இதோ சூப்பர்சார்ஜரும் வந்தாச்சு... இந்தியாவில் டெஸ்லாவின் கணக்கே தனி! அடுத்தடுத்து வேகமா நடக்கும் வேலைகள்!

ஹரியானா மாநிலம் குருகிராமில் டெஸ்லா சென்டர் (Tesla Center) திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, டெஸ்லா நிறுவனம் தற்போது குருகிராமில் தனது முதல் சார்ஜிங் நிலையத்தை டி.எல்.எஃப் ஹாரிசோன் (DLF Horizon) சென்டரில் திறந்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த முக்கிய நடவடிக்கை, இந்தியாவில் உறுதியான சார்ஜிங் கட்டமைப்பை உருவாக்கி, வாடிக்கையாளர்களுக்குத் தடையற்ற மற்றும் நிலையான போக்குவரத்து தீர்வுகளை வழங்குவதற்கான டெஸ்லாவின் உறுதிப்பாட்டைப் பலப்படுத்துகிறது.

ஹாரிசோன் சென்டரின் வாகன நிறுத்துமிடத்தில் அமைந்துள்ள இந்த டெஸ்லா சூப்பர்சார்ஜிங் (Supercharging) தளத்தில், அதிகப்பட்சமாக 250kW சார்ஜிங் வேகத்துடன் கூடிய நான்கு வி4 சூப்பர்சார்ஜர்களும், 11kW திறன் கொண்ட மூன்று சிறிய அளவிலான டெஸ்டினேஷன் (Destination) சார்ஜர்களும் பொருத்தப்பட்டுள்ளன. இது டெஸ்லா எலெக்ட்ரிக் கார் உரிமையாளர்களின் பல்வேறு வகையான சார்ஜிங் தேவைகளுக்கு நெகிழ்வான தீர்வை வழங்குகிறது.

tesla supercharger facility in gurugram haryana

டெஸ்லா சூப்பர்சார்ஜர்கள் மூலம், ஒரு டெஸ்லா மாடல் ஒய் (Model Y) எலெக்ட்ரிக் கார் வெறும் 15 நிமிடங்களில் 275 கி.மீ தூரத்திற்கான சார்ஜைப் பெற முடியும். குருகிராமில் இருந்து ராஜஸ்தானின் ஜெய்ப்பூருக்குச் செல்ல இது போதுமானது. 99.95% செயல்பாட்டுடன் கூடிய "Plug In, Charge and Go" அனுபவம், டெஸ்லா உரிமையாளர்கள் சிரமமில்லாப் பயணத்தை அனுபவிக்க உதவுகிறது.

டெஸ்லா மொபைல் செயலி மூலமாக இடத்தை கண்டறிந்து உரிமையாளர்கள் தங்கள் எலெக்ட்ரிக் காரை சார்ஜிங் மையத்திற்கு கொண்டுவரலாம், சார்ஜிங் மையத்தில் எத்தனை சார்ஜர்கள் உடனடியாக சார்ஜ் நிரப்ப ஃப்ரீயாக உள்ளன என்பதை சரிபார்க்கலாம், சார்ஜ் ஆகுவதை கண்காணிக்கலாம், சார்ஜ் முழுவதுமாக நிரம்பிவிட்டால் அதுகுறித்த எச்சரிக்கைகளைப் பெறலாம் மற்றும் கட்டணங்களையும் செலுத்தலாம்.

tesla supercharger facility in gurugram haryana

இவை அனைத்தையும் ஒரு தடையற்ற அனுபவமாகப் பெற முடியும். இந்த தளத்தின் வாயிலாக, டெஸ்லா இப்போது இந்தியா முழுவதும் 3 சார்ஜிங் நிலையங்களை இயக்குகிறது. இதில் மொத்தம் 12 சூப்பர்சார்ஜர்களும், 10 டெஸ்டினேஷன் சார்ஜர்களும் உள்ளன. இந்தியாவில் தற்போது செயல்படும் டெஸ்லா சார்ஜிங் நிலையங்கள்: குருகிராம் (ஒன் ஹாரிசோன் - 4 சூப்பர்சார்ஜர்கள், 3 டெஸ்டினேஷன்), டெல்லி (வேர்ல்ட்மார்க்-3 - 4 சூப்பர்சார்ஜர்கள், 3 டெஸ்டினேஷன்), மும்பை (ஒன் பிகேசி - 4 சூப்பர்சார்ஜர்கள், 4 டெஸ்டினேஷன்) ஆகும்.

குருகிராமில் டிசம்பர் 17ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை கோல்ஃப் கோர்ஸ் சாலையில், ஹாரிசோன் சென்டரில் அமைந்துள்ள புதிய சார்ஜிங் நிலையத்தில் டெஸ்லா நடத்தும் கற்றல் வகுப்புகளில் அதன் அதிநவீன சார்ஜிங் தொழில்நுட்பத்தை நேரடியாக அனுபவிக்க அழைக்கப்படுகிறார்கள். இந்தப் பயிற்சி அமர்வுகள் டெஸ்லாவின் எலெக்ட்ரிக் வாகனப் போக்குவரத்து மற்றும் நிலையான ஆற்றல் தீர்வுகள் பற்றி மக்கள் மேலும் அறிந்து கொள்ள சிறந்த வாய்ப்பை வழங்கும்.

tesla supercharger facility in gurugram haryana

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டெஸ்லா தனது வாடிக்கையாளர்களுக்கு மிகவும் வசதியான மற்றும் ஒருங்கிணைந்த சார்ஜிங் அனுபவத்தை வழங்குவதில் அர்ப்பணிப்புடன் உள்ளது. குருகிராமில் டெஸ்லா சென்டர் திறப்பு மற்றும் புதிய சார்ஜிங் நிலைய திறப்பின் மூலம், அந்த பிராந்தியத்தில் எலெக்ட்ரிக் வாகன இயக்கத்தை உள்ளூர் மக்களுக்கும் பயணிகளுக்கும் அணுகக்கூடியதாகவும் நடைமுறைக்கு உகந்ததாகவும் மாற்றுவதில் டெஸ்லா ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது.

இந்தியாவில் டெஸ்லாவில் இருந்து தற்போதைக்கு மாடல் ஒய் எலெக்ட்ரிக் கார் மட்டும் ரூபாய் 59,89,000 -இல் இருந்து கிடைக்கிறது. வீட்டிலேயே சார்ஜ் செய்யும் வசதி உடன், டெஸ்லா நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு திறமையான மற்றும் தடையற்ற உரிமையாளர் அனுபவத்தை உறுதி செய்கிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, December 17, 2025, 23:56 [IST]
English summary
Tesla opens first supercharger facility in gurugram haryana check all details here
மேலும்... #tesla #charger #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X