விலை வெறும் 5 லட்சம்தானா! 29 கிமீ மைலேஜை வாரி வழங்கும் காரை வாங்க ஷோரூமுக்கு படையெடுக்கும் வாடிக்கையாளர்கள்!

இந்திய சந்தையில் ஹேட்ச்பேக் ரக கார்களுக்கு (Hatchback Cars) எப்போதுமே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. ஹேட்ச்பேக் ரகத்தை சேர்ந்த கார்களின் விலை குறைவு. அத்துடன் அவை அதிக மைலேஜ் வழங்க கூடிய ஒன்றாகவும் உள்ளன. மேலும் ஹேட்ச்பேக் கார்கள் அளவில் சிறியவை என்பதால், போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளிலும் கூட, அவற்றை மிகவும் எளிமையாக இயக்க முடியும். இது போன்ற காரணங்களால்தான் ஹேட்ச்பேக் ரக கார்களை வாங்குவதற்கு இந்திய வாடிக்கையாளர்கள் அதிக முக்கியத்துவம் வழங்கி வருகின்றனர்.

இந்திய சந்தையில் ஏராளமான ஹேட்ச்பேக் கார்கள் பிரபலமாக உள்ளன. இதில், டாடா டியாகோ (Tata Tiago) குறிப்பிடத்தக்கது. டாடா டியாகோ கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு 9 ஆண்டுகள் கடந்து விட்டன. இந்த கார் கடந்த 2016ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதன் முதலில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

Tata Tiago EV

இத்தனை ஆண்டுகள் கடந்த பின்னரும் கூட, டாடா டியாகோ கார் தொடர்ந்து சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருகிறது. இந்த வரிசையில் நடப்பு 2025ம் ஆண்டு மார்ச் மாதமும் டாடா டியாகோ கார் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. தற்போது வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) மூலமாக இது தெரிய வந்துள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த 2024ம் ஆண்டு மார்ச் மாதம் 6,381 டியாகோ கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கையானது, நடப்பு 2025ம் ஆண்டு மார்ச் மாதம் 7,946 ஆக உயர்ந்துள்ளது. இது 25 சதவீத வளர்ச்சி ஆகும்.

Tata Tiago EV Side Design

இதன் மூலம் நடப்பு 2025ம் ஆண்டு மார்ச் மாதம் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாடா கார்களின் பட்டியலில் டியாகோ 3வது இடத்தை பிடித்துள்ளது. முதல் 2 இடங்களில் முறையே டாடா பன்ச் (Tata Punch) மற்றும் டாடா நெக்ஸான் (Tata Nexon) ஆகிய கார்கள் இருக்கின்றன.

டாடா டியாகோ கார் ஐசி இன்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் என 2 வெர்ஷன்களில் கிடைக்கிறது. இதன் ஐசி இன்ஜின் வெர்ஷனின் ஆரம்ப விலை வெறும் 5 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலையோ 8.45 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

டாடா டியாகோ ஐசி இன்ஜின் வெர்ஷனை பொறுத்தவரையில், இருப்பதிலேயே அதிகபட்சமாக இதன் சிஎன்ஜி/ஆட்டோமேட்டிக் வேரியண்ட் ஒரு கிலோவிற்கு 28.60 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) வழங்க கூடியதாக உள்ளது. மறுபக்கம் டாடா டியாகோ காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனின் ஆரம்ப விலை 7.99 லட்ச ரூபாயாக இருக்கிறது.

மறுபக்கம் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 11.14 லட்ச ரூபாயாக உள்ளது. இவையும் எக்ஸ்-ஷோரூம் விலைதான் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. டாடா டியாகோ காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை பொறுத்தவரையில், இருப்பதிலேயே அதிகபட்சமாக இதன் 24 kWh பேட்டரி பொருத்தப்பட்ட வேரியண்ட்கள் 315 கிலோ மீட்டர் ரேஞ்ச் (Range) வழங்க கூடியவையாக உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: முதல் முறையாக ஒரு புதிய காரை வாங்க போகும் வாடிக்கையாளர்களுக்கு டாடா டியாகோ நல்ல சாய்ஸ் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்தாகும். இது வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக இருப்பதால்தான், சந்தையில் வெற்றி நடை போடுகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 9, 2025, 23:26 [IST]
English summary
Tata tiago sales report march 2025 25 per cent growth
மேலும்... #tata motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+