டெஸ்லா 3வது ஷோரூம்க்கு இடம் ரெடி! வாடகையே இத்தனை லட்சமா?

டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது காலடி தடத்தை எடுத்து வைத்துள்ளது. இந்நிறுவனம் ஏற்கனவே தனது முதல் ஷோரூமை மும்பையில் திறந்துள்ளது. இரண்டாவது ஷோரூமை டில்லியில் திறப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில் இந்நிறுவனம் 3வது ஷோரூமை துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

உலகின் மிக முக்கியமான எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமாக இருப்பது டெஸ்லா நிறுவனம் தான். இந்நிறுவனம் தற்போது இந்தியாவில் தனது வாகனங்களை விற்பனை செய்ய களத்தில் இறங்கியுள்ளது. இந்நிறுவனம் கடந்த மாதம் இந்தியாவில் தனது முதல் ஷோரூமை மும்பையில் உள்ள பந்த்ரா குர்லா காம்பளக்ஸ் பகுதியில் திறந்தது. இது இந்தியாவில் முழுவதும் பெரிய அளவில் பேசப்பட்டது.

Tesla 3rd Showroom

இந்நிலையில் இந்நிறுவனம்தனது இரண்டாது ஷோரூமை டில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே உள்ள ஏரோ சிட்டி என்ற பகுதியில் தனது இரண்டாவது ஷோரூமை திறக்கவுள்ளது. வரும் 11ம் தேதி இந்த ஷோரூம் திறப்பு விழா நடக்கிறது. இந்நிலையில் 3ம் ஷோரூமிற்கான இடமும் தற்போது தேர்வாகியுள்ளது.

டெஸ்லா நிறுவனம் தனது 3வது ஷோரூமை கூர்கானில் சோஹ்னா ரோடு பகுதியில் உள்ள ஆர்ச்சிட் பிஸ்னஸ் பார்க் என்ற இடத்தில் சுமார் 51 ஆயிரம் சதுரடி பரப்பளவில் துவங்கவுள்ளது. இந்த இடத்திற்கு 9 ஆண்டுகள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இங்கே ஷோரூம் திறப்பதற்கான ஏற்பாடுகள் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tesla 3rd Showroom

இந்த இடத்திற்கு வாடகையாக டெஸ்லா நிறுவனம் ரூ4.82 கோடியை வழங்க திட்டமிட்டுள்ளது. அப்படி பார்த்தால் மாதம் ரூ40 லட்சம் வாடகை வழங்க திட்டமிட்டுள்ளது. இந்த இடத்திற்கு ரூ2.41 கோடி அட்வான்ஸ் வேறு வழங்கியுள்ளது. ஒவ்வொர மாதமும் 7ம் தேதி வாடகை வழங்க வேண்டும் எனஒப்பம் செய்யதுள்ளது. இந்த வாடகை என்பது அப்பகுதியில் உள்ள 51 பார்க்கிங் பகுதிகளுக்கும் சேர்த்து என கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் கடந்த ஜூலை மாதம் 15 முதல் அமலுக்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக கடந்த 28ம் தேதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தததிற்கு முத்திரை தாள் வரி மட்டும் ரூ20.69 லட்சம் செலுத்தப்பட்டுள்ளுது. இந்த ஒப்பந்தம் சன்சிட்டி ரியல் எஸ்டேட் எல்எல்பி, ஆர்ச்சிட் இன்ஃபிராஸ்டெக்ஷர், கார்வால் பிராபர்டி பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களுடன் செய்யப்பட்டுள்ளது.

Tesla 3rd Showroom

கூர்கான் பகதியில் இந்த ஆர்ச்சிட் பிஸ்னஸ் பார்க் அமைந்துள்ள பகுதி முக்கிய பகுதியாக இருப்பதால் முக்கிய தொழில் மற்றும் இந்நிறுவனத்தின் கார்களை வாங்கும் திறன் கொண்ட வாடிக்கையாளர்கள் பலர் வசிக்கும் பகுதி அருகில் இருப்பதாலும் இந்நிறுவனம் இந்த இடத்தை தேர்வு செய்துள்ளது. இதனால் வாடிக்கையாளர் சுலபமாக ஷோரூம்க்கு வர முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை அதிகரித்து வரும் நிலையில் டெஸ்லா நிறுவனம் வேகமாக தனது இருப்பதை விரித்துக்கொண்டுள்ளது. இதனால் எதிர்காலத்தில் இந்நிறுவனம் மிகப்பெரிய விற்பனையை பெறும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Thursday, August 7, 2025, 10:40 [IST]
English summary
Tesla 3rd showroom india 51000 sqft rent rs 40 lakh
மேலும்... #tesla #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X