மார்க்கெட்டுக்கு வரதுக்கு முன்னாடியே சிக்ஸர் அடித்த டெஸ்லா.. செவுத்துல வச்சு முட்டி ஒரு வழி பண்ணிட்டாங்க!

மார்க்கெட்டுக்கு வரதுக்கு முன்னாடியே சிக்ஸர் அடித்இந்தியாவில் வெகு விரைவில் உலக புகழ்பெற்ற கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லா (Tesla) அதன் கால் தடத்தைப் பதிக்க இருக்கின்றது. இதற்கான பணிகளையும் நிறுவனம் ஏற்கனவே தொடங்கிவிட்டது. வாகன உற்பத்திக்கான ஆலையை அமைப்பது தொடங்கி வேலைக்கு ஆட்கள் சேர்ப்பது வரை என பல்வேறு முதற்கட்ட பணிகளை அது தொடங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிறுவனத்தின் ஆலை மஹாராஷ்டிரா மாநிலத்திலேயே அமைய இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

மேலும், இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தியைத் தொடங்குவதற்கு முன்னரே, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து தன்னுடைய தயாரிப்புகளை இந்தியாவில் விற்பனைச் செய்யவும் அது திட்டமிட்டு இருக்கின்றது. இதுமட்டுமல்ல ஜெர்மனியில் இருந்தே தன்னுடைய கார்களை இறக்குமதி செய்து விற்பனைக்கு வழங்க இருப்பதாகவும், இந்த கார்கள் ஏப்ரல் மாதம் விற்பனைக்கு கிடைக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

Tesla cybertruck earns five-star safety rating

இந்த மாதிரியான சூழலிலேயே சந்தையின் கவனத்தை, அதவாது, இந்திய வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கின்ற விதமான சம்பவத்தை டெஸ்லா நிறுவனம் தற்போது செய்திருக்கின்றது. அதன் தயாரிப்பு ஒன்று பாதுகாப்பு தரம் குறித்து செய்யப்பட்ட மோதல் ஆய்வில் உச்சபட்ச ரேட்டிங்கைப் பெற்றிருப்பதாகவே தகவல்கள் வெளியாகி உள்ளன.

நிறுவனத்தின் முக்கிய தயாரிப்புகளில் ஒன்றான சைபர்டிரக் (Cybertruck), இதுவே அந்த ஐந்து ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கைப் பெற்ற கார் மாடல் ஆகும். உலக அளவில் நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கும் ஓர் கார் மாடலாக சைபர்டிரக் இருக்கின்றது. இது டொயோட்டா ஹைலக்ஸ் போன்ற பிக்-அப் டிரக் வகை வாகனம் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Tesla cybertruck side crash test

இந்த வகை வாகனத்தையே அதிக பாதுகாப்பு திறன் மிக்கதாக டெஸ்லா நிறுவனம் தயார் செய்திருப்பது தற்போது தெரிய வந்திருக்கின்றது. நேஷனல் ஹை-வே டிராஃபிக் சேஃப்டி அட்மினிஸ்டிரேசன் (National Highway Traffic Safety Administration)-இன் சமீபத்திய மோதல் ஆய்வின் வாயிலாகவே தெரிய வந்திருக்கின்றது.

ஐந்துக்கு ஐந்து ஸ்டார்கள் பாதுகாப்பு ரேட்டிங்கையே அது பெற்றிருக்கின்றது. பல நிலைகளில் வைத்து இந்த காரை மோதல் ஆய்விற்கு உட்படுத்தி இருக்கின்றனர். குறிப்பாக, காரின் முன் பக்க உறுதித் தன்மையைத் தெரிந்துக் கொள்வதற்காக மணிக்கு 56 கிமீ வேகத்தில் ஓட்டி வந்து சுவர் ஒன்றின்மீது வைத்து மோதப்பட்டு இருக்கின்றது.

இதுமட்டும் அல்ல பக்கவாட்டு பக்கத்தின் உறுதித் தன்மையைத் தெரிந்துக் கொள்ளும் அங்கு ஓர் டம்மி வாகனத்தை வைத்தும் மோதிப் பார்க்கப்பட்டு இருக்கின்றது. இவ்வாறே பல நிலைகளில் சைபர்டிரக் மோதல் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டு இருக்கின்றது. இவை அனைத்திலும் இந்த கார் திறம்பட செயல்பட்டிருக்கின்றது.

இதன் அடிப்படையிலேயே ஐந்துக்கு ஐந்து ஸ்டார்களை அது பெற்றிருக்கின்றது. இதன் வாயிலாக டெஸ்லா நிறுவனத்திற்கு பலமடங்கு சிறப்பு சேர்ந்திருக்கின்றது. இந்த தயாரிப்பைப் போலவே டெஸ்லாவின் மற்ற தயாரிப்புகளும் அதிக பாதுகாப்பு திறன்மிக்கதாக இருக்கும் என்கிற நம்பிக்கையை மக்கள் மனதில் இது விதைத்திருக்கின்றது.

இந்தியாவில் கால்தடம் பதிப்பதற்கான பணிகளை நிறுவனம் வேக வேகமாக முன்னெடுத்துக் கொண்டிருக்கின்ற இந்த சூழலிலேயே முதல் பந்திலேயே சிக்ஸர் எடுக்கின்ற மாதிரி இந்த சம்பவம் அமைந்திருக்கின்றது. ஆகையால், டெஸ்லா நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்புக் கிடைக்கலாம் என யூகிக்கப்பட்டு உள்ளது. உலக அளவில் குறிப்பிட்ட சில சந்தைகளிலேயே இந்த பிக்-அப் டிரக் தற்போது விற்பனைக்குக் கிடைக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இந்த நிறுவனம் கால்தடம் பதிக்கும்போது நம் நாட்டிலும் இந்த பிக்-அப் டிரக்கை டெஸ்லா விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. உலக சந்தையில் இந்த கார் ஓர் முழு சார்ஜில் 500 கிமீட்டருக்கும் அதிகமான ரேஞ்ச் தரும் திறனில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்தியாவிலும் இதேபோல், அதிக ரேஞ்சைத் தரும் கார் மாடலாகவே சைபர்டிரக் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, February 20, 2025, 18:43 [IST]
English summary
Tesla cybertruck achieves five star safety rating in nhtsa crash tests proving its toughness
மேலும்... #tesla #electric car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+