28 கி.மீ மைலேஜ் ரூ6 லட்சம் தான் விலை, இருந்தாலும் இந்த காரை 1000 பேர் கூட வாங்கல! ஏன் தெரியுமா?
டாடா நிறுவனம் செடான் செக்மெண்டில் டிகோர் என்ற காரை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் இந்தியா முழுவதும் செடான் ரக கார்கள் பிரபலம் இழந்து வருகிறது. இதனால் விற்பனை சரிந்து வருகிறது. இந்நிலையில் இந்த காரின் விற்பனையும் சரிவடைந்துள்ளது. இந்த கார் எல்லா விதத்திலும் சிறப்பான காராக இருந்தும் விற்பனை குறைந்துள்ளது.
டாடா நிறுவனத்தின் டிகோர் கார் கடந்த ஜூலை மாதம் வெறும் 968 கார்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளன.இதுவே கடந்தாண்டு ஜூலை மாதம் 1495 கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது 35 சதவீதம் விற்பனை குறைந்துள்ளது. டாடா நிறுவனத்திலேயே மிக குறைவாக விற்பனையாகி வரும் கார் இது தான். இந்த கார் குறித்த சில முக்கியமான தகவல்களை காணலாம்.

டாடா டிகோர் காரில் 7 இன்ச் கொண்ட டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமெட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், புஷ் ஸ்டார்ட்/ ஸ்டாப் பட்டன், மல்டி ஃபங்க்ஷன் ஸ்டியரிங் வீல், பின்பக்க பார்க்கிங் கேமரா, டுயல் ஏர்பேக், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ், பின்பக்க பார்க்கி்ங சென்சார், அதிக வலு கொண்ட பாடி அமைப்பு, காம்பேக்ட் டிசைன், பெரிய பூட் வசதி சுமார்419 லிட்டர் அளவு கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த காரில் 1.2 லிட்டர் 3 சிலிண்டர் பெட்ரோல்இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 86எச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கியர் 5 ஸ்பீடு மேனுவல் மற்றம் 5 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் செட்டப் உடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரில் சிஎன்ஜி ஆப்ஷனும் இருக்கிறது. இந்த காரின் சிஎன்ஜி வேரியன்ட் அதிக மைலேஜ் தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த காரின் பெட்ரோல் ஆட்டோமெட்டிக் வேரியன்ட் 19.28 கி.மீ மைலேஜையும், மேனுவல் வேரியன்ட் ரூ20.3 கி.மீ மைலேஜையும், சிஎன்ஜி மேனுவல் வேரியன்ட் 26.49 கி.மீ மைலேஜையும், ஆட்டோமெட்டிக் வேரியன்ட் 28.06 கி.மீ மைலேஜையும் வழங்குகிறது. இது சிறப்பான மைலேஜ் தரும் கார்களில் ஒன்றாக இருக்கிறது.
இந்த காரின் விலையை பொருத்தவரை ரூ6 லட்சம் முதல் ரூ8.50 லட்சம் வரையிலான விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த கார் விற்பனவை சரிவிற்கு பல்வேற விதமான காரணங்கள் சொல்லப்படுகிறது. மக்கள் எஸ்யூவி பக்கம் நகர்ந்துவிட்டதால் செடான் கார்களின் விற்பனை குறைந்தது மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக இருக்கிறது.

இது போக மக்கள் மத்தியில் எஸ்யூவி கார்கள் மீதான பிரபலம் அதிகமாகிறது. சொடன் காரை தேர்வு செய்வதற்கும் எஸ்யூவி காரை தேர்வு செய்வதற்கு ஒரே காரணம் தான் இருக்கிறது. இரண்டு கார்களும், அதிக இட வசதி கொண்ட கார்களாக இருக்கிறது. செடான் காரை விட எஸ்யூவி கார்கள் இன்னும் அதிக இடவசதி மற்றும் சொகுசு வசதி இருப்பதால் மக்கள் பலர் அந்த காரை வாங்க தான் விரும்புகின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் செடான் கார்கள் விற்பனை குறைந்தாலும் டிசையர் கார் இன்றும் சிறப்பாக விற்பனையாகிறது. இந்த கார் நீண்டகாலமாக அப்டேட் இல்லாமல் இருப்பதும் இந்த காரின் விற்பனை சரிவிற்கு முக்கியமான காரணம். டாடா நிறுவனம் இந்த காரை அப்டேட் செய்தால் விற்பனை நிச்சயம் அதிகமாகும்.


Click it and Unblock the Notifications









