ஏப்ரல் மாதம் இந்தியாவில் விற்பனையை துவங்கும் டெஸ்லா? ஷோரூம்க்கு கூட இடம் பாத்தாச்சு!
அமெரிக்க எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளரான டெஸ்லா நிறுவனம் இந்த ஆண்டு இந்திய சந்தைக்குள் நுழையத் திட்டமிட்டு வருகிறது.நமக்கு கிடைத்த தகவலின்படி, ஏப்ரல் மாதம் முதல் டெஸ்லா நிறுவனம் இறக்குமதி செய்யப்பட்ட எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்யத் தொடங்கும் என எதிர்பார்க்கலாம். டெஸ்லாவின் பெர்லின் தொழிற்சாலையில் இருந்து இந்த வாகனங்கள் இறக்குமதி செய்யப்படும். அவை சுமார் USD 25,000, தோராயமாக ரூ .21 லட்சம் விலையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் அதன் ஷோரூம்களுக்கான சாத்தியமான இடங்களை நிறுவனம் தேடி வருகிறது. மும்பையில் உள்ள பந்திரா குர்லா காம்பிளக்ஸ் (BKC) மற்றும் ஏரோசிட்டி ஆகிய இடங்களில் விற்பனை ஷோரும்களை அமைக்க திட்டமிடப்பட்டு வருவதாக தெரிகிறது. முன்னதாக, டெஸ்லா அதன் ஷோரூம்களை அமைக்க புதுடெல்லி மற்றும் மும்பை ஆகிய நகரங்களை தேர்ந்தெடுத்துள்ளது தெளிவாக தெரிகிறது.

டெஸ்லா இந்தியாவில் 13 நடுத்தர நிலை பதவிகளுக்கான வேலைவாய்ப்புகளையும் வெளியிட்டுள்ளது. ஸ்டோர் மேனேஜர்கள், கஸ்டமர் ரிலேஷன் மேலாளர்கள், வணிக நடவடிக்கைகள் பகுப்பாய்வாளர்கள் மற்றும் வாடிக்கையாளர் ஆதரவு நிபுணர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு ஆட்களை தேடி வருகின்றனர். இந்த பதவிகள் 'மும்பை புறநகர்' பகுதிக்கு என்று இந்த வேலைவாய்ப்பு அறிவிப்புகள் குறிப்பிடுகின்றன.
எலான் மஸ்க் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் மோடியின் அமெரிக்க பயணத்தின் போது நடத்திய சமீபத்திய சந்திப்பைத் தொடர்ந்து இந்த பணியாளர் நியமனம் நடைபெறுகிறது. டெஸ்லா விரைவில் இந்திய சந்தைக்குள் நுழையும் திட்டங்கள் குறித்து இந்த சந்திப்பு யுகங்களைத் ஏற்படுத்தியது. தற்போது அந்த யூகங்கள் எல்லாம் பலித்துள்ளன.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், "மிக அதிகமான டெஸ்லா நிறுவன பணிகள்" காரணமாக மஸ்க் இந்தியா பயணத்தை ஒத்திவைத்தார். இந்தியாவில் டெஸ்லா கார்களை விற்பனை செய்வதற்கான திட்டங்களை அறிவிப்பதற்கான வாய்ப்பாக இந்த பயணம் எதிர்பார்க்கப்பட்டது. லோக்கல் உற்பத்தி பிரிவுகளில் குறைந்தது USD 500 மில்லியன் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு இறக்குமதி வரி சலுகைகளை வழங்கும் புதிய எலெக்ட்ரிக் வாகன கொள்கையை இந்திய அரசு அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து இந்த தாமதம் ஏற்பட்டது.
இந்தியாவில் டெஸ்லாவின் ஆர்வம் அதன் இறக்குமதி வரிகள் குறித்த முந்தைய நிலைப்பாட்டுடன் ஒத்துப்போகிறது. 2022 இல், டெஸ்லா இந்தியாவில் முதலில் விற்பனை செய்து சேவை செய்ய முடியும் என்றால் மட்டுமே டெஸ்லா இந்தியாவில் வாகனங்களை உற்பத்தி செய்யும் என்று மஸ்க் கூறினார். இந்தியாவின் உயர் இறக்குமதி வரிகள் ஒரு குறிப்பிடத்தக்க தடையாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போது, இந்தியாவிற்குள் இறக்குமதி செய்யப்படும் முழுமையாக கட்டப்பட்ட கார்கள் (CBUs) இன்ஜின் அளவு மற்றும் காப்பீடு மற்றும் சரக்கு மதிப்பு போன்ற காரணிகளின் அடிப்படையில் 70% முதல் 100% வரை சுங்க வரி வதிக்கப்படுகிறது. 2021 ஆகஸ்ட் மாதத்தில், டெஸ்லா இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை முதலில் வெற்றிகரமாக விற்பனை செய்தால் இந்தியாவில் ஒரு உற்பத்தி பிரிவை நிறுவ திட்டிமிட்டு இருப்பதாக மஸ்க் தெரிவித்தார்.
இந்தியாவின் புதிய EV கொள்கையைப் பற்றிய பங்குதாரர்கள் கூட்டத்தில் டெஸ்லாவின் பிரதிநிதித்துவ ஆலோசகர், மாரூதி சுசுகி, ஹூண்டாய், டாடா, மஹிந்திரா, கியா, ஸ்கோடா ஆட்டோ வோக்ஸ்வாகன் இந்தியா, ரெனால்ட், மெர்சிடிஸ்-பென்ஸ், BMW, ஆடி மற்றும் வியட்நாமின் வின்ஃபாஸ்ட் போன்ற பிற முக்கிய உற்பத்தியாளர்களின் பிரதிநிதிகளுடன் இணைந்து கலந்து கொண்டார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய சந்தைக்குள் டெஸ்லா நுழைவது நாட்டின் மோட்டார் வாகனத் துறையில் ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சியை குறிக்கும். இந்தியாவிற்குள் அந்நிறவனம் நுழைவதற்கான திட்டங்கள் நடைபெற்று வருவதால் மற்றும் ஷோரூம் அமைப்பதற்கான இடங்கள் கண்டறியப்பட்டுவருவதால், இந்நிறுவனம் விரைவில் இந்தியாவில் அதன் அடையாளத்தை ஏற்படுத்தத் தயாராக இருப்பதாகத் தெரிகிறது.


Click it and Unblock the Notifications









