தமிழகத்திற்கு வரும்னு நினைச்சிட்டு இருந்தோம்! ஷோரூம் திறப்பு விழாவில் முதல்வர் வச்ச ஆப்பு !
டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது முதல் ஷோரூமை இந்தியாவில் திறந்துள்ளது. இந்த ஷோரூமை மகாராஷ்டிரா மாநில முதல்வர் ஃபட்னாவீஸ் திறந்து வைத்தார். இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்த ஷோரூமில் ஏகப்பட்ட புதிய விஷயங்கள் உள்ளன. இப்படியாக இந்தியாவில் உள்ள டெஸ்லா ஷோரூம் உள்ளே அப்படி என்ன இருக்கிறது? விரிவாக காணலாம் வாருங்கள்.
உலகின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமாக டெஸ்லா நிறுவனம் தான் இருக்கிறது. இந்நிறுவனம் இந்தியாவில் முதன் முறையாக இன்று தனது ஷோரூமை மும்பையில் திறந்துள்ளது. மும்பையில் உள்ள பந்த்ரா குர்லா காம்பிளக்ஸ் என்ற இடத்தில் தான் இந்த ஷோரூம் திறக்கப்பட்டுள்ளது. மும்பையை தவிர்த்து டில்லியிலும் புதிய ஷோரூமை திறக்க டெஸ்லா நிறுவனம் முடிவு செய்துள்ளது.

மும்பையில் திறக்கப்பட்டுள்ள இந்த ஷோரூம் சுமார் 400 சதுரடி இடம் கொண்டதாக இருக்கிறது. இந்த ஷோரூமிற்காக டெஸ்லா நிறுவனம் மாதம் ரூ35 லட்சம் வாடகையை வழங்கி வருகிறது. இந்த ஷோரூம் வெளிப்புறம் டெஸ்லா நிறுவனம் தனது லோகோவை வைத்துள்ளது. பெயர் பலகையை இந்தியில் வைத்துள்ளது. டெஸ்லா நிறுவனம் தனது முதல் காராக மாடல் ஒய் காரை இந்திய மார்கெட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த காரை ரூ60 லட்சம் என்ற ஆன்ரோடு விலையில் இந்திய மார்கெட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார்களை டெஸ்லா நிறுவனம் இறக்குமதி செய்ய துவங்கிவிட்டது,. முதலில் முழுமையாக கட்டமைக்கப்பட்ட காரை இறக்குமதி செய்து விற்பனை செய்கிறது. முதற்கட்டமாக இந்த கார்களுக்கு விலையை பொருத்து 70-100 சதவீதம் வரை இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது.

இந்தியாவில் டெஸ்லா நிறுவனம் ஆலை அமைக்க முடிவு செய்து அரசுடன் ஒப்பந்தம் செய்தால் குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் குறைந்த இறக்குமதி வரியில் வாகனத்தை இறக்குமதி செய்து குறைவான விலையில் விற்பனைக்கு கொண்டு வர முடியும். இதை அடுத்தகட்ட முயற்சியாக டெஸ்லா எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் டெஸ்லாவிடமிருந்து இதுவரை அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வெளியாகவில்லை.
இதற்கிடையில் இன்று டெஸ்லா ஷோரூமை துவக்கி வைத்த முதல்வர் ஃபட்னாவீஸ் "டெஸ்லா நிறுவனம் எதிர்காலத்தில் தனது எக்கோ சிஸ்டத்தை மகாராஷ்டிரா மாநிலத்திலேயே துவங்க வேண்டும்" என சூசகமாக பேசினார். இந்நிறுவனம் ஆலை அமைத்தால் எங்கு அமைக்கும் என்ற பேச்சு நீண்ட நாட்களாக பேசப்பட்டு வரும் நிலையில் தற்போது இவர் பேசியுள்ளது டெஸ்லா நிறுவனம் ஆலை அமைக்க மகாராஷ்டிரா மாநிலத்தை தேர்வு செய்துவிட்டதோ என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது.

டெஸ்லா நிறுவனம் தமிழகத்தையும் ஆலை அமைக்க ஏற்ற இடமாக பார்த்தது. தமிழகத்தில் ஆலை அமைத்தால் தெற்காசிய நாடுகளுக்கு வாகனங்களை ஏற்றுமதி செய்ய வசதியாக இருக்கும் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் ஆலை அமைத்தால் என்ன யுக்தியில் அந்த ஆலையை நடத்தும் என்பது தெரியவில்லை. அந்த யுக்தியை பொருத்தே இடத்தை தேர்வு செய்யும் என எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மும்பையில் டெஸ்லா ஷோரூம் துவங்கப்பட்ட பிறகு பலர் இது குறித்து ஆர்வமாக இருந்தனர் முதல் வாரம் விஐபிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. இரண்டாவது வாரம் முதல் பொதுமக்கள் இந்த ஷோரூமிற்கு விசிட் செய்யலாம். நிச்சயம் இந்த ஷோரூமை இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன விற்பனையில் புரட்சியை ஏற்படுத்தும் ஆரம்ப புள்ளியாக கருதலாம்.


Click it and Unblock the Notifications









