இனி யாரு வேணாலும் வாங்கலாம்! டெஸ்லா குடுத்த முக்கியமான அப்டேட்!
இந்தியாவில் டெஸ்லா நிறுவனம் தற்போது நுழைந்து தனது வாகனங்களுக்கான புக்கிங்கை துவங்கியுள்ளது. ஏற்கனவே மும்பை மற்றம் டெல்லி ஆகிய மாநிலங்களில் மட்டும் புக்கிங் பெறப்பட்ட நிலையில் தற்போது இந்தியா முழுவதும் தனது புக்கிங்கை விரிவுபடுத்தியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது முதல் ஷோரூமை திறந்துள்ளது. முதல் காராக மாடல் ஒய் என்ற காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காரக்கான புக்கிங் துவங்கியுள்ளது. முதல் வாரம் விஐபிகளுக்கான புக்கிங் முடிந்த நிலையில் பொது மக்கள் தற்போது இ்த கார்களை புக்கிங் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதலில் மும்பை மற்றும் டில்லியில் இருந்து வரும் புக்கிங்களை மட்டுமே அந்நிறுவனம் ஏற்றுக்கொண்டது.

இந்நிலையில் டெஸ்லா இணையதளத்தில் இந்தியா முழுவதும் புக்கிங்கை ஏற்றுக்கொள்ளும் ஆப்ஷன் தற்போது வழங்கப்பட்டுள்ளது. காரை புக்கிங் செய்யும் போது நீங்கள் எந்த மாநிலத்திலிருந்து புக்கிங் செய்கிறீர்கள் என்ற கேள்வி கேட்கப்படுகிறது. அதற்க ஆப்ஷனாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் பட்டியலிடப்பட்டுள்ளது. யூனியன் பிரேதசங்களையம் சேர்த்து மொத்தம் 34 மாநிலங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது.
இருந்தாலும் மும்பை, புனே, டில்லி, குர்கிராம் ஆகிய நகரங்களே டெலிவரிக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீங்கள் மாநிலத்தை தேர்வு செய்த பிறகு காரை ஆன்லைனிலேயே கான்ஃபிகரேஷன் செய்ய வேண்டும். இதற்கான பணத்தையும் செலுத்தினால் உங்கள் வீட்டிற்கே வந்து டெலிவரி செய்யப்படும் மும்பையில் திறக்கப்பட்டுள்ள ஷோரூம் ஒரு அனுபவ மையமாகவே செயல்படும்.

இந்த காரை கஸ்டமைஸ் செய்யும் போது கலர் ஆப்ஷன்களை தேர்வு செய்ய முடியும். மொத்தம் 6 விதமான ஷேடுகளில் இந்த கார் விற்பனைக்கு கிடைக்கிறது. அதன்படி ஸ்டெல்த் கிரே, பியர்ல் ஒயிட் மல்டி கோட், டைமண்ட் பிளாக், கிளேஸியர் ப்ளூ, குவிக் சில்வர், அல்டரா ரெட் ஆகிய கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
இதில் ஸ்டெல்த் கிரே கலர் மட்டுமே ஸ்டாண்டாக கிடைக்கிறது. மற்ற கலர் ஆப்ஷன்களுக்கு அதிக பணம் செலுத்த வேண்டும். முக்கியமாக குவிக்சில்வர் மற்றும் அல்ட்ரா ரெட் ஆகிய கலர்களுக்கு ரூ1.85 லட்சம் செலுத்த வேண்டும். உட்புற கலர் ஆப்ஷன்களை பொருத்தவரை கருப்பு ஸ்டாண்டர்டாக வருகிறது. பிளஸன்ட் ஒயிட் நிறம் ஆப்ஷனாக இரக்கிறது. இதற்கு ரூ95 ஆயிரம் கூடுதலாக செலவிட வேண்டும்.

இந்தியாவில் முழுமையாக தானியங்கியாக செயல்படும் ஆப்ஷனிற்கு ரூ6 லட்சம் கூடுதலாக வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை வாங்கினால் மட்டுமே டெஸ்லா ஆட்டோபைலட் ஆப்ஷனை பயன்பத்த முடியும். இதற்கான அதிகாரப்பூர்வமான அங்கீகாரத்தை விரைவில் இந்திய அரசிடம் அந்நிறுவனம் பெறும் என எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் தற்போது அனைத்து மாநில மக்களுக்கும் டெஸ்லா காரை புக் செய்யும் ஆப்ஷன் கிடைத்துள்ளது. இதனால் இந்தியாவில் அனைவரும் இந்த காரை வாங்க முடியும் சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.இதனால் இந்த காரின் விற்பனை அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications









