ஒரு பைசா கூட அதிகமா வாங்கல! ஆனா ரேஞ்ச் மட்டும் அதிகமாகிடுச்சு!
இந்தியாவில் டெஸ்லா மாடல் ஒய் கார் முன்பை விட அதிக ரேஞ்ச் தரும் வகையில் கொண்டு வரப்படுகிறது. இதற்காக வாகனத்தின் விலையும் அதிகமாகப்போவதில்லை. மாறாக அதே விலையில் வாங்க முடியும். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் கடந்த ஜூலை மாதம் முதல் தனது விற்பனையை துவங்கியது. முதல் காராக மாடல் ஒய் கார் மட்டும் தற்போது விற்பனையாகி வருகிறது. இதற்கான டெலிவரி கடந்த செப்டம்பர் மாதம் 5ம் தேதி துவங்கியது. இந்த இந்நிலையில் டெலிவரி துவங்கப்பட்ட ஒரே மாதத்தில் அந்நிறுவனம் அந்த கார்களில் புதிய அப்டேட்டை அந்நிறுவனம் கொண்டுவந்துள்ளது.

இந்தியாவில் மாடல் ஒய் காரில் 2 வேரியன்ட்களில் இந்த கார் விற்பனையாகி வருகிறது. இதன்படி ஸ்டாண்டர்ட் ரியர் வீல் டிரைவ், லாங்க் ரேஞ்ச் ரியர் வீல் டிரைவ் ஆகிய வேரியன்ட்களில் விற்பனையாகி வருகிறது. இந்த கார் இதற்கு முன்பு 622 கி.மீ ரேஞ்சை வழங்குகிறது. இந்த கார் தற்போது 661 கி.மீ ரேஞ்சை வழங்குகிறது. இந்த ரேஞ்ச் எல்லாம் டபிள்யூ எல்டிபி சான்று பெற்ற ரேஞஅச் ஆகும். ரியல் வேலர்டில் ரேஞ்ச் மாறலாம்.
டெஸ்லா மாடல் ஒய் லாங் ரேஞ்ச் ரியர் வீல் டிரைவ் வேரியன்ட் காரை 250 kW சார்ஜரில் வெறும் 15 நிமிடம் சார்ஜ் செய்தாலே 267 கி.மீ செல்லும் அளவிற்கு ரேஞ்ச் கிடைக்கும். இந்த ரேஞ்ச் அதிகமானதற்கு காரணம் இதுவரை மாடல் ஒய் காரில் 79kWh பேட்டரி பேக் இருந்தது. இதை அந்நிறுவனம் 84.2 kWh பேட்டரி பேக்காக மா்றியுள்ளது. இதனால் 39 கி.மீ ரேஞ்ச் அதிகம் கிடைக்கிறது. மேலும் இந்த புதிய பேட்டரியில் எல்ஜி செல்கள் வழங்கப்பட்டுள்ளது. இது அதிக ஆற்றம் மற்றும் திறனை வெளிப்படுத்துகிறது.

இந்த காரில் உள்ள மோட்டாரில் எந்தமாற்றமும் இல்லை. இது 0-100 கி.மீ வேகத்தை வெறும் 5.6 நொடியில் பிக்கப் செய்து விடுகிறது. அதிகபட்சம் 201 கி.மீ வேகம் வரை பயணிக்கும் திறன் கொண்டது. டெஸ்லா நிறுவனம் தனது ஸ்டாண்ட்டர் வேரியன்டில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை இந்த மாற்றங்கள் எல்லாம் லாங்க் ரேஞ்ச் வேரியன்டில் மட்டுமே கிடைக்கும்.
ஸ்டாண்டர்டு வேரயின்டை பொருத்தவரை 500 கி.மீ ரேஞ்ச் தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளுது. 0-100 கி.மீ வேகத்தை பிக்கப் செய்ய 5.9 நொடிகளை எடுத்துக்கொள்ளும்.இந்த காரும் 201 கி.மீ வேகத்தில் சீறி பாயும் திறன் கொண்டது. இந்த காரின் பேட்டரியை 175kW சார்ஜர் மூலம் 15 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 238 கி.மீ வரை பயணிக்கும்.

மாடல் ஒய் காரை பொருத்தவரை ரூ59.89 லட்சம் என்ற விலையில் ஸ்டாண்டார்ட் வேரியன்டும் ரூ67.89 லட்சம் என்ற விலையில் லாங்க் ரேஞ்ச் வேரியன்டும் கிடைக்கும். இந்த கார் மும்பை மற்றும் டில்லி டீலர்ஷிப்கள் மூலம் கிடைக்கிறது. ஆன்லைன் மூலமும் இந்த காரை ஆர்டர் செய்ய முடியும். நேரடியாக உங்கள் வீட்டிற்கே டெலிவரி செய்யப்படும்.
இந்த டெஸ்லா மாடல் ஒய் காரில் 19 இன்ச் கிராஸ்ஃப்ளோ வீல்கள் உள்ளன. இதில்பவர்டு டெயில் கேட், 15.4 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 8 இன்ச் பின்பக்க ஸ்கிரீன், வென்டிலேட்டட், ஹீட்டட் சீட்டுகள், முன்பக்க சீட்டை பவர் மூலம் உயரம் அட்ஜெஸ்ட் செய்யும் வசதி, யூஎஸ்பி டைப் சி சார்ஜிங் போ்ர்ட்கள்கள், பானரோமிக் சன்ரூஃப் ஆகிய அம்சங்கள் உள்ளன. முழுமையாக செல்ஃப் டிரைவிங் கூடுதலாக ரூ6 லட்சம் செலவில் கிடைக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் டெஸ்லா மாடல் ஒய் கார்கள் வருகைக்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.ஆனால் வந்த பிறகு போதுமான வரவேற்பு கிடைக்கவில்லை. இந்த விற்பனையை அதிகரிக்க சில அப்டேட்களை அந்நிறுவனம் செய்தது. ஆனால் விலையை குறைத்தால் மட்டுமே இந்தியா போன்ற நாடுகளில் விற்பனை செய்ய முடியும்.


Click it and Unblock the Notifications









