ஆட்டோ டிரைவர் தொழிலை நம்பி இருப்பவர்களுக்கு வர பிரசாதம்! ஒருமுறை சார்ஜ் போட்டால் 200கிமீ பயணம்!
டெர்ரா மோட்டார்ஸ் (Terra Motors), இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் (Charging) வசதிகளை உருவாக்கி கொடுக்கக்கூடிய நிறுவனமாக மார்க்கெட்டில் நுழைந்தது. தற்போது டெர்ரா மோட்டார்ஸில் இருந்து எலக்ட்ரிக் வாகனங்களும் விற்பனை செய்யப்படுகின்றன. குறிப்பாக, எடை குறைவான எலக்ட்ரிக் 3-சக்கர வாகனங்களை அதிக எண்ணிக்கையில் டெர்ரா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்கிறது. அந்த வரிசையில், தற்போது புதியதாக ஒரு எலக்ட்ரிக் 3-சக்கர வாகனம் டெர்ரா மோட்டார்ஸ் நிறுவனத்தில் இருந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
டெர்ரா மோட்டார்ஸில் இருந்து புதியதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள எலக்ட்ரிக் 3-சக்கர வாகனத்தின் பெயர், கியோரோ+ (KYORO+) ஆகும். தலைநகர் டெல்லியில் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு இந்த எலக்ட்ரிக் 3-சக்கர வாகனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டெர்ரா மோட்டார்ஸ் நிறுவனத்தில் இருந்து ஏற்கனவே ஒய்4ஏ (Y4A), ரிஸின் (Rizin) மற்றும் பேஸ் (Pace) உள்ளிட்ட எலக்ட்ரிக் 3-சக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

அந்த எலக்ட்ரிக் ஆட்டோ ரிக்ஷாக்கள் உடன் புதியதாக கியோரோ+ இணைந்துள்ளது. டெர்ரா நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த புதிய எலக்ட்ரிக் ஆட்டோ ரிக்ஷாவின் ரேஞ்ச் 200கிமீ ஆகும். அதாவது, இதில் பொருத்தப்படும் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பி அதிகப்பட்சமாக 200கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம்.
0-இல் இருந்து 28km/h வேகத்தை வெறும் 5.6 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய இந்த எலக்ட்ரிக் ஆட்டோ ரிக்ஷாவின் டாப்-ஸ்பீடு மணிக்கு 55கிமீ ஆகும். போதுமான வசதிகளை கொண்ட இருக்கைகள் மற்றும் பெரிய அளவிலான லக்கேஜ் பகுதியை கொண்ட இந்த எலக்ட்ரிக் ஆட்டோ ரிக்ஷாவில் 22 டிகிரி ஏறுமுகமான சாலையில் கூட முழு சரக்கு பொருட்கள் உடன் ஏற முடியும்.

புதிய கியோரோ+ எலக்ட்ரிக் 3-சக்கர வாகனத்தின் அறிமுகத்துடன், தனது அடுத்தக்கட்ட திட்டங்களையும் டெர்ரா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. டெர்ரா மோட்டார்ஸ் ஆனது ஓர் இவி ஸ்டார்ட்-அப் நிறுவனம் ஆகும். அதாவது, தற்போதுதான் மெல்ல மெல்ல தனது நெட்வொர்க்கை டெர்ரா நிறுவனம் விரிவுப்படுத்தி வருகிறது.
அந்த வகையில், 2025ஆம் ஆண்டு முடிவதற்குள் இந்தியாவில் புதியதாக 100 டீலர்ஷிப் ஷோரூம்களை நிறுவ திட்டமிட்டு இருக்கும் டெர்ரா மோட்டார்ஸ் நிறுவனம், 2025ஆம் ஆண்டு முடிவதற்குள் ஒரு மாதத்தில் 5,000 வாகனங்களை உற்பத்தி செய்யும் அளவிற்கு உற்பத்தி திறனை பெருக்கி கொள்ளவும் இலக்காக கொண்டுள்ளது.
அதேநேரம், மக்களுக்கு குறைந்த விலையில் எலக்ட்ரிக் வாகனங்களை வழங்கும் முயற்சியாக, தனது டெர்ரா ஃபைனான்ஸ் (Finance) நிறுவனம் மூலமாக பூஜ்ஜிய முன்தொகை உடன் மாதத்தவணை திட்டங்களை வழங்க டெர்ரா மோட்டார்ஸ் தயாராகி வருகிறது. புதிய கியோரோ+ எலக்ட்ரிக் ஆட்டோ ரிக்ஷாவிற்கான முன்பதிவுகள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்திலும், டீலர்ஷிப் ஷோரூம்களிலும் துவங்கப்பட்டுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் டெர்ரா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எல்3 எலக்ட்ரிக் 3-சக்கர ஆட்டோ ரிக்ஷாக்கள் இதுவரையில் சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, கிழக்கு இந்திய மாநிலங்களில் எலக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்வதில் முன்னணியில் இருக்கும் டெர்ரா மோட்டார்ஸின் வாகனங்கள் நம் சென்னையிலும் கிடைக்கின்றன.


Click it and Unblock the Notifications








