டாடா நானோ போல் அடி மாட்டு விலையில் களமிறக்கப்பட்ட புதிய கார்! மைலேஜில் பைக்குகளையே தூக்கி சாப்பிடுது!

இந்திய சந்தையில் நடப்பு 2025ம் ஆண்டு ஜூன் மாதம் டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்திற்கு சரியாக அமையவில்லை. ஆம், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பெரும்பாலான கார்கள் விற்பனையில் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. தற்போது வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) மூலமாக நமக்கு இது தெரிய வந்துள்ளது.

இதன்படி பார்த்தால், டாடா பன்ச் (Tata Punch) மற்றும் டாடா டிகோர் (Tata Tigor) ஆகிய 2 கார்களின் விற்பனையும் 43 சதவீதம் சரிவடைந்துள்ளது. அதே நேரத்தில் டாடா சஃபாரி (Tata Safari) காரின் விற்பனை 34 சதவீதம் குறைந்துள்ளது. மறுபக்கம் டாடா ஹாரியர் (Tata Harrier) காரின் விற்பனை 7 சதவீதம் சரிவடைந்துள்ளது.

Tata Tiago Front Seat

மறுபக்கம் டாடா நெக்ஸான் (Tata Nexon) காரின் விற்பனை 4 சதவீதம் குறைந்துள்ளது. அதே நேரத்தில் டாடா அல்ட்ராஸ் (Tata Altroz) கார் விற்பனையில் 1 சதவீத வளர்ச்சியை மட்டும் பதிவு செய்துள்ளது. அதாவது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பெரும்பாலான கார்கள் விற்பனையில் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. டாடா அல்ட்ராஸ் மிகவும் சிறிய அளவிலான வளர்ச்சியை மட்டும் சந்தித்துள்ளது.

இப்படி பெரும்பாலான கார்கள் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை கை விட்ட நிலையில், ஒரே ஒரு கார் மட்டும், விற்பனையில் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. அது டாடா டியாகோ (Tata Tiago) ஆகும். டாடா டியாகோ கார், விற்பனையில் 17 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது.

Tata Tiago

கடந்த 2024ம் ஆண்டு ஜூன் மாதம், 5,174 டாடா டியாகோ கார்கள் மட்டும்தான் விற்பனை செய்யப்பட்டிருந்தன. இந்த எண்ணிக்கையானது, நடப்பு 2025ம் ஆண்டு ஜூன் மாதம், 6,032 ஆக உயர்ந்துள்ளது. இது 17 சதவீத வளர்ச்சி ஆகும். இதன் மூலமாக நடப்பு 2025ம் ஆண்டு ஜூன் மாதம் விற்பனையில் அதிக வளர்ச்சியை பதிவு செய்த டாடா கார் என்ற பெருமையை டியாகோ பெற்றுள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஒட்டுமொத்தமாக 8 கார்களை விற்பனை செய்து கொண்டுள்ளது. இதில், 7 கார்களை நாம் பார்த்து விட்டோம். எஞ்சியுள்ள ஒரே ஒரு கார் டாடா கர்வ் (Tata Curvv) மட்டுமே. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு ஜூன் மாதம் ஒட்டுமொத்தமாக 2,060 கர்வ் கார்களை விற்பனை செய்துள்ளது.

ஆனால் கடந்த 2024ம் ஆண்டு ஜூன் மாதத்துடன், இந்த விற்பனை எண்ணிக்கையை ஒப்பிட முடியாது. ஏனெனில் அப்போது டாடா கர்வ் கார் விற்பனையிலேயே இல்லை. இது சந்தைக்கு புது வரவாகும். சரி, விற்பனையில் அதிக வளர்ச்சியை பதிவு செய்த டாடா டியாகோ காரை பற்றிய விஷயங்களுக்கு வருவோம்.

தற்போது ஐசி இன்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் என 2 வெர்ஷன்களில் டாடா டியாகோ கார் கிடைத்து வருகிறது. இதில், ஐசி இன்ஜின் வெர்ஷனின் ஆரம்ப விலை வெறும் 4.99 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. மறுபக்கம் எலெக்ட்ரிக் வெர்ஷனின் ஆரம்ப விலை 7.99 லட்ச ரூபாய் மட்டுமே. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.

இந்த விலைக்கு மிகச்சிறந்த தயாரிப்பாக டாடா டியாகோ கருதப்படுகிறது. டாடா டியாகோ காரின் விற்பனை சிறப்பாக இருப்பதற்கு இந்த சரியான விலை நிர்ணயம் மிகவும் முக்கியமான காரணங்களில் ஒன்றாகும். வரும் காலங்களிலும் டாடா டியாகோ கார் விற்பனையில் இந்த உத்வேகத்தை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஒரு காலத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் விலை குறைவான காராக இருந்தது நானோ (Tata Nano) ஆகும். அந்த இடத்தை தற்போது டாடா டியாகோ பிடித்துள்ளது. ஆம், டியாகோதான் தற்போது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மிகவும் விலை குறைவான கார் ஆகும். எனவே குறைவான விலையில் ஒரு புதிய காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு டியாகோ நல்ல ஆப்ஷனாக இருக்கும்.

டாடா டியாகோ காரின் விற்பனை சிறப்பாக இருப்பதற்கு, அதன் புதிய மாடலின் வருகையும் ஒரு காரணமாக கருதப்படுகிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அப்டேட் செய்யப்பட்ட 2025 டியாகோ மற்றும் டியாகோ இவி எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. டாடா டியாகோ காரின் சிறப்பான வளர்ச்சிக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

டாடா டியாகோ காரின் ஐசி இன்ஜின் வேரியண்ட்களின் அதிகபட்ச மைலேஜ் (Mileage) 28.06 கிலோ மீட்டர் ஆகும். சிஎன்ஜி/ஏஎம்டி வேரியண்ட்கள் இந்த மைலேஜை வழங்குகின்றன. மறுபக்கம் எலெக்ட்ரிக் வெர்ஷனின் அதிகபட்ச டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) 315 கிலோ மீட்டர் ஆகும். லாங் ரேஞ்ச் வேரியண்ட்கள், இந்த டிரைவிங் ரேஞ்ச் வழங்குகின்றன.

More from DriveSpark

Article Published On: Wednesday, July 9, 2025, 18:26 [IST]
English summary
Tata tiago sales report june 2025 17 per cent growth full details
மேலும்... #tata motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+