30 நாளில் அமெரிக்கா மாதிரி மாறப்போகும் இந்தியா! இந்த காரின் டெலிவரி தேதி வெளியானது!

டெஸ்லா நிறுவனம் வரும் 15ம் தேதஇந்தியாவில் தனது முதல் ஷோரூமை திறந்துள்ள நிலையில் தற்போது டெஸ்லா வாகனங்களுக்கான புக்கிங் மற்றும் டெலிவரி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி டெஸ்லா வாகனங்களை இந்தியாவில் எப்படி புக்கிங் செய்யலாம்? அதன் டெலிவரி எப்பொழுது துவங்குகிறது? விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

உலகின் முன்னணி எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா இந்தியாவில் தனது விற்பனையை துவங்க திட்டமிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் அந்நிறுவனம் தனது முதல் ஷோரூமை மும்பையில் "டெஸ்லா எக்ஸ்பிரீயன்ஸ் சென்டர்" என்ற பெயரில் திறக்கிறது. வரும் 15ம் தேதி இந்த திறப்பு விழா நடக்கவுள்ள நிலையில் இந்த ஷோரூமில் விற்பனைக்கான புக்கிங் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tesla Booking and Delivery India

தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி டெஸ்லா நிறுவனம் இந்த ஷோரூம் துவங்கிய முதல் வாரம் விஐபி மற்றும் பிஸ்னஸ் பார்ட்னர்களுக்காக ஒதுக்கியுள்ளது. முதல் வாகரத்தில் அவர்கள் மட்டுமே ஷோரூமிற்கு சென்று அங்கு டெஸ்லா கார்களை பார்த்து புக்கிங் செய்ய முடியும். அடுத்த வாரம் தான் பொதுமக்களுக்கான விசிட்டிற்கு அனுமதிக்கப்படுகிறது.

நாம் ஏற்கனவே சொன்னதுபடி டெஸ்லா நிறுவனம் தனது முதல் காராக மாடல் ஒய் என்ற காரை தான் இந்தியாவில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த கார்கள் எல்லாம் ஏற்கனவே இந்தியாவிற்குள் இறக்குமதியாக துவங்கிவிட்டன. இந்நிலையில் முதல் ஷோரூம் திறக்கப்படும்போதே இந்த காரின் அதிகாரப்பூர்வ அறிமுகம் இந்தியாவில் இறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tesla Booking and Delivery India

அதன் பிறகு புக்கிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்காக இந்த கார் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் டெலிவரி துவங்கும் என எதிர்பார்க்கலாம். முதலில் இந்த கார் முழுமையாக எந்த சலுகையும் இல்லாமல் இறக்குமதி செய்யப்பட்டு அதிக விலையில் தான் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம். இந்தியாவில் 40 ஆயிரம் அமெரிக்க டாலருக்கு குறைவான விலையில் உள்ள காரை இந்தியாவிற்குள் இறக்குமதி செய்ய 70 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது.

இந்த கார் இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் விற்பனைக்கு வரும் போது சுார் ரூ70 லட்சம் என்ற விலையில் இந்தியாவில் விற்பனைக்கு வர வாய்ப்புள்ளது. அந்த விற்பனை எப்படி இருக்கிறது என்பதை பொறுத்து டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது ஆலை அமைப்பது குறித்து சிந்திக்கும். அதன் பிறகு அதற்காக ஒப்பந்தம் கையெழுத்திட்டு குறைவான இறக்குமதி வரியில் கார்களை இறக்குமதி செய்து பின்னர் ஆலை அமைத்து இந்தியாவிலேயே கார்களை தயாரிக்கும் என எதிர்பார்க்கலாம்.

Tesla Booking and Delivery India

டெஸ்லா நிறுவனம் முதல் ஷோரூமை மும்பையில் திறக்க ஏற்பாடுகளை செய்திருந்தாலும் இரண்டாவது ஷோரூமை டில்லியில் திறக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான வேலைகளும் நடந்து வருகிறது. இந்த ஷோரூமும் இந்த மாத இறுதியிலேயே திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு ஷோரூம்களிலும் நடக்கும் விற்பனையை பொருத்து ஷோரூம்களை மற்ற நகரங்களுக்கும் நகர்த்த இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் காலடி தடத்தை எடுத்து வைப்பது இந்தியாவில் டாடா, மஹிந்திரா போன்ற எலெக்ட்ரிக் வாகன விற்பனையில் உச்சத்தில் இருக்கும் நிறுவனங்களுக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. ஆனால் டெஸ்லா கார்களின் விலை அதிகமாக இருக்கும் என்பதால் பெரிய விற்பனை பாதிப்பு ஏற்படாது என எதிர்பார்க்கலாம். இந்த காரின் டெலிவரி துவங்கிவிட்டால் அமெரிக்கா போல இந்தியாவிலும் இந்த கார் வலம் வரும்.

More from DriveSpark

Article Published On: Saturday, July 12, 2025, 10:35 [IST]
English summary
Tesla booking and delivery india to begin from august
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X