சீனாவை தூரவிடுங்க! ஜெர்மனி காரை கொண்டு வந்தா ரேட் குறையும்! ஆனா இதுல ஒன்னு இருக்குது!
இந்தியாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கிடையே டெஸ்லா நிறுவனம் தனது காரை இந்தியாவில் விற்பனைக்காக கொண்டு வந்ததுள்ளது. டெஸ்லா கார்கள் எப்பொழுது இந்தியாவிற்கு வரும் என பலர் கேட்ட நிலையில் தற்போது இந்த கார்கள் எல்லாம் விற்பனைக்கு வந்த நிலையில் புக்கிங் மிக குறைவாகவே இருக்கிறது. இதற்கு என்ன காரணம்? புக்கிங் எப்பொழுது அதிகமாகும்?விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் கடந்த ஜூலை மாதம் டெஸ்லா நிறுவனம் தனது முதல் ஷோரூமை திறந்தது. அப்பொழுது முதல் இந்த காரை இந்தியா முழுவதிலுமிருந்து புக்கிங் செய்யலாம் என அந்நிறுவனம் அறிவித்திருந்தது. இதற்கான புக்கிங் துவங்கியுள்ளது. மும்பை மற்றும் டெல்லியில் தற்போது டெஸ்லா ஷோரூம்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் வெறும் 600 பேர் தான் இந்த காரை புக் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

எதிர்பார்க்கப்பட்ட அளவை விட மிக குறைவான எண்ணிக்கையிலேயே இந்த கார் புக் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முக்கியமான காரணம் விலை தான். டெஸ்லா நிறுவனம் தனது மாடல் ஒய் காரை இந்தியாவில் ரூ60 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால் இதே ரக கார் இந்தியாவில் ரூ22 லட்சம் என்ற சராசரி விலையில் தான் விற்பனை செய்யப்பட்டு வருகிறுது.
விலை அதிகமாக இருப்பது மந்தமான புக்கிங்கிற்கு மிக முக்கியமான காரணம். ஆனால் எதிர்காலத்தில் இந்நிறுவனம் தனது வாகனத்தை விலையை கணிசமாக குறைக்கவும் வாய்ப்புள்ளது. தற்போது டெஸ்லா நிறுவனம் சீனாவில் உள்ள தனது ஆலையில் தயாரிக்கப்பட்ட வாகனங்களை தான் இந்தியாவிற்குள் இறக்குமதி செய்து விற்பனை செய்து வருகிறது.

இந்நிலையில் இந்தியா இங்கிலாந்து இடையே தற்போது இலவச வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன்படி இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்ட வாகனங்களை இந்தியாவிற்குள் இறக்குமதி செய்ய குறைவான வரி விதிக்கப்படுகிறது. அதுவும் பல்வேS கட்டுப்பாடுகளின் கீழ் தான் இந்த குறைந்த வரி விதிப்பு என்பது அமலுக்கு வருகிறது.
இதை டெஸ்லா நிறுவனம் பயன்படுத்திக்கொண்டால் இந்தியாவில் குறைந்த விலையில் வாகனங்களை விற்க முடியும் என சிலர் பேசி வருகின்றனர். தற்போது டெஸ்லா கார்களை இந்தியாவில் இறக்குமதி செய்ய 100-110 சதவீதம் வரை வரி விதிக்கப்படுகிறது. இந்த கார்களை சீனாவிலிருந்து இறக்குமதி செய்யாமல் ஜெர்மனியில் உள்ள டெஸ்லா ஆலையில் தயாரிக்கப்படும் கார்களை இறக்குமதி செய்தால் வரி கணிசமாக என சிலர் சமூகவலைத்தளங்களில் பேசி வருகின்றனர். ஆனால் ஜெர்மனி இங்கிலாந்திற்குள் வராது. இங்கிலாந்தில் டெஸ்லாவிற்கு தனியாக வாகன தயாரிப்பு ஆலை கிடையாது. ஜெர்மனியில் தயாரிக்கப்படும் கார்கள் தான் இங்கிலாந்தில் விற்பனையாகிறது.

அப்படியே டெஸ்லாவிற்கு இங்கிலாந்தில் ஆலை இருந்தாலும் இந்த ஒப்பந்தத்தின்படி இந்தியாவில் இவி கார்களை இறக்குமதி செய்ய முதல் 5 ஆண்டுகளுக்கு எந்த சலுகையும் வழங்கப்பட மாட்டாது. தற்போது உள்ள அதே வரி விதிப்பே தொடரும். 6வது ஆண்டிலிந்து தான் 50 சதவீத்திலிருந்த படிப்படியாக 10 சதவீதத்திற்கு வரி குறைக்கப்படும்.
ஆனால் அதற்குள் டெஸ்லா இந்தியாவில் தனக்கென ஒரு சொந்த ஆலையை தயாரித்தாலோ அல்லது இங்குள்ள நிறுவன ஆலைகளுடன் ஒப்பந்தம் செய்து வாகனங்களை இந்தியாவிலேயே தயாரித்தாலோ வாகனங்களின் விலை கணிசமாக குறையும். என எதிர்பார்க்கலாம். இந்தியாவில் வாகன விலை அதிகாக இருந்தால் நிச்சயம் விற்பனனை கணிசமான அளவு குறைய தான் செய்யும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டெஸ்லா இந்தியாவில் ஆலை அமைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் சர்வதேச அளவில் உள்ள பிரச்சனைகள் காரணமாக இது தள்ளிப்போடப்பட்டு வருகிறது. விரைவில் இந்நிறுவனம் இந்தியாவில் ஆலை அமைத்தால் வாகனங்களின் விலை கணிசமாக குறையும் என எதிர்பார்க்கலாம். மற்றபடி ஜெர்மனி ஆலை டெஸ்லா இந்தியா வந்தால் விலை குறையும் என்பது வெறும் கட்டுகதைகள் தான்.


Click it and Unblock the Notifications









