டெஸ்லா செய்யும் ரகசிய வேலை! பறக்கும் காரை தயாரிக்கிறாங்களோ?

டெஸ்லா நிறுவனம் பறக்கும் காரை தயாரிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சமீபத்தில் ஊடகத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில்இது குறித்து சூசகமாக பதிலளித்துள்ளார். இதனால் உலகம் முழுவதும் உள்ள ஆட்டோமொபைல் துறை ஆட்டம் கண்டுள்ளது என்றே சொல்ல வேண்டும். டெஸ்லா நிறுவனம் தானியங்கி காரை சாத்தியப்படுத்தியது பறக்கும் காரையும் சாத்தியப்படுத்தினால் நிச்சயம் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்.

டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ எலான் மஸ்க் சமீபத்தில் பிரபலமான ஜோரோகன் என்பவரது பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்பொழுது ஜோரோஹன் என்பவர் டெஸ்லா நிறுவனத்தின் ரோடுஸ்டர் கார் குறித்த கேள்வியை எழுப்பினார். டெஸ்லா நிறுவனம் கடந்த 2017ம் ஆண்டு ரோஸ்டர் கார் ஒன்றை உருவாகப்போவதாகவும், இது 2020ம் ஆண்டு விற்பனைக்கு வரும் எனவும் தெரிவித்திருந்தது. அப்பொழுது இந்த காருக்கான புக்கிங்கையும் துவங்கியது.

Tesla Flying Car

ஆனால் 2025 ஆன பிறகும் இந்த கார் விற்பனைக்கு வரவில்லை. இந்நிலையில் ஒப்பன் ஏஐ நிறுவனத்தின் தலைவர் சாம் ஆல்ட்மேன் என்பவர் கடந்த 2018ம் ஆண்டு இந்த காருக்காக புக் செய்திருந்தார். அதற்காக 50,000 அமெரிக்க டாலர் பணத்தையும் வழங்கியிருந்தார்.இவர் கடந்த 2018ம் ஆண்டு பணம் செலுத்தியுள்ளார். கார் வருவருவதாக கூறப்பட்டு 5 ஆண்களுக்கு பின்னும் கார் வராததால் அவர் தனது புக்கிங்கை கேன்சல் செய்து தான் செலுத்திய பணத்தை திரும்ப கேட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த எலான் மஸ்க் அந்நிறுவனம் இந்த தயாரிப்பின் புரோட்டோ டைப்பை காட்சிப்படுத்த தயாராகி வருவதாகவும், இது காட்சிப்படுத்தப்படும் தருணம் மறக்க முடியாததாக இருக்கும் எனவும் தெரிவித்தார். மேலும் இந்த தொழிற்நுட்பம் கிரேஸியாக இருக்கும் எனவும், ஹாலிவுட் ஜேம்ஸ்பாண்ட் படங்களில் வருவதுபோல கற்பனையான கார்களை தாண்டிய தொழிற்நுட்பங்களை கொண்டிருக்கும் எனவுனும் தெரிவித்தார்.

Tesla Flying Car

இவர் இப்படி பேசியது பல்வேறு விதமான விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. பறக்கும் காரைடெஸ்லா நிறுவனம் தயாரிக்கப்போகிறதா என குழப்பத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.VTOL என்ற தொழிற்நுட்பத்தில் காரை தயாரிக்க ஏகப்பட்ட நிறுவனங்கள் முயற்சிக்கிறது. இது போல டெஸ்லாவும் முயற்சிக்கிறதா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

ரோடுஸ்டர் என்ற பெயரில் காரை உருவாக்கி அதை ரோட்டில் செல்ல விடாமல் பறக்க விடும் திட்டத்தை டெஸ்லா வைத்திருப்பதாகவும் சிலர் கூறகிறது. இந்த பறக்கும் கார்கள் முயற்சி ஒன்றும் புதிதல்ல இது 1950களில் இருந்தே முயற்சி செய்யப்படுகிறது. ஆனால் இதில் வெற்றிகரமான தயாரிப்பை யாரும் எட்டி பிடிக்க முடியவில்லை.

Tesla Flying Car

பறக்கும் கார் என்றால் கார் ஓட்டுவது போல இருக்காது. அதற்கு விமானம் ஓட்டும் திறன் இருக்க வேண்டும், இதற்கான கட்டுப்படுகள், கட்டுமான வசதிகள் எல்லாம் தேவை. இதை இயக்குவதற்கான உரிமமம் வழங்குவது குறித்து எந்த நாட்டிலும் பெரிய அளவில் சட்டங்கள் இல்லை. இதனால் நடைமுறையில் இந்த காரை கொண்டு வர பல சிக்கல்களை ஒரு நிறுவனம் சந்திக்க வேண்டும். டெஸ்லா நிறுவனம் இப்படியாக சாத்தியமில்லாத விஷயங்களை இதற்கு முன்னர் சாத்தியப்படுத்தியுள்ளது. இதனால் இதிலும் களம் இறங்க வாய்ப்புள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டெஸ்லா ரோடுஸ்டர் கார் 100 கி.மீ வேகத்தை வெறும் 2 நொடியில் பிக்கப் செய்யும் 600 கி.மீ ரேஞ்ச் தரும் என்று எல்லாம் ஆரம்பத்தில் சொல்லப்பட்டது. இதனால் இந்த காரில் பறக்கும் தொழிற்நுட்பத்தை சேர்க்கும் என சிலர் எதிர்பார்க்கிறார்கள். இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் இல்லை. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Tuesday, November 4, 2025, 8:50 [IST]
English summary
Tesla flying car spacex collaboration confirmed by elon musk
மேலும்... #tesla
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X