எதிர்பார்த்ததை விட கம்மி விலை! டெஸ்லா கார்களின் விலை இவ்வளவு தானா?
டெஸ்லா நிறுவனம் தனது மாடல் ஒய் காரின் விலை விபரங்களை தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளன.இந்த கார் ரூ59.89 லட்சம் என்ற விலையில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. இந்த கார் இரண்டு விதமான வேரியன்ட்களில் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. இந்த காரை எப்படி வாங்கலாம் இதில் உள்ள அம்சங்கள் என்ன? விரிவாக காணலாம் வாருங்கள்.
டெஸ்லா நிறுவனம் இன்று இந்தியாவில் தனது முதல் ஷோரூமை மும்பையில் திறக்கிறது. இதையடுத்து டெஸ்லா நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தனது மாடல் ஒய் கார்களுக்கான விலையை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏற்கனவே இந்த கார் தான் இந்தியாவில் டெஸ்லாவின் முதல் காராக அறிமுகமாகும் என பேசப்பட்டு வந்த நிலையில் இதை அதிகாரப்பூர்வமாக டெஸ்லா தற்போது அறிவித்துள்ளது.

டெஸ்லா வெப்சைட்டின்படி ரியல் வீல் டிரைவ் மற்றும் லாங் ரேஞ்ச் ரியர் வீல் டிரைவ் ஆகிய 2 வேரியன்ட்களில்களில் இந்த கார் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. இதன் விலைகளை பொருத்தவரை ரியர் வீல் டிரைவ் கார் ரூ59.89 லட்சம் என்ற விலையிலும், லாங் ரேஞ்ச் ரியர் வீல் டிரைவ் கார் ரூ67.89 லட்சம் என்ற விலையிலும் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. இதன் ஆன்ரோடு விலை விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி ரியல் வீல் டிரைவ் வேரியன்ட் ரூ60.99 லட்சம் என்ற விலையிலும், லாங்க் ரேஞ்ச் ரியர் வீல் டிரைவ் வேரியன்ட் ரூ69.07 லடசம் என்ற விலையிலும் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. இனி இந்த காரில் உள்ள அம்சங்கள் மற்றும் காரின்ஃபெர்பார்மென்ஸ் குறித்த விபரங்களை காணலாம்.

ரியல் வீல் டிரைவ் வேரியன்ட் காரில் 60.5kWh பேட்டரி இருக்கிறது. இந்த கார் ஒரு முறை முழுமையாக சார்ஜ் ஏற்றினால் 500 கி.மீ வரை ரேஞ்ச் தரும். இந்த கார் 0-100 கி.மீ வேகத்தை வெறும் 5.9 நொடியில் பிக்கப் செய்து விடும். அதே நேரம் இந்த காரை வெறும் 15 நிமிடங்கள் சார்ஜ் ஏற்றினால் 238 கி.மீ பயணிக்கும் திறன் கொண்டவையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
லாங் ரேஞ்ச் ரியர் வீல் டிரைவ் காரில் 75kWh பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கார் முழுமுமையாக சார்ஜ் ஏற்றினால் 622 கி.மீ வரை பயணிக்கும் திறன் கொண்டது. மேலும் 0-100 கி.மீ வேகத்தை வெறும் 5.6 நொடியில் பிக்கப் செய்து விடும். மேலும் வெறும் 15நிமிடம் சார்ஜ் ஏற்றினால் 267 கி.மீ வரை பயணிக்கும் வகையில் சார்ஜ் ஏறிவிடும்.
இந்த இரண்டு வேரியன்ட் கார்களிலும் முன்பக்க சீட் பவர்டு சீட்களாக உள்ளனன. இதில் ஹீட் மற்றும் வென்டிலேஷன் ஆப்ஷன் உள்ளது. பின்பக்க சீட்டில் 2 வழியில் மடக்கி கொள்ள முடியும். இதில் ஹீட் ஆப்ஷன் உள்ளது. இது போக 9 ஸ்பீக்கர்கள், 15.4 இன்ச் முன்பக்க டச் ஸ்கிரீன், 8 இன்ச்-ல் பின்பக்க டச் ஸ்கிரீன் டிஸ்பிளே இருக்கிறது. இது போக 8 கேமராக்கள் காரில் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த காரை லோன் முறையில் வாங்கும் ஆப்ஷனும் உள்ளது. அதன்படி இந்தகாரின் ரியர் வீல் டிரைவ் வேரியன்டை வாங்க வேண்டும் என்றால் ரூ6,09,969 முன்பணமாக செலுத்த வேண்டும். இதற்கு 60 மாதத்திற்கு 9 சதவீத வட்டி என கணக்கிட்டால் மாதம் ரூ1,13,958 இஎம்ஐ செலுத்த வேண்டும். இது லாங் ரேஞ்ச் ரியர் வீல் டிரைவ் வேரியன்டை வாங்கினால் ரூ6,90,769 முன்பணமாக செலுத்த வேண்டும். 60 மாதத்திற்கு 9 சதவீத வட்டியுடன் இஎம்ஐ ரூ1,29,053 செலுத்த வேண்டும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டெஸ்லா கார்கள் ரூ70 லட்சத்திற்கு அறிமுகமாகும் என எதிர்பார்த்தை விட குறைவான விலையிலேயே விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளன. இதனால் இந்த காரை பலர் வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. விலை அதிகமாக இருப்பதால் பணக்காரர்கள் மத்தியில் மட்டும் இந்த கார் பிரபலமாக வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications









