டெஸ்லாவில் இருந்து இந்த காரை எல்லாம் யார் கேட்டா...? முதலில் சீனாவில், அப்புறம் இந்தியாவில்!!

டெஸ்லா (Tesla) நிறுவனம் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அதிகாரப்பூர்வமாக நுழைந்து இருப்பதுதான் தற்போது இந்தியா முழுவதும் பேச்சாக உள்ளது. கடந்த ஜூலை 15ஆம் தேதி மும்பையில் இந்தியாவின் முதல் டீலர்ஷிப் ஷோரூமை திறந்து டெஸ்லா நிறுவனம் அதன் மாடல் ஒய் (Model Y) எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்தது.

ரூ.59.89 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த முதல் டெஸ்லா எலக்ட்ரிக் காருக்கு இந்தியாவில் முன்பதிவுகள் (Bookings) நடைபெற்று வரும் நிலையில், இந்தியாவில் மாடல் ஒய் எலக்ட்ரிக் காரின் புதிய வேரியண்ட்டை 'மாடல் ஒய் எல்' (Model Y L) என்கிற பெயரில் அறிமுகம் செய்ய டெஸ்லா நிறுவனம் தயாராகி வருகிறது.

tesla model y l electric car

இந்த காரின் பெயரில் உள்ள 'எல்' என்பது 'லாங் வீல்பேஸ்' (Long Wheelbase) என்பதை குறிக்கிறது. வீல்பேஸ் என்பது காரின் முன் மற்றும் பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம் ஆகும். வீல்பேஸ் நீளம் அதிகமாக இருந்தால், அதற்கேற்ப காருக்குள் கேபினும் விசாலமானதாக இருக்கும் என்பதால், சமீப காலமாக அதிக வீல்பேஸ் உடன் கார்களை உருவாக்க கார் நிறுவனங்கள் விரும்ப ஆரம்பித்துள்ளன.

அந்த வகையில் லாங் வீல்பேஸ் என்பது நீளமான வீல்பேஸை குறிக்கிறது. அதாவது, வழக்கமான டெஸ்லா மாடல் ஒய் எலக்ட்ரிக் காரை காட்டிலும் புதிய மாடல் நீண்ட வீல்பேஸை கொண்டதாக இருக்கும். முதலவாதாக சீனாவில் மாடல் ஒய் எல் எலக்ட்ரிக் கார் (Electric Car) அறிமுகம் செய்யப்பட உள்ளது.

tesla model y l electric car

இதனை உறுதிப்படுத்தும் வகையில், மாடல் ஒய் எலக்ட்ரிக் கார் தொடர்பான படங்கள் சீனாவில் இருந்து வெளியாகி உள்ளன. அதிக வீல்பேஸ் நீளத்தை கொண்டுவந்து, காரினுள் கேபினின் அளவை பெரியதாக்குவதற்கு காரணம், மாடல் ஒய் எலக்ட்ரிக் காரின் இருக்கை வசதியை அதிகரிப்பது ஆகும். இதன்படி, மாடல் ஒய் காரில் மூன்று வரிசைகளில் இருக்கைகள் வழங்கப்பட உள்ளன.

வழக்கமான டெஸ்லா மாடல் ஒய் எலக்ட்ரிக் காரின் வீல்பேஸ் நீளத்துடன் ஒப்பிடுகையில், 150மிமீ கூடுதல் நீளமாக 3,040மிமீ நீள வீல்பேஸ் உடன் புதிய மாடல் ஒய் எலக்ட்ரிக் கார் உருவாக்கப்பட்டு உள்ளது. காரின் முன் மற்றும் பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரத்தை அதிகரித்து இருப்பதன் மூலம், டெஸ்லா மாடல் ஒய் காரின் நீளமும் 186மிமீ அதிகரித்துள்ளது.

tesla model y l electric car

புதிய மாடல் ஒய் எல் எலக்ட்ரிக் காரின் நீளம் 4,976மிமீ ஆகும். காரின் நீளம் மட்டுமின்றி, உயரமும் வழக்கமான மாடல் ஒய் எலக்ட்ரிக் காரை காட்டிலும் 44மிமீ அதிகரிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு நீளம், உயரத்தில் மட்டுமின்றி, செயல்படுதிறனிலும் இரு எலக்ட்ரிக் மோட்டார்கள் (Electric Motors) உடன் புதிய மாடல் ஒய் எல் எலக்ட்ரிக் கார் கவனத்தை ஈர்க்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கிட்டத்தட்ட 5 மீட்டர்கள் நீளத்தில் கார் எனும்போது, டெஸ்லா மாடல் ஒய் எல் எலக்ட்ரிக் கார் பார்ப்பதற்கு பிரம்மாண்டமானதாக இருக்கும். இருப்பினும், அதற்கேற்ப புதிய மாடல் ஒய் எலக்ட்ரிக் காரின் விலையும் அதிகமாக நிர்ணயிக்கப்படும் என்பதால், இது இந்திய சந்தைக்கு எந்த அளவிற்கு ஏற்றதாக இருக்கும்? என்பது பெரிய கேள்வியாக உள்ளது. இந்தியாவிற்கு ஏற்ற குறைந்த விலையிலான டெஸ்லா மாடல் 3 எலக்ட்ரிக் காரின் அறிமுகத்தின் மீதுதான் இப்போது எதிர்பார்ப்பு எல்லாம் உள்ளது.

Source: Tycho de Feijter's X Post (https://x.com/TychodeFeijter)

More from DriveSpark

Article Published On: Saturday, July 19, 2025, 5:00 [IST]
English summary
Tesla model y l electric car with long wheelbase first launching in china
மேலும்... #tesla #electric car
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X