நம்ம இந்தியர்களை பார்த்தால் இளிச்சவாய் மாதிரி தெரியுதா? இதே டெஸ்லா கார் அமெரிக்காவில் எவ்வளவு தெரியுமா?

டெஸ்லா (Tesla) பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக நுழைந்து இருப்பதுதான் தற்போது நாடு முழுக்க பேச்சாக உள்ளது. ஏனெனில், இந்தியாவிற்கு டெஸ்லா வருமா வராதா என்பதே சில மாதங்களுக்கு முன்பு வரையில் மிக பெரிய கேள்வியாக இருந்துவந்த நிலையில், தற்போது ஒருவழியாக இந்தியாவில் முதல் டீலர்ஷிப் ஷோரூம் (Dealership Showroom)-ஐ டெஸ்லா திறந்துள்ளது.

மும்பையின் பந்த்ரா பகுதியில் திறக்கப்பட்டுள்ள டெஸ்லாவின் முதல் ஷோரூமில் தற்போதைக்கு மாடல் ஒய் (Model Y) எலக்ட்ரிக் கார் (Electric Car) மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது. இந்தியாவில் ரியர்-வீல்-டிரைவ் (Rear-wheel-drive - RWD) மற்றும் லாங்-ரேஞ்ச் ரியர்-வீல்-டிரைவ் (Long Range RWD) என 2 விதமான வேரியண்ட்களில் டெஸ்லா மாடல் ஒய் எலக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

tesla model y electric car

அதாவது, இந்த இரு வேரியண்ட்களிலும் காருக்கு இயக்க ஆற்றல் ஆனது பின் சக்கரங்களுக்கு தான் செல்லும். ஆனால், இதில் ஒரு வேரியண்ட்டில் காரின் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிக தொலைவிற்கும், மற்றொரு வேரியண்ட்டில் சற்று குறைவான தொலைவிற்கும் தான் பயணிக்க முடியும் என்கிறது டெஸ்லா நிறுவனம்.

இதில், ரியர்-வீல்-டிரைவ் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.59.89 லட்சமாகவும், லாங்-ரேஞ்ச் ரியர்-வீல்-டிரைவ் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.67.89 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. உலகளவில் பிரபலமான டெஸ்லா எலக்ட்ரிக் கார்களுள் மாடல் ஒய் ஒன்றாகும். அமெரிக்காவில் டெஸ்லா மாடல் ஒய் எலக்ட்ரிக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் 44 ஆயிரத்து 990 அமெரிக்க டாலர்கள் அளவில் உள்ளது.

tesla model y electric car

தற்சமயம், இந்திய ரூபாயில் இதன் மதிப்பு ரூ.38.63 லட்சம் ஆகும். ஆனால், இவ்வளவு தொகை கொடுத்து அமெரிக்காவில் டெஸ்லா மாடல் ஒய் எலக்ட்ரிக் காரை வாங்க தேவையில்லை. ஏனெனில், 'கூட்டாட்சி வரி வரவு' என்கிற பெயரில் 7,500 அமெரிக்க டாலர்கள் வரி சலுகையாக கிடைக்கும். ஆக, டெஸ்லா மாடல் ஒய் காரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை அமெரிக்காவில் 37,490 டாலர்கள் (ரூ.32 லட்சம்) மட்டுமே ஆகும்.

இத்தனைக்கும் இது அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் மாடல் ஒய் காரின் லாங்-ரேஞ்ச் வேரியண்ட்டின் விலை ஆகும். இதன் விலை தான் தற்போது இந்தியாவில் ரூ.67.89 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரூ.59.89 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள குறைந்த விலையிலான மாடல் ஒய் வேரியண்ட் அமெரிக்காவில் விற்பனையிலேயே இல்லை. அதனை இந்தியாவிற்காகவே டெஸ்லா அறிமுகம் செய்துள்ளது.

tesla model y electric car

ஆனால், அமெரிக்காவில் ஆல்-வீல்-டிரைவ் ஆப்ஷனிலும் மாடல் ஒய் எலக்ட்ரிக் கார் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், அது இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவரப்படவில்லை. ஏனெனில், அது அமெரிக்காவிலேயே அதிக விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அப்படியிருக்க, இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டால் அதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.80 லட்சம் என்கிற அளவில் நிர்ணயிக்கப்பட்டு இருக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டெஸ்லா மாடல் ஒய் எலக்ட்ரிக் காரின் விலை ஆனது அமெரிக்காவை காட்டிலும் கிட்டத்தட்ட டபுள் மடங்கு அதிகமாக இந்தியாவில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம், மாடல் ஒய் கார்களை வெளிநாட்டில் இருந்து கொண்டுவந்து இந்தியாவில் விற்பனை செய்வது என்கிற டெஸ்லாவின் திட்டமும், அதற்கு மத்திய அரசாங்கம் விதித்த அதிகப்படியான இறக்குமதி வரியும் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 15, 2025, 18:33 [IST]
English summary
Tesla model y electric car price difference between india and america
மேலும்... #tesla #electric car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X