ரோட்டில் சென்ற ஒருத்தருக்கும் இது என்ன கார்னு தெரியல! ஓஹோ... இதுதான் விஷயமா!!
டெஸ்லா (Tesla), பிரபலமான அமெரிக்க எலக்ட்ரிக் கார் (Electric Car) நிறுவனம் என்பதை நான் கூற வேண்டியது இருக்காது என நினைக்கிறேன். அந்த அளவிற்கு உலகின் பல நாடுகளில் டெஸ்லா கார்கள் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படுகின்றன. அமெரிக்காவுக்கு போட்டியாக இருக்கும் சீனாவில் கூட டெஸ்லா கார்கள் ஒவ்வொரு வருடமும் பல இலட்சக்கணக்கில் விற்பனை செய்யப்படுகின்றன.
ஆனால், நம் இந்திய நாட்டில் நுழைவதற்கு தான் டெஸ்லா நீண்ட காலமாக யோசித்து வந்தது. ஆனால் தற்போது எப்படியோ ஒருவழியாக இந்தியாவில் டெஸ்லா நுழைய போகிறது. ஜூலை 15ஆம் தேதியான இன்று பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் முதல் டெஸ்லா டீலர்ஷிப் ஷோரூம் மும்பையில் திறக்கப்பட உள்ளது.

மும்பையின் பந்த்ரா பகுதியில் திறக்கப்படும் முதல் இந்திய டெஸ்லா கார் ஷோரூமுக்கு டெஸ்லா எலக்ட்ரிக் கார்களை கொண்டுவரும் பணிகள் கூட ஏற்கனவே துவங்கிவிட்டன. குறிப்பாக, மாடல் ஒய் (Model Y) என்கிற விலை குறைவான எலக்ட்ரிக் கார்கள் அதிக எண்ணிக்கையில் இந்தியாவிற்கு கப்பல் வழியாக கொண்டுவரப்பட்டு உள்ளன.
இதனால், மாடல் ஒய் எலக்ட்ரிக் கார் ஆனது இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் முதல் டெஸ்லா எலக்ட்ரிக் காராக இருக்கும் என கூறப்படும் நிலையில், டெஸ்லா மாடல் ஒய் எலக்ட்ரிக் கார் ஒன்று எந்தவொரு மறைப்பும் இல்லாமல் மும்பையின் சாலை ஒன்றில் காட்சி தந்துள்ளது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோக்களும், படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

மும்பை டெஸ்லா ஷோரூமுக்கு மாடல் ஒய் எலக்ட்ரிக் கார்கள் வர துவங்கியுள்ளதாக ஏற்கனவே படங்கள் உடன் நமது செய்தித்தளத்தில் பார்த்து இருந்த நிலையில், தற்போது மற்றொரு மாடல் ஒய் எலக்ட்ரிக் கார் முழுவதும் வெள்ளை நிறத்தில் மும்பையில் காட்சி தந்துள்ளது. இதற்கு முன்பு வெளியாகி இருந்த படங்களில் லாரியில் முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் டெஸ்லா மாடல் ஒய் எலக்ட்ரிக் கார் கொண்டுவரப்பட்டதை பார்த்து இருந்தோம்.
ஆனால், தற்போது வெளியாகி உள்ள படங்களில் வெள்ளை நிறத்தில் காட்சித்தரும் டெஸ்லா மாடல் ஒய் எலக்ட்ரிக் கார் ஒன்று எந்தவொரு மறைப்பும் இல்லாமல், சாலையின் ஓரத்தில் நின்றுள்ளதை காணலாம். இந்த படங்களில் டெஸ்லா மாடல் ஒய் காரின் முன்பக்கத்தில் எல்இடி ஸ்ட்ரிப் (LED Strip) ஒன்று காரின் முழு அகலத்திற்கும் வழங்கப்பட்டு உள்ளதை காணலாம்.

டெஸ்லா மாடல் ஒய் ஆனது கூபே-ஸ்டைலிலான எலக்ட்ரிக் கார் ஆகும். அதாவது, காரின் பின்பக்கத்தில் மேற்கூரை மிகவும் சறுகலாக இருப்பதை காணலாம். காரின் உடல் வெள்ளை நிறத்தில் இருந்தாலும், மேற்கூரை கருப்பு நிறத்தில் உள்ளதால், காரை பார்க்கும்போது ட்யூயல்-டோன் பெயிண்ட் எஃபெக்ட் தெரிகிறது. காரின் பக்கவாட்டில், காரின் உடலுடன் நேர்த்தியாக கதவு கைப்பிடிகள் வழங்கப்பட்டு உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒட்டுமொத்த இந்தியாவுமே டெஸ்லாவின் வருகையை தான் எதிர்பார்த்து உள்ளன. தற்போதைக்கு வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்படும் இந்த மாடல் ஒய் எலக்ட்ரிக் கார்கள் வரும் காலங்களில் முழுவதுமாக இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுமா என்பதுதான் மக்களின் எதிர்பார்ப்பாக இருப்பது மட்டுமின்றி, மத்திய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
Source: evoindia/ Instagram (https://www.instagram.com/evoindia/)


Click it and Unblock the Notifications









