ஒளிவு மறைவே கிடையாது! டெஸ்லா கார் இந்தியாவிற்கு சீக்கிரம் வந்துடும் போலயே!
டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது காலடி தடத்தை எடுத்து வைக்க தயாராகி வரும் நிலையில் தற்போது இந்தியாவில் இந்த நிறுவனத்தின் கார்கள் ஆங்காங்கே காணப்படுகிறது. இப்படியாக கர்நாடக மாநிலத்தில் தற்காலிக பதிவெண் உடன் சில டெஸ்லா கார்கள் பார்க்கிங்கில் நிற்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியா ஆட்டோமொபைல் மார்கெட்டில் அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு அடுத்த 3வது இடத்தில் இருப்பதால் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது காலடி தடத்தை எடுத்து வைக்க விரும்புகிறது. அதற்காக தற்போது இந்திய அரச வாகன இறக்குமதி கொள்கையிலும் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு ஆலை அமைக்கும் திட்டத்தில் குறைந்த இறக்குமதி வரியில் வாகனங்களை இறுக்குமதி செய்து விற்பனை செய்ய முடியும்.

இந்நிலையில் இந்தியாவிற்குள் டெஸ்லா நிறுவனம் வாகனங்களை இறக்குமதி செய்து விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. புதிதாக ஆலை அமைக்க இடத்தையும் தேடி வருகிறது. மாடல் 3 மற்றும் மாடல் ஒய் ஆகிய கார்களை இந்தியாவில் முதலில் இறக்குமதி செய்து விற்பனை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக அந்நிறுவனம் மும்பையில் முதல் ஷோரூம் அமைக்க இடம் பார்த்துள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் இந்தியாவில் பல பகுதிகளில் டெஸ்லா கார்களை காண முடிகிறது. இப்படியாக சமீபத்தில் ஒரு பார்க்கிங் பகுதியில் 4 டெஸ்லா கார்கள் நிற்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. இந்த கார் டெஸ்லா மாடல் 3 மற்றும் மாடல் ஒய் ரக கார்கள் ஆகும். இந்த கார்களை தான் அந்நிறுவனம் இந்தியாவிற்குள் விற்பனை செய்ய காப்புரிமைக்கான விண்ணப்பம் செய்துள்ளது.

இந்தியாவில் டெஸ்லாவின் மாடல் 3 மற்றும் மாடல் ஒய் ஆகிய கார்கள் வந்தாலும் மாடல் ஒய் காருக்கு தான் மக்களுக்கு அதிகம் விருப்பம் இருக்கும் என எதிர்பார்க்கலாம். இந்த கார் ஒரு எஸ்யூவி ரக காராக இருக்கிறது. இந்த காரின் பாடி ஸ்டைலை தான் இந்திய மக்கள்அ அதிகம் விரும்புகிறார்கள். முக்கியமாக அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட கார்களுக்கு நல்ல வரவேற்ப்பு இருக்கிறது.
மாடல் ஒய் காரை பொருத்தவரை தற்போது சர்வதேச மார்கெட்டில் உள்ளதை போல 526 கி.மீ மைலேஜ் கிடைக்கிறது. அதிகபட்சமாக 200 கி.மீ வேகத்தில் இந்த கார் சீறி பாயும் திறன் கொண்டதாக இருக்கிறது. இந்த கார் 0-96 கி.மீ வேகத்தை வெறும் 4.6 நொடியில் பிக்கப் செய்துவிடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காரில் ஏகப்பட்ட அம்சங்கள் கூட இருக்கிறது.

மாடல் ஒய் காரை பெருத்தவரை பவர் அட்ஜெஸ்டபிள் சீட்டுகள், ஹீட்டிங் மற்றும் வென்டிலேஷன் ஆப்ஷன் உடன் வருகிறது. இது பாக 15 ஸ்பீக்கர் மற்றும் 1 சப் வூஃபர் உடன் சவுண்ட் சிஸ்டம், 8 கேமராக்கள், ஆட்டோமெட்டிக் எமர்ஜென்ஸி பிரேக்கிங், முன்பக்க மோதல் வார்னிங், பிளைன்ட் ஸ்பாட் மோதல் வார்னிங், லேன் டிப்பார்ச்சர் அவாய்டென்ஸ் உள்ளிட்ட அம்சங்கள் இதில் உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டெஸ்லா நிறுவனத்தின் இந்த கார்கள் சோதனைக்காக கூட இந்தியா வந்திருக்கலாம். இந்த கார் எந்த மறைவும் இல்லாமல் இந்தியாவில் சோதனை செய்யப்படுகிறது. சர்வதேச மார்கெட்டில் சோதனை செய்யப்பட்ட கார் என்பதால் மறைவுகள் எதுவும் இன்றி சோதனை செய்யப்படுகிறது. இதே கார் தான் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









