச்சி ஆகும்.

ஆனால் இது சிறிய அளவிலான வீழ்ச்சி மட்டுமே என்பதால், டாடா டியாகோ கார் கூடிய விரைவிலேயே இந்த சரிவில் இருந்து மீண்டு வந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல், டாடா டியாகோ கார் விலை குறைவானது. இதன் ஐசி இன்ஜின் வெர்ஷன் வெறும் 5-8.55 லட்ச ரூபாய் விலைகளில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதே நேரத்தில் இதன் எலெக்ட்ரிக் வெர்ஷன் 7.99-11.14 லட்ச ரூபாய் விலைகளில் விற்பனை செய்யப்படுகிறது. இவை அனைத்துமே எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். இது விலை குறைவானதாக இருந்தாலும் கூட, குளோபல் என்சிஏபி (Global NCAP) அமைப்பின் மோதல் சோதனைகளில், 4 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் (4 Star Safety Rating) வாங்கியுள்ளது.

அதே நேரத்தில் டாடா டியாகோ ஐசி இன்ஜின் வெர்ஷனின் சிஎன்ஜி/ஆட்டோமேட்டிக் வேரியண்ட்கள் அதிகபட்சமாக ஒரு கிலோவிற்கு 28.06 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) வழங்க கூடியவையாக உள்ளன. மறுபக்கம் இதன் எலெக்ட்ரிக் வெர்ஷனின் லாங் ரேஞ்ச் வேரியண்ட்களின் டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) அதிகபட்சமாக 293 கிலோ மீட்டர்களாக இருக்கிறது.

டாடா டியாகோ காரின் ஐசி இன்ஜின் வெர்ஷனில், 26.03 செமீ டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், சுறா துடுப்பு ஆன்டெனா, கூல்டு க்ளவ் பாக்ஸ், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் உள்ளிட்ட வசதிகள் (Features) வழங்கப்படுகின்றன.

அதே நேரத்தில் டாடா டியாகோ காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனில், முழு ஆட்டோமேட்டிக் டெம்ப்ரேச்சர் கண்ட்ரோல், ஹெச்டி ரியர் வியூ கேமரா, ஹில் ஹோல்டு கண்ட்ரோல் உள்ளிட்ட வசதிகள் எல்லாம் வழங்கப்படுகின்றன. ஐசி இன்ஜின் வெர்ஷனில் உள்ள ஏராளமான வசதிகள், எலெக்ட்ரிக் வெர்ஷனிலும் வழங்கப்படுகின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஓரளவிற்கு குறைவான விலையில் அதிக மைலேஜ்/ரேஞ்ச் வழங்க கூடிய, அதே நேரத்தில் அதிக வசதிகள் நிரம்பிய மற்றும் பாதுகாப்பான ஒரு ஹேட்ச்பேக் ரக காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு, டாடா டியாகோ இவி சிறந்த ஆப்ஷன் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.

More from DriveSpark

Article Published On: Monday, August 18, 2025, 18:31 [IST]
English summary
Tata tiago sales report july 2025 7 58 per cent down
மேலும்... #tata motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+