எமனே எதிர்ல வந்தாலும் ஓரமா போய் விளையாடுப்பானு சொல்லீட்டு போகலாம்! வெறும் நாலரை லட்சத்தில் பாதுகாப்பான கார்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் ஹேட்ச்பேக் ரக கார்களில் (Hatchback Cars) ஒன்று டாடா டியாகோ (Tata Tiago). இந்த காரின் நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), காடிவாடி தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.

இதன்படி பார்த்தால் நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்திய சந்தையில் ஒட்டுமொத்தமாக 5,988 டாடா டியாகோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் ஒட்டுமொத்தமாக வெறும் 5,319 டாடா டியாகோ கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன.

Tata Tiago Side Design

அதாவது கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதத்தில், 669 டாடா டியாகோ கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் டாடா டியாகோ கார் விற்பனையில் 13 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது.

அத்துடன் நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 ஹேட்ச்பேக் ரக கார்களின் பட்டியலில் (Top 10 Hatchbacks November 2025), டாடா டியாகோ கார், 5வது இடத்தையும் பிடித்துள்ளது. இந்த பட்டியலில் முதல் 4 இடங்களிலும் மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்தின் கார்கள்தான் உள்ளன.

Tata Tiago

அவை முறையே மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift), மாருதி சுஸுகி வேகன் ஆர் (Maruti Suzuki Wagon R), மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno) மற்றும் மாருதி சுஸுகி ஆல்டோ கே10 (Maruti Suzuki Alto K10) ஆகியவை ஆகும். இந்த வரிசையில் டாடா டியாகோ 5வது இடத்தை பிடித்துள்ளது.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டாடா டியாகோ காரின் ஐசி இன்ஜின் வெர்ஷனின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 4.57 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் டாடா டியாகோ இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 7.99 லட்ச ரூபாயாக இருக்கிறது.

இவை அனைத்துமே டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். நாங்கள் இந்த செய்தியில் கூறியுள்ள அனைத்துமே டாடா டியாகோ மற்றும் டாடா டியாகோ இவி ஆகிய 2 வெர்ஷன்களின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை ஆகும்.

டாடா டியாகோ மற்றும் டாடா டியாகோ இவி எலெக்ட்ரிக் காரில், 26.03 செமீ டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஹெச்டி ரிவர்ஸ் பார்க்கிங் டிஜிட்டல் கேமரா, புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப், சுறா துடுப்பு ஆன்டெனா மற்றும் மழை வந்தால் தானாகவே இயங்க கூடிய வைப்பர்கள் என ஏராளமான வசதிகள் (Features) வழங்கப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் ஓரளவிற்கு குறைவான விலையில் ஒரு பாதுகாப்பான ஹேட்ச்பேக் ரக காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு டாடா டியாகோ மிகவும் ஏற்றதாக இருக்கும் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து. இது குளோபல் என்சிஏபி அமைப்பின் மோதல் சோதனைகளில் 4 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்ற கார் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Saturday, December 20, 2025, 13:36 [IST]
English summary
Tata tiago sales report november 2025 13 per cent growth
மேலும்... #tata motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+