வெறும் 5 லட்சம்தானா! பைக் வாங்கறதுக்கு பதில் இந்த 28 கிமீ மைலேஜ் காரை வாங்கீட்டு குடும்பமே ஒன்னா போகலாம்!

இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் விலை குறைவான டாடா கார்களில் ஒன்று டியாகோ (Tata Tiago). ஹேட்ச்பேக் (Hatchback) ரகத்தை சேர்ந்த டாடா டியாகோ காரின் நடப்பு 2025ம் ஆண்டு மே மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது.

இதன்படி பார்த்தால், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு மே மாதம் ஒட்டுமொத்தமாக (ஐசி இன்ஜின் + எலெக்ட்ரிக்) 6,407 டியாகோ கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2024ம் ஆண்டு மே மாதம் இந்த எண்ணிக்கை 5,927 ஆக மட்டுமே இருந்தது. இது 8 சதவீத வளர்ச்சி ஆகும்.

Tata Tiago Side Design

நடப்பு 2025ம் ஆண்டு மே மாதம் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் 2 கார்கள் மட்டுமே விற்பனையில் வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. இதில், டியாகோவும் ஒன்றாகும். மற்றொன்று டாடா நெக்ஸான் (Tata Nexon). எஞ்சிய அனைத்து டாடா கார்களும், அதாவது பன்ச், அல்ட்ராஸ், சஃபாரி, டிகோர் மற்றும் ஹாரியர் ஆகிய அனைத்தும் விற்பனையில் வீழ்ச்சியைதான் சந்தித்திருக்கின்றன.

இதில், டாடா கர்வ் (Tata Curvv) மட்டும் விதிவிலக்கு. டாடா கர்வ் கார் இந்திய சந்தைக்கு புது வரவாகும். கடந்த 2024ம் ஆண்டு மே மாதம் டாடா கர்வ் கார் இந்திய சந்தையில் விற்பனையிலேயே இல்லை. எனவே அதன் விற்பனை எண்ணிக்கையை கடந்த 2024ம் ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிட முடியாது.

Tata Tiago

சரி, டாடா டியாகோ காருக்கு வருவோம். இது நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் விலை குறைவான கார்களில் ஒன்றாகும். இந்திய சந்தையில் டாடா டியாகோ காரின் ஆரம்ப விலை வெறும் 5 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் டாப் வேரியண்ட்டின் விலையோ 8.45 லட்ச ரூபாயாக இருக்கிறது.

இவை ஐசி இன்ஜின் வெர்ஷனின் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். மறுபக்கம் எலெக்ட்ரிக் வெர்ஷன் 7.99-11.14 லட்ச ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த விலைக்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக இருப்பதால்தான், டாடா டியாகோ காரின் விற்பனை சிறப்பாக இருந்து வருகிறது.

டாடா டியாகோ காரின் ஐசி இன்ஜின் வேரியண்ட்களில், அதிகபட்சமாக சிஎன்ஜி/ஏஎம்டி வேரியண்ட் ஒரு கிலோவிற்கு 28.06 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குகிறது. மறுபக்கம் எலெக்ட்ரிக் வெர்ஷனை பொறுத்தவரையில், அதன் லாங் ரேஞ்ச் வேரியண்ட்கள் அதிகபட்சமாக 315 கிலோ மீட்டர் ரேஞ்ச் வழங்குகின்றன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஓரளவிற்கு குறைவான விலையில் நல்ல மைலேஜ் மற்றும் ரேஞ்ச் வழங்க கூடிய ஐசி இன்ஜின் அல்லது எலெக்ட்ரிக் காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு டாடா டியாகோ ஹேட்ச்பேக் ஏற்றதாக இருக்கும் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.

More from DriveSpark

Article Published On: Wednesday, June 11, 2025, 23:49 [IST]
English summary
Tata tiago sales report may 2025 8 per cent growth
மேலும்... #tata motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+