வெறும் நாலரை லட்சத்துக்கு டாடா காரா! எமனே எதிர்ல வந்தாலும் ஓரமா போய் விளையாடுப்பானு சொல்லீட்டு போகலாம்!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் ஹேட்ச்பேக் (Hatchback) ரக கார்களில் ஒன்று டாடா டியாகோ (Tata Tiago). இந்த காரின் நடப்பு 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) காடிவாடி தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.
இதன்படி பார்த்தால், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒட்டுமொத்தமாக 8,322 டியாகோ கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. ஆனால் கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெறும் 4,225 டியாகோ கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன.

அதாவது கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், 4,097 டாடா டியாகோ கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் டாடா டியாகோ கார் விற்பனையில் 97 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அனைவரையும் பிரம்மிக்க வைத்துள்ளது.
டாடா டியாகோ கார் ஐசி இன்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் என 2 வெர்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இதன் ஐசி இன்ஜின் வெர்ஷனின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை தற்போதைய நிலையில் வெறும் 4.57 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது.

அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட 8.10 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. அதே நேரத்தில் டாடா டியாகோ இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 7.99 லட்ச ரூபாயாக உள்ளது. மறுபக்கம் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 11.14 லட்ச ரூபாயாக இருக்கிறது.
இவை அனைத்துமே டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதள பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். இந்த விலைக்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக டாடா டியாகோ கருதப்படுகிறது. இதன் காரணமாகவே அதன் விற்பனை எண்ணிக்கை மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது.
டாடா டியாகோ காரின் ஐசி இன்ஜின் வெர்ஷன் கடந்த 2016ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து இதன் எலெக்ட்ரிக் வெர்ஷன் கடந்த 2022ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. டாடா டியாகோ காரின் ஐசி இன்ஜின் வெர்ஷன் மற்றும் எலெக்ட்ரிக் வெர்ஷன் என இரண்டுமே டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு ஒவ்வொரு மாதமும் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை ஈட்டி தந்து கொண்டுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி ஆல்டோ கே10 (Maruti Suzuki Alto K10), மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ (Maruti Suzuki S-presso), ரெனால்ட் க்விட் (Renault Kwid) போன்ற கார்களுக்கு எல்லாம், டாடா டியாகோ ஐசி இன்ஜின் வெர்ஷன் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன். அதே நேரத்தில் எம்ஜி கோமெட் இவி (MG Comet EV) போன்ற எலெக்ட்ரிக் கார்களுக்கு எல்லாம், டாடா டியாகோ இவி மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன்.
டாடா டியாகோ கார் விலை குறைவானது என்ற போதிலும் கூட, மிகவும் பாதுகாப்பானது. குளோபல் என்சிஏபி (Global NCAP) அமைப்பின் மோதல் சோதனைகளில், டாடா டியாகோ கார் 4 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்று அசத்தியுள்ளது. எனவே குறைவான விலையில் அதிக பாதுகாப்பான ஒரு காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்கள், டாடா டியாகோவை வாங்குவது குறித்து பரிசீலனை செய்யலாம்.


Click it and Unblock the Notifications








