இன்னும் 4 நாள் தான்! எலான் மஸ்கே இந்தியா வரபோறாரா? மும்பையில் டெஸ்லா ஷோரூம் ரெடி!

டெஸ்லா நிறுவனம் மும்பையில் தனது முதல் ஷோரூமை செட்டப் செய்துள்ள நிலையில் வரும் 15ம் தேதி இந்த ஷோரூம் திறந்து வைக்கப்படும் என அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இதில் அந்நிறுவனத்தின் சிஇஓ எலான் மஸ்க் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் பங்கேற்பர் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

டெஸ்லா நிறுவனம் உலகின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனம் தானியங்கியாக செயல்படும் வாகனங்களை தயாரித்து, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளில் சிறப்பாக விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் இந்தியா ஆட்டோமொபைல் உலகின் மிகப்பெரிய சந்தையாக மாறியுள்ள நிலையில் இந்தியாவிலும் இந்நிறுவனம் காலடி தடத்தை எடுத்து வைக்க முயற்சி செய்து வருகிறது.

Tesla India Showroom

Image used only for representational purposes

இந்நிலையில் இந்தியாவில் குறைந்த விலையில் வாகனங்களை விற்பனை செய்ய வேண்டும் என்றால் இந்தியாவில் ஆலை அமைத்து வாகனங்களை அந்நிறுவனம் தயாரிக்க வேண்டும். அதுவரை காலஅவகாசத்துடன் குறைந்த இறக்குமதி வரியில் வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படும் என சட்டம் கொண்டு வரப்பட்ட நிலையில் இதற்கு டெஸ்லா ஒப்பு கொண்டதாக தெரிகிறது.

இதனால் மும்பையில் உள்ள பந்தரா குர்லா காம்பிளக்ஸ் பகுதியில் தனது முதல் ஷோரூமை துவங்க முடிவு செய்துள்ளது. இதற்கான ஏற்பாடுகள் எல்லாம் நடந்து வரும் 15ம் தேதி இந்த ஷோரூமை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திறப்பு விழாவில் கலந்து கொள்ளும் விருந்தினர்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகிவில்லை. நமக்கு கிடைத்த தகவலின்படி டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் இதில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tesla India Showroom

Image used only for representational purposes

மும்பையில் சுமார் 4000 சதுரடி இடத்தில் இந்த ஷோரூம் திறக்கப்படவுள்ளது. இங்கு அந்நிறுவனத்தின் தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்படுகிறது. இந்த இத்தில் காரில் உள்ள தொழிற்நுட்பங்களை அனுபவித்து பார்க்க வசதிகள் வழங்கப்பட்டுள்ளது. இது போக நேரடி விற்பனை நிலையமாகவும் இந்த ஷோரூம் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விற்பனையை லோக்கல் பார்ட்னர்கள் மூலம் நடத்த டெஸ்லா முடிவு செய்துள்ளது.

டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது முதல் காராக மாடல் ஒய் காரை இறக்குமதி செய்து விற்பனைக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளது. ஜெர்மனி தலைநகர் பெர்லின் அந்நிறுனத்திற்கு சொந்தமான ஆலையில் தயாரிக்கப்படும் கார்களை இந்தியாவிற்குள் இறக்குமதி செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த கார் ரூ70 லட்சம் என்ற பிரிமியம் விலையில் முதற்கட்டமாக விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tesla India Showroom

Image used only for representational purposes

இதை தொடர்ந்து மாடல் 3 காரையும் இந்நிறுவனம் இந்தியாவிற்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இந்த இரண்டு கார்களும் தற்போது இந்தியாவில் சோதனையில் இருப்பதை நம்மால் இதற்க முன்னர் காணமுடிந்தது. பிரிமியமான தொழிற்நுட்பங்கள் நிறைந்த காராக இந்த கார் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தடுத்து மற்ற பல கார்கள் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் மிகப்பெரிய அளவில் வளர்ச்சியை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் முதல் அடியாக வரும் 15ம் தேதி முதல் ஷோரூம் துவங்கவுள்ள நிலையில் இது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Friday, July 11, 2025, 13:20 [IST]
English summary
Tesla india showroom mumbai opening elon musk visit update
மேலும்... #tesla #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X