2000 ரூபா கொடுத்து சார்ஜ் நிரப்பி செல்ல எத்தனை பேர் விரும்புவீங்க? டெஸ்லா சொல்லும் ரேட் ரொம்ப அதிகமா இருக்கே!

டெஸ்லா (Tesla) இந்தியாவில் நுழைந்ததில் இருந்து படிப்படியாக அதன் வேலைகளை செய்ய துவங்கி உள்ளது. முதலாவதாக மும்பையில் டீலர்ஷிப் ஷோரூமை (Dealership Showroom) துவங்கிய டெஸ்லா நிறுவனம் அதனை தொடர்ந்து டெல்லியில் 2வது டீலர்ஷிப் ஷோரூமை திறக்க தயாராகி வருகிறது. இதற்கடுத்து இந்தியாவில் 3வது டீலர்ஷிப் ஷோரூமை திறக்கவும் டெஸ்லா தயாராகுகிறது.

இந்தியாவில் 3வது டீலர்ஷிப் ஷோரூமை பெங்களூருவில் டெஸ்லா திறக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், ஷோரூம்களை திறப்பதுடன் தனது எலக்ட்ரிக் கார்களை (Electric Cars) வாங்கும் இந்திய கஸ்டமர்கள் சார்ஜ் செய்து கொள்வதற்காக சூப்பர் சார்ஜர்களையும் (Super Chargers) நிறுவ டெஸ்லா துவங்கியுள்ளது.

tesla super charging station

இதன்படி, முதல் ஷோரூம் திறக்கப்பட்டுள்ள மும்பையின் பந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் (BKC) பகுதியில் டெஸ்லாவின் முதல் சூப்பர்சார்ஜிங் நிலையம் (Supercharging Station) திறக்கப்பட்டுள்ளது. இந்த சார்ஜிங் நிலையங்கள் திறக்கப்படுவதற்கு முன்பே இதன் சில படங்கள் இணையத்தில் கசிந்தன. அதனை பற்றி நமது செய்தித்தளத்தில் கூட பார்த்து இருந்தோம்.

இந்தியாவில் முதற்கட்டமாக 8 சூப்பர்சார்ஜிங் நிலையங்களை நிறுவ டெஸ்லா திட்டமிட்டுள்ளது. இதில் முதலாவது நிலையம் தான் மும்பையில் நிறுவப்பட்டுள்ளது. இந்தியாவில் திறக்கப்பட்டுள்ள முதல் டெஸ்லா சூப்பர் சார்ஜிங் நிலையமான இதில் நான்கு 250 கிலோவாட்ஸ் சூப்பர்சார்ஜர்கள் உள்ளன. இவற்றில் சார்ஜ் நிரப்ப ஒரு கிலோவாட்ஸ் ஆற்றலுக்கு ரூ.24 கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளதாக அக்கோ டிரைவ் (ACKO Drive) தனது இணையத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளது.

tesla super charging station

டெஸ்லாவில் இருந்து இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள முதல் எலக்ட்ரிக் காரான மாடல் ஒய் (Model Y)-ஐ சூப்பர்சார்ஜில் முழுவதுமாக சார்ஜ் நிரப்ப ரூ.1,800 தேவைப்படும். இந்த தொகை கூட மாடல் ஒய் எலக்ட்ரிக் காரின் ஸ்டாண்டர்ட் வேரியண்ட்டிற்கு தான். விலைமிக்க லாங் ரேஞ்ச் வேரியண்ட் மாடல் ஒய் காருக்கு ரூ.2,000 கட்டணமாக வசூலிக்கப்படும்.

இந்த தொகைகள் அதிகமாக இருக்கிறது என நினைப்போருக்காக தற்போது மும்பையில் திறக்கப்பட்டுள்ள சார்ஜிங் நிலையம் உள்பட அனைத்து டெஸ்லா சார்ஜிங் நிலையங்களிலும் சூப்பர் சார்ஜர்களுடன், திறன் குறைந்த சார்ஜர்களும் இடம்பெற உள்ளன. சூப்பர் சார்ஜர்களின் திறன் 250 கிலோவாட்ஸ் ஆக இருக்கும் நிலையில், இத்தகைய திறன் குறைந்த சார்ஜர்களின் திறன் 11 கிலோவாட்ஸ் என்கிற அளவில் தான் உள்ளது.

இந்த சார்ஜர்களில் ஒரு கிலோவாட்ஸ் சார்ஜ்க்கு ரூ.14 கட்டணமாக வசூலிக்கப்படும். டெஸ்லா மாடல் ஒய் காரின் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 267கிமீ தொலைவிற்கு பயணிக்க முடியும். இத்தனை தொலைவிற்கு இயங்குவதற்கான சார்ஜை சூப்பர்சார்ஜரின் உதவியுடன் வெறும் 15 நிமிடங்களில் நிரப்பிவிடலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: உலகளவில் டெஸ்லாவின் சூப்பர்சார்ஜர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் அதே நம்பிக்கையில் இந்தியாவிலும் சூப்பர்சார்ஜிங் நெட்வொர்க்கை விரிவுப்படுத்த டெஸ்லா தயாராகி வருகிறது. இந்தியாவில் சூப்பர் சார்ஜர்களை எத்தனை டெஸ்லா கார் கஸ்டமர்கள் பயன்படுத்த போகின்றனர் என்பதை காண ஆவலாக உள்ளோம்.

More from DriveSpark

Article Published On: Thursday, August 7, 2025, 16:50 [IST]
English summary
Tesla opened its first super charging station in india check all details here
மேலும்... #tesla #electric car #charger #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+