டெஸ்லாக்கு போட்டியா இத்தனை கார் இந்தியாவுல விக்குதா? அதுவும் கம்மி விலையில கிடைக்குது!
டெஸ்லா நிறுவனம் இன்று இந்தியாவில்தனது முதல் ஷோரூமை திறந்துள்ள நிலையில் தனது மாடல் ஒய் காருக்கான விலை விபரங்களை தற்போது அதிகாரப்பூர்வமான வெப்சைட்டில் வெளியிட்டுள்ளது. இந்த கார் இந்திய மார்கெட்டில் விற்பனையாகி வரும் பல்வேறு கார்களுக்கு போட்டியாக களம் இறங்குகிறது. இப்படியாக டெஸ்லா மாடல் ஒய் காரையும் இந்திய மார்கெட்டில் விற்பனையில் இருக்கும் அதன் போட்டி கார்கள் குறித்த விபரங்களையும் காணலாம் வாருங்கள்.
டெஸ்லா மாடல் ஒய் கார் ஒரு காம்பேக்ட் எஸ்யூவி ரக கார் ஆகும். இது அதன் அம்சங்கள், லுக், விலை, பயன்பாடு உள்ளிட்ட வகைகளில் பல்வேறு வாகனங்களுடன் போட்டியில் இருக்கிறது. மாடல் ஒய் காரை பொருத்தவரை மஹிந்திரா எக்ஸ்இவி 9இ, டாடா ஹாரியர் இவி, பிஒய்டி சீலயன் 7, வின்ஃபாஸ்ட் விஎஃப் 7, பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் 1 லாங் வீல் பேஸ் உள்ளிட்ட கார்களுக்கு போட்டியாக களம் இறங்குகிறது.

விலையை பொருத்தவரை டெஸ்லா மாடல் ஒய் கார் ரூ61.07 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வருகிறது. மஹிந்திரா எக்ஸ்இவி 9இ கார் ரூ28.72 லட்சம் என்ற விலையிலும், டாடா ஹாரியர் இவி கார் ரூ29.24 லட்சம் என்ற விலையிலும், பிஒய்டி சீலயன் 7 கார் ரூ 51.82 லட்சம் என்ற விலையிலும், வின்ஃபாஸ்ட் விஎஃப்7 கார் ரூ30 லட்சம் என்ற எதிர்பார்க்கப்படும் விலையிலும், பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் 1 லாங் வீல் பேஸ் ரூ51.92 லட்சம் என்ற விலையில் விற்பனையாகிறது. இது ஆன் ரோடு விலை தான். வின்ஃபாஸ்ட் விலை மட்டும் எதிர்பார்க்கப்படும் விலை என்பது குறிப்பிடத்தக்கது.
| மாடல் | விலை | ரேஞ்ச் (claimed) கி.மீ | பெர்ஃபார்மென்ஸ் (0-100 கி.மீ) பிக்கப் -நொடிகள் |
| டெஸ்லா மாடல் ஒய் | ரூ61.07 லட்சம் | 500 | 5.9 |
| மஹிந்திரா எக்ஸ்இவி 9இ | ரூ28.72 லட்சம் | 542 | 6.8 |
| டாடா ஹாரியர் | ரூ29.24 லட்சம் | 538 | 6.3 |
| பிஒய்டி சீலயன் 7 | ரூ51.82 லட்சம் | 567 | 4.5 |
| வின்ஃபாஸ்ட் விஎஃப் 7 | ரூ30.00 லட்சம் | 450 | 5.8 |
| பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் 1 லாங் வீல் பேஸ் | ரூ51.92 லட்சம் | 531 | 8.6 |
இதன் ரேஞ்சை பொருத்தவரை டெஸ்லா மாடல் ஒய் கார் 500 கி.மீ ரேஞ்சையும், மஹிந்திரா எக்ஸ்இவி 9இ கார் 542 கி.மீ ரேஞ்சையும், டாடா ஹாரியர் இவி கார் 538 கி.மீ ரேஞ்சையும், பிஒய்டி சீலயன் 7 கார் 567 கி.மீ ரேஞ்சையும், வின்ஃபாஸ்ட் விஎஃப் 7 கார் 450 கி.மீ ரேஞ்சையும், பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் லாங் வீல் பேஸ் கார் 531 கி.மீ ரேஞ்சையும் வழங்குகிறது.

பெர்ஃபார்மென்ஸை பொருத்தவரை 0-100 கி.மீ வேகத்தை டெஸ்லா மாடல் ஒய் கார் 5.9 நொடிகளிலும், மஹிந்திரா எக்ஸ் இவி 9இ கார் 6.8 நொடிகளிலும், டாடா ஹாரியர் இவி கார் 6.3 நொடிகளிலும் பிஒய்டி சீலயன் 7 ஃபெர்பார்மென்ஸ் வேரியன்ட் கார் 4.5 நொடியிலும் வின்ஃபாஸ்ட் விஎஃப் 7 டுயல் மோட்டார் கார் 5.8 நொடியிலும், பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் 1 லாங் வீல் பேஸ் கார் 8.6 நொடியிலும் பிக்கப் செய்கிறது.
இதில் விலையை பெஆரத்தவரை டெஸ்லா மாடல் ஒய் கார் அதிக விலையில் விற்பனையாகி வருகிறது. ரேஞ்ச் கூட போட்டி தயாரிப்பு நிறுவனங்கள் வழங்கும் ரேஞ்ச் தான் கிட்டத்தட்ட இருகு்கிறது. ஆனஜால் பெர்ஃபார்மென்ஸ் பெரும்பாலான கார்களை விட சிறப்பாக இருக்கிறது. இந்தகாரின் விலை அதிகமாக இருப்பதற்கு முக்கியமான காரணம் இந்த காருக்கு விதிக்கப்படும் இறக்குமதி வரி தான்.

இந்த நிறுவனம் இந்தியாவில் ஆலை அமைத்தால் மற்ற நிறுவனங்களை விட குறைவான விலையில் வாகனங்களை உற்பத்தி செய்யும் என்பதில் எந்த மாற்றக்கருத்தும் இருக்க முடியாது. இந்நிறுவனம் பல தயாரிப்புகளை வெகு சிறப்பாக விற்பனை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் வரிசையாக எலெக்ட்ரிக் கார்களை தயாரிக்கும் நிலையில் டெஸ்லாவும் அந்த களத்தில் குதித்துள்ளது. இது இந்தியா மார்கெட்டில் மிகப்பெரிய புரட்சியை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications









