இந்தியாவே எதிர்பார்த்த காரின் டெலிவரி துவங்கியது! இனி ஊரெல்லாம் இந்த காரை பார்க்கலாம்!

டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது கார்களை களம் இறக்கியுள்ள நிலையில் அந்த கார்களின் டெலிவரி தற்போது துவங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதிலும் இந்த டெஸ்லா காருக்கு மிகபெபரிய எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில் இந்த காரின் டெலிவரி துவங்கிய நிலையில் இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்

டெஸ்லா நிறுவனம் கடந்த ஜூலை மாதம் மும்பையில் தனது முதல் ஷோரூமை திறந்தது. அப்பொழுது தனது மாடல் ஒய் என்ற காரை முதல் காராக இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்த கார் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு இந்தியாவிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த காருக்கான புக்கிங் அப்பொழுதுதே துவங்கியது.

Tesla Delivery Begins

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் இந்நிறுவனம் டெல்லியிலும் தனது ஷோரூமை திறந்தது. தொடர்ந்து புக்கிங்கை பெற்று வந்தது. ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு பெரிய புக்கிங் வரவில்லை. இந்த கார்கள் முழுமையாக இறக்குமதி செய்யப்பட்ட கார்கள் என்பதால் அதிக விலைக்கு விற்பனைக்கு வந்துள்ளது. இதனால் புக்கிங் குறைவாக தான் நடந்துள்ளது.

இந்நிலையில் இந்த காரை புக் செய்தவர்களுக்கு தற்போது டெஸ்லா நிறுவனம் காரை டெலிவரி செய்யும் பணியை துவங்கியுள்ளது. முதலில் பதிவு செய்தவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இந்த காருக்கான டெலிவரியை செய்து வருகிறது. படிப்படியாக இந்திய சாலைகளில் டெஸ்லா கார்கள் இயங்குவதை நம்மால் பார்க்க முடியும்.

Tesla Delivery Begins

டெஸ்லா நிறுவனம் தனது மாடல் ஒய் காரை மட்டுமே இந்தியாவில் விற்பனை செய்து வரும் நிலையில் 2 விதமான வேரியன்ட்களில்இந்த கார் விற்பனைக்கு கிடைக்கிறது. அதன்படி ரியர் வீல் டிரைவ், லாங்ரேஞ்ச் ரியர் வீல் டிரைவ் ஆகிய வேரியன்ட்களில் கிடைக்கிறது. இதில் ஸ்டாண்ட்ர்டு வேரியன்ட் 500 கி.மீ ரேஞ்சையும், லாங் ரே்ஞ்ச் வேரியன்ட் 622 கி.மீ ரேஞ்சையும் வழங்குகிறது.

இந்த கார் ரூ59.89 லட்சம் என்ற ஆரம்ப விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. டெஸ்லா வாகனத்தை வாங்கும் ஒவ்வொரு வாடிக்கையளர்களுக்கும் சுவரில் மாட்டக்கூடிய சார்ஜை வழங்குகிறது. இதை வீட்டிலோ அல்லது வேலை பார்க்கும் இடத்திலோ மாட்டிக்கொள்ள முடியும். இதில் வாகனத்தை சார்ஜ் செய்துகொள்ள முடியும்.

Tesla Delivery Begins

இது மட்டுமல்லாமல் டில்லி மற்றம் மும்பை ஆகிய பகுதிகளில் சார்ஜிங் ஸ்டேஷன்களையும் டெஸ்லா நிறுவனம் அமைத்து வருகிறது. இங்கு ஏசி மற்றும் டிசி சார்ஜர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதியில் கார் வாங்குபவர்களுக்கு தஙற்கள் காரை விரைவாக சார்ஜ் ஏற்றிக்கொள்ள வசதியாக இருக்கும். டெஸ்லா நிறுவனம் படிப்படியாக இதை மற்ற நகரங்களுக்கும் விரிவுப்படுத்தும், சென்னை, பெங்களூரு, போன்ற நகரங்களிலும் இந்நிறுவனம் ஷோரூமை திறக்கும் என எதிர்பார்க்கலாம்.

டெஸ்லா நிறுவனம் முழுமையாக கட்டமைக்கப்பட்ட காரை தான் இந்தியாவில் இறக்குமதி செய்வதால் அதன் விலை அதிகமாக உள்ளது. ஒருவேளை இந்தியாவில் அந்நிறுவனம் ஆலை அமைத்தால் அங்கிருந்து வாகனங்களை தயாரித்த விற்பனைக்கு கொண்டுவந்தால் நிச்சயம் விலை கணிசமாக குறைந்து தற்போது மார்கெட்டில் உள்ள கார் விலைக்கு போட்டியான விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் டெஸ்லா கார் வரும்போது அதிகம் பயந்தனர். ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு புக்கிங் இல்லாதது அவர்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் கார்கள் சாலைக்கு வந்த பிறகு புக்கிங் மேலும் அதிகமாக வாய்ப்புள்ளது. ஆனால் போட்டியாக கார்கள் விற்பனையாக வேண்டும் என்றால் விலை குறைய வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, September 30, 2025, 8:55 [IST]
English summary
Tesla delivery begins india model y details
மேலும்... #tesla #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X