எமனே எதிர்ல வந்தாலும் ஓரமா போய் விளையாடுப்பானு சொல்லீட்டு போகலாம்! விலை வெறும் நாலரை லட்சம்தானா! ஆல்டோ காலி!
இந்திய சந்தையில் கிடைக்கும் மிகவும் விலை குறைவான கார்களில் ஒன்று டாடா டியாகோ (Tata Tiago). இது ஆரம்ப நிலை ஹேட்ச்பேக் ரகத்தை சேர்ந்த கார் ஆகும். டாடா டியாகோ மிகவும் விலை குறைவானது என்பதுடன், பாதுகாப்பானதும் கூட. இதன் காரணமாக ஒவ்வொரு மாதமும் டாடா டியாகோ காரின் விற்பனை மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது.
இதற்கு நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதமும் விதிவிலக்கு அல்ல. காடிவாடி தளத்தில் தற்போது வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட்படி (Sales Report) பார்த்தால், நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஒட்டுமொத்தமாக 8,850 டியாகோ கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது.

ஆனால் கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஒட்டுமொத்தமாகவே வெறும் 4,682 டாடா டியாகோ கார்கள் மட்டும்தான் விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், 4,168 டாடா டியாகோ கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 89 சதவீத வளர்ச்சி ஆகும்.
இதன் காரணமாக 2025ம் ஆண்டு அக்டோபர் மாதம் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 ஹேட்ச்பேக் கார்களின் பட்டியலில் டாடா டியாகோ 4வது இடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் முதல் 3 இடங்களில் முறையே மாருதி சுஸுகி வேகன் ஆர் (Maruti Suzuki Wagon R), மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno) மற்றும் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift) ஆகிய கார்கள் உள்ளன.

இந்த வரிசையில் 4வது இடம் பிடித்துள்ள டாடா டியாகோ காரானது, ஐசி இன்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் என 2 வெர்ஷன்களில் கிடைக்கிறது. இதில், ஐசி இன்ஜின் வெர்ஷனின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 4.57 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 8.10 லட்ச ரூபாயாக இருக்கிறது.
மறுபக்கம் டாடா டியாகோ காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 7.99 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 11.14 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை அனைத்துமே டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டாடா டியாகோ கார் குளோபல் என்சிஏபி (Global NCAP) அமைப்பின் மோதல் சோதனைகளில், 4 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்று அசத்தியுள்ளது. எனவே மிகவும் குறைவான விலையில் ஒரு பாதுகாப்பான காரை வாங்க வேண்டும் என நினைக்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு டாடா டியாகோ மிகச்சிறந்த ஆப்ஷன் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.
இந்திய சந்தையில் மாருதி சுஸுகி ஆல்டோ கே10 (Maruti Suzuki Alto K10), மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ (Maruti Suzuki S-Presso) மற்றும் ரெனால்ட் க்விட் (Renault Kwid) போன்ற ஆரம்ப நிலை ஹேட்ச்பேக் ரக கார்களுக்கு எல்லாம், மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக டாடா டியாகோ திகழ்கிறது.


Click it and Unblock the Notifications








