மஹிந்திரா எல்லாம் ஓரம் போ! 2026ல் வரப்போகும் 3 டாடா இவி கார்கள்!
டாடா நிறுவனம் வரும் 2026ம் ஆண்டில் மொத்தம் 3 எலெக்ட்ரிக் கார்களை களம் இறுக்கப்போவதாக உறுதி செய்துள்ளது. இது அந்நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகன வளர்ச்சியை காட்டுகிறது. இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் எலெக்ட்ரிக் கார்களாக இந்த இருக்கிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அடுத்தகட்ட எலெக்ட்ரிக் வாகன வரிசையை வெளியிட தயாகி வருகிறது. இதனால் புதிய இவி கார்களை அடுத்தடுத்து களம் இறக்குகிறுது. இதற்காக அதன் கட்டுமான திறன் மற்றும் உள்நாட்டிலேயே உதிரிபாகங்களை உற்பத்தி செய்யும் திறனை அப்டேட் செய்துள்ளது.இந்நிறுவனம் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக இவி கார்களை விற்பனை செய்து வருகிறது. இந்த 5 ஆண்டுகளில் 2.5 லட்சத்திற்கும் அதிகமான இவி கார்கள் விற்பனையாகியுள்ளன.

இது மட்டுமல்ல இந்நிறுவனம் வெளியிட்ட நெக்ஸான் இவி கார் 1 லட்சத்திற்கும் அதிகமாக விற்பனையாகி விற்பனையில் புதிய சாதனை மைல் கல்லை எட்டிபிடித்துள்ளது. இந்நிலையில் 2026ம் ஆண்டு புதிய தயாரிப்புகளை வெளியிட அந்நிறுவனம் திட்டமிட்டு வகிறது. அதன்படி சியாரா காரின் இவி எடிசனை வெளியிட திட்டமிட்டு வருகிறது. இந்த கார் ஒரு முறை சார்ஜ் செய்தால் 500 கி.மீ வரை ரேஞ்ச் தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக டாடா நிறுவனம் தனது அவ்னியா என்ற காரையும் வரும் 2026ம் ஆண்டிலேயே வெளியிட திட்டமிட்டு வருகிறது. இந்த கார் ஒரு பிரிமியம் எலெக்ட்ரிக் கார் ஆகும். இந்த கார் இந்தியாவில் ஏற்கனவே கான்செப்ட் வெர்ஷனவாக காட்சிப்படுத்தப்பட்டது. வரும் 2030ம் ஆண்டிற்கும் அதிக அளவில் இவி வாகனங்களை விற்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ள நிலையில் அதன் இரண்டாம் கட்டம் வரும் 2026ம் ஆண்டு முதல் துவங்குகிறது.

2030ம்ஆண்டிற்குள் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கென பிரத்தியேமாக 5 புதிய கார்களை விற்பனை செய்ய வேண்டும் என அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதில் அவ்னியா காரும் ஒன்றும், சியாரா காரும் இணையப்போகிறது. இதில் பல்வேறு அப்டேட்கள், ஃபேஸ்லிஃப்ட், அம்சங்கள் மேம்பாடு உள்ளிட்ட வகைகளும் வரவுள்ளன. சார்ஜிங் அம்சங்களும் விரிவடையவுள்ளன. நாடு முழுவதும் 4 லட்சம் சார்ஜிங் பாயிண்ட் களும், 30,000 பப்பளிக் ஃபாஸ்ட் சார்ஜிங் மையங்களும் வரவுள்ளன. இது எல்லாம் 2027ம் ஆண்டிற்கும் நடக்கப்போகும் விஷயங்கள் ஆகும்.
2030 ஆண்டிற்குள் 10 லட்சம் சார்ஜிங் பாயிண்களை உருவாக்கவும் அதில் 1 லட்சம் பப்ளிக் சார்ஜர்களாக இருக்க வேண்டும் என் இலக்கையும் வைத்துள்ளது. இ்நதியாவில் சுலபமாக ஆக்சஸ் செய்யும் வசதிகளை கொண்டாதாக இருக்கிறது. இதனால் நீண்ட தூரம் காரில் பயணிகம் செய்ய விரும்புபவர்களுக்கு இது ஏற்றதாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக டாடா நிறுவனம் தனது அவ்னியா என்ற காரையும் வரும் 2026ம் ஆண்டிலேயே வெளியிட திட்டமிட்டு வருகிறது. இந்த கார் ஒரு பிரிமியம் எலெக்ட்ரிக் கார் ஆகும். இந்த கார் இந்தியாவில் ஏற்கனவே கான்செப்ட் வெர்ஷனவாக காட்சிப்படுத்தப்பட்டது. வரும் 2030ம் ஆண்டிற்கும் அதிக அளவில் இவி வாகனங்களை விற்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ள நிலையில் அதன் இரண்டாம் கட்டம் வரும் 2026ம் ஆண்டு முதல் துவங்குகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் டாடா நிறுவனம் அடுத்துடுத்து எலெக்ட்ரிக் கார்களைகளம் இறக்கும் நிலையில் எதிர்காலத்தில் போட்டி நிறுவனங்களுக்கு கடும் போட்டி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மிகப்பெரிய அளவில் விற்பனை அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications









