கலருக்கு ஏத்த மாதிரி ரேட் மாறும்! டெஸ்லா கார்ல இப்படி ஒரு விஷயம் இருக்குதா?
டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது முதல் காரை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில் அந்த காரில் கலர் ஆப்ஷன்களை தேர்வு செய்யும் போது காரின் விலை அதிகரிக்கும் என தெரியவந்துள்ளது. நீங்கள் தேர்வு செய்யும் கலருக்கு ஏற்ற காரின் கலர் ஆப்ஷன் உடன் இந்த கார் விற்பனைக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
டெஸ்லா நிறுவனம் மும்பையில் தனது முதல் ஷோரூமை திறந்துள்ளது. இந்நிறுவனம் தற்போது மாடல் ஒய் காரை தனது முதல் காராக இந்திய மார்கெட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காரின் விலைய பொருத்தவரை ரூ59.89 லட்சம் மற்றும் ரூ67.89 லட்சம் என்ற விலைகளில் இந்திய மார்கெட்களில் அறிமுகமாகியுள்ளது. இந்த கார் இந்தியாவில் விற்பனைக்க வரும் போது பல்வேறு கலர் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளது.

இப்படியாக கலர் ஆப்ஷன்களை தேர்வு செய்யும் போது காரின் விலை மாறபடுகிறது. இ்நிறுவனம மொத்தம் 6 விதமான கலர் ஆப்ஷன்களில் இந்திய மார்கெட்டில் வாகனத்தை விற்பனைக்காக அறிமுகப்படுத்துகின்றன. ஸ்டெல்லத் கிரே, பியர்ல் ஒயிட் மல்டி கோட், டைமண்ட் பிளாக், கிளேஸியர் ப்ளூ, க்விக் சில்வர் மற்றும் அல்ட்ரா ரெட் ஆகிய கலர் ஆப்ஷன்கள் உள்ளன. இதில் ஸ்டெல்லத் கிரே கலர் தான் ஸ்டாண்டர்ட் கலராக இருக்கிறது.
நீங்கள் பீயர்ல் ஒயிட் மல்டி கோட், டைமண்ட் பிளாக் ஆகிய நிறங்களை தேர்வு செய்தால் நீங்கள் கூடுதலாக ரூ95 ஆயிரம் செலவு செய்யப்படும். இதுவே கிளேஸியர் ப்ளூ நிறத்தை தேர்வு செய்தால் கூடுதலாக ரூ1.25 லட்சமும், க்விக் சில்வர் மற்றும் அல்ட்ரா ரெட் ஆகுிய நிறங்களை தேர்வு செய்தால் கூடுதலாக ரூ1.85 லட்சமும் செலவு செய்ய வேண்டும். உட்புற கலர் வடிவமைப்பை பொரத்தவரை பிளாக் மற்றும் பிளாக் அண்ட் ஒயிட் ஆகிய 2 கலர் ஆப்ஷன்கள் மட்டுமே இருக்கிறது. இதற்காக அந்நிறுவனம் எந்த விதமான கூடுதல் கட்டணங்களையும் பெறுவதில்லை.

இந்த கார் அதிக விலையில் விற்பனைக்கு வருவதற்கு முக்கியமான காரணம் அதன் மீது விதிக்கப்படும் இறக்குதி வரி தான். இந்த கார் இந்தியாவிற்குள் இறக்குமதி செய்ய 70 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. முழுமையாக கட்டமைக்கப்பட்ட எலெக்ட்ரிக் கார்களுக்கு இது தான் விலையாக இருக்கிறது. ரூ38 லட்சம் தான் காரின் விலையாக உள்ளது. மற்றது எல்லாம் வரிகள் தான்.
இந்தியாவில் இந்நிறுவனம் தற்போது வாகனங்களை தயாரிக்க முடிவு செய்தால் குறிப்பிட்ட காலத்திற்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாகனங்களை குறைந்த இறக்குமதி வரியில் கொண்டு வர முடியும். ஆனால் அதற்கு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்ய அந்நிறுவனம் முடிவு செய்ய வேண்டும். டெஸ்லா நிறுவனம் அந்த முடிவை விரைவில் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெஸ்லா ஆலை அமைத்து இந்தியாவிலேயே வாகனங்களை தயாரித்தால் நிச்சயம் வாகனத்தின் விலை குறையும். இது இந்தியாவில் உள்ள மற்ற வாகன தயாரிப்பாளர்களுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும். இந்தியாவில் டெஸ்லா கார்கள் தானியங்கியாக இயங்கும் திறன் இல்லாமல் டிரைவர் இன்புட் உடன் மட்டுமே இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டெஸ்லா நிறவனம் இந்தியாவில் எப்பொழுது வரும் என பலர் காத்திருந்த நிலையில் இந்த கார்களை இந்தியாவில் வாங்க பலர் ஆர்வமாக காத்திருக்கின்றனர். இந்த காரின் விலை கலரை பொருத்து மாறுபடும் என்பது பலருக்கும் தெரியாத விஷயமாக உள்ளது. டெஸ்லா காரை வாங்கும் முடிவில் இருந்தால் நீங்கள் இதை ஒரு முறை செக் செய்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications









