எழுதி வெச்சிக்கோங்க... டெஸ்லாவில் இந்த கார் மட்டும் வந்துச்சினா இந்தியாவில் பெருசா பந்தயம் அடிக்கும்!!

டெஸ்லா (Tesla) நிறுவனத்தின் முதல் கார் ஷோரூம் மும்பையில் திறக்கப்பட்டதுதான் தற்போது நாடு முழுக்க பேச்சாக உள்ளது. இத்தனைக்கும் டெஸ்லாவில் இருந்து தற்போதைக்கு 'மாடல் ஒய்' (Model Y) என்கிற ஒரு எலக்ட்ரிக் கார் (Electric Car) மட்டுமே எதிர்பார்த்ததை காட்டிலும் அதிக விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதே மாடல் ஒய் எலக்ட்ரிக் கார் அமெரிக்காவில் எத்தகைய விலையில் விற்பனை செய்யப்படுகிறது... ஆனால், இந்தியாவில் இந்த காரின் விலை எவ்வளவு அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது... இதற்கான காரணம் என்ன... என்பதை பற்றி எல்லாம் ஏற்கனவே ஒரு தொகுப்பில் விரிவாக பார்த்து இருந்தோம்.

tesla electric car

டெஸ்லா நிறுவனம் உலகளவில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யும் எலக்ட்ரிக் கார்களுள் மாடல் ஒய் ஒன்றாகும். ஆனால், இதுதான் விலை குறைவான டெஸ்லா எலக்ட்ரிக் காரா என்று பார்த்தால், இல்லை என்பதுதான் பதில். இதனை காட்டிலும் குறைந்த விலையில் 'மாடல் 3' எலக்ட்ரிக் காரை டெஸ்லா பல உலக நாடுகளில் விற்பனை செய்கிறது.

அப்படியென்றால், அதனை விற்பனைக்கு கொண்டுவந்து இருக்கலாமா? என நீங்கள் கேட்பது புரிகிறது. இந்தியாவில் டெஸ்லா நிறுவனம் அதன் எலக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்யும் திட்டத்தில் தற்போதைக்கு இல்லை. மொத்தமாக வெளிநாட்டில் உருவாக்கப்பட்டு, இந்தியா கொண்டுவந்து விற்பனை செய்யவே திட்டமிட்டு உள்ளது. இதனால்தான், அமெரிக்காவில் உள்ளதை காட்டிலும் கிட்டத்தட்ட டபுள் மடங்கு அதிக விலையில் மாடல் ஒய் எலக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

tesla electric car

இதனை தவிர்க்க மத்திய அரசாங்கத்திடம் இருந்து சிறப்பு சலுகையை எதிர்பார்த்து கொண்டிருக்கும் டெஸ்லா நிறுவனம், ஒருவேளை அது கிடைத்தால் அதன்பின் மாடல் 3 எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்யலாம் என்கிற திட்டத்தில் உள்ளது போல. இன்னொரு விஷயம் தெரியுமா? மாடல் 3 எலக்ட்ரிக் காரை காட்டிலும் குறைந்த விலையில் மாடல் 2 என்கிற எலக்ட்ரிக் காரை டெஸ்லா உருவாக்கி வருவதாகவும் கடந்த பல மாதங்களாக செய்தி ஒன்று வெளிவந்து கொண்டிருக்கிறது.

எந்த அளவிற்கு விலை குறைவானது என்றால், வெறும் 9,735 அமெரிக்க டாலர்களில் மாடல் 2 எலக்ட்ரிக் காரை டெஸ்லா கொண்டுவர உள்ளதாம். தற்சமயம் இந்திய ரூபாயில் இதன் மதிப்பு ரூ.8.37 லட்சம் ஆகும். இந்த குறித்த தகவல்கள் கடந்த 2024ஆம் ஆண்டின் இறுதியில் இருந்தே வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது இந்தியாவில் டெஸ்லா களமிறங்கி உள்ளதால் மாடல் 2 காரை உருவாக்கும் பணிகளில் இதன்பின் டெஸ்லா தீவிரமாக ஈடுப்படும் என எதிர்பார்க்கிறோம்.

tesla model 2 affordable electric car

டெஸ்லா மாடல் 3 எலக்ட்ரிக் காரை காட்டிலும் அளவில் சிறியதாக உருவாக்கப்பட்டு வரும் மாடல் 2 எலக்ட்ரிக் கார் சிலமுறை அமெரிக்காவில் பொது வெளியில் சோதனை ஓட்டத்தின்போது காட்சி தந்துள்ளது. ஒருமுறை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 250கிமீ-இல் இருந்து 300கிமீ வரையில் இயங்கக்கூடிய வகையில் திறன் கொண்டதாக இருக்கும் என கருதப்படும் மாடல் 2 எலக்ட்ரிக் காரில் 53kWh மற்றும் 75kWh பேட்டரி ஆப்ஷன்கள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரூ.60 லட்சத்தில் மாடல் ஒய் எலக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் நிலையில் வெறும் ரூ.8.37 லட்சத்தில் டெஸ்லா எலக்ட்ரிக் கார் என்றால் அது சூப்பரான திட்டமாகவே இருக்கும். நிச்சயமாக இந்த விலையில் இந்தியாவில் மாடல் 2 எலக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்படாது என்றாலும், இதனை காட்டிலும் சில லட்ச ரூபாய்கள் அதிக விலையில் வந்தாலும் இந்திய மக்களை மாடல் 2 எலக்ட்ரிக் கார் கவரும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, July 16, 2025, 10:29 [IST]
English summary
Tesla model 2 affordable electric car which is very suitable for indian market
மேலும்... #tesla #electric car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X