இதுலாம் ஷங்கர் படத்துல கூட பார்த்திருக்க மாட்டீங்க! ஆட்டோமெட்டிக்காக தன்னை தானே டெலிவரி செய்த கார்!
உலகம் முழுவதும் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் ஷோரூம் வைத்து அங்கு வாடிக்கையாளர்களை வர வைத்து அவர்களை கார் வாங்க வைக்க முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் அமெரிக்காவில் ஆன்லைனில் புக் செய்தவருக்கு ஆளே இல்லாமல் தானியங்கியாக காரை டெஸ்லா நிறுவனம் டெலிவரி செய்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
டெஸ்லா நிறுவனம் அமெரிக்காவில் தானியங்கி காரை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்த காரில் பயணிகள் ஏறி அமர்ந்தால் போதும், கார் தானாக செல்லும் டிரைவர் எந்த விதமான இன்புட்டும் கொடுக்காமல் கார் தானியங்கியாக பயணிக்கும் திறன் கொண்டதாக உள்ளது. இந்த கார்கள் அமெரிக்காவில் பிரபலமாக உள்ளன.

இந்தியாவில் ஒரு காரை விற்பனை செய்ய வேண்டும் என்றால் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் ஷோரூமை அமைக்க வேண்டும். அங்கு ஊழியர்களை நியமித்து விளம்பரம் செய்து அங்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு கார் குறித்த விபரங்களை சொல்லி மார்கெட்டிங் செய்து காரை விற்பனை செய்ய வேண்டும். ஆனால் அமரிக்காவில் டெஸ்லா இந்நிலையை மாற்றி ஆன்லைனிலேயே காரை புக் செய்யலாம் என கொண்டு வந்துவிட்டது. இந்தியாவில் கூட தற்போது பல நிறுவனங்கள் இந்த ஆப்ஷனை பயன்படுத்துகின்றன.
இந்நிலையில் அமெரிக்காவில் டெஸ்லா நிறுவனம் ஒரு படி மேலே சென்று ஆன்லைனில் ஒரு காரை புக் செய்த பிறகு அந்த வாடிக்கையாளருக்கு ஆளே இல்லாமல் கார் தானாக ஓடிச் சென்று தன்னை தானே டெலிவரி செய்த சுவாரஸ்யமான சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. டெஸ்லா நிறுவனம் இந்த சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளது.

டெஸ்லா நிறுவனம் தயாரிக்கும் ஆலையில் இருந்து சுமார் 30 நிமிட பயண தூரத்தில் தான் இந்த காரை புக் செய்தவரின் வீடு இருந்துள்ளது. அவர் அங்கு தான் தனக்கு கார் வேண்டும் என புக் செய்துள்ளார். இந்நிலையில் டெஸ்லா நிறுவனம் அவரது வீட்டை சரியாக மார்க் செய்து எந்த இடத்தில் டெலிவரி செய்ய வேண்டும் என மார்க் செய்தது. பின்னர் கார் தானாக டிரைவர் இல்லாமல் அவரது வீட்டிற்கு சென்றது.
இந்த கார் நெடுஞ்சாலைகளில் வேகமாக பயணம் செய்தும், பல இடைஞ்சல் நிறைந்த சாலைகளில் பயணம் செய்தும், தேவையான இடங்களில் நின்றும் எந்த வித இன்புட்டும் இல்லாமல் கார் தானாக இயங்கி சரியாக கார் புக் செய்வதவர் வீட்டிற்கு உள்ளேயே சென்றது. இந்த வீடியோவை தற்போது டெஸ்லா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

இந்த வீடியோவில் இருப்பது டெஸ்லா மாடல் ஒய் கார் இந்த கார் 44,990 அமெரிக்க டாலர் என்ற விலையில் விற்பனை செய்கின்றரன். இதுவே ஆல்வீல் டிரைவ் லாங் ரேஞ்ச் வாகனம் என்றால் 47,990 டாலர் விலையில் விற்பனையாகிறது. இது ஒரே சார்ஜில் 330 மைல் பயணம் செய்யும் திறன் கொண்டதாக உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எதிர்காலத்தில் வாகன விற்பனை எந்த அளவிற்கு வளர்ச்சி பெறும் என்பதற்கு இது ஒரு சான்றாக உள்ளது. இன்று கார்களை டெலிவரி செய்ய மனிதர்கள் தேவையில்லை என்ற சூழ்நிலை உருவாகி விட்டது. எதிர்காலத்தில் இது இந்தியாவிலும் நடக்கும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









