வெறும் ரூ22,220 இருந்தாலே டெஸ்லா காரை புக் பண்ணலாம்! எப்படி தெரியுமா?
டெஸ்லா நிறுவனம் இந்தியா முழுவதும் யார் வேண்டுமானாலும் டெஸ்லா மாடல் ஒய் காரை புக்கிங் செய்யலாம் என தனது வெப்சைட்டில் அப்டேட் செய்துள்ளது. இதில் முன்பதிவு தொகையையும் அறிவித்துள்ளது. இப்படியாக டெஸ்லா காரை புக் செய்ய எவ்வளவு முன்பணம் செலுத்த வேண்டும். அதற்கான விதிமுறைகள் என்ன? விரிவாக காணலாம் வாருங்கள்.
டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது காலடி தடத்தை எடுத்து வைத்துள்ளது. இந்நிறுவனம் தனது முதல் காராக மாடல் ஒய் என்ற காரை விற்பனைக்காக அறிமுகப்படுத்தியுள்ள நிலையில் இந்த காரின் புக்கிங்கையும் துவங்கியுள்ளது. முதலில் மும்பை, டில்லி, புனே, குர்கிராம் பகுதியில் மட்டும் இந்த காரை புக் செய்ய முடியும் என்று இருந்த நிலையை மாற்றி தற்போது இந்தியா முழுவதும் இந்த காரை புக் செய்ய முடியும் என அந்நிறுவனம் அறிவித்தள்ளது.

இந்த காருக்கான புக்கிங் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. இந்த கார் ரூ59.89 லட்சம் என்ற எக்ஸ் ஷோரூம் விலையில் விற்பனையாகி வரும் நிலையில் இந்த காரை நீங்கள் ஆன்லைனில் புக் செய்ய வேண்டும் என்றால் ரூ22,220 முதல் டோக்கன் அட்வான்ஸாக செலுத்த வேண்டும். இந்த பணம் செலுத்த அடுத்த 7 நாட்களுக்குள் ரூ3 லட்சம் செலுத்த வேண்டும். ரூ3 லட்சம் செலுத்தினால் மட்டுமே கார் புக்கிங் ஏற்றுக்கொள்ளப்படும்.
முதலில் செலுத்திய ரூ22,220 என்பது டோக்கன் அட்வான்ஸ் மட்டுமே இது கார் புக்கிங்கிற்கான கட்டணம் கிடையாது.மேலும் டோக்கன் அட்வான்ஸ் அல்லது கார் புக்கிங்கிற்காக ரூ3 லட்சம் கட்டணம் செலுத்திய பிறகு நீங்கள் கார் வேண்டாம் என முடிவு செய்தால் எந்த தொகையும் உங்களுக்கு திரும்பி கிடைக்காது. இது மட்டுமல்ல டோக்கன் அட்வான்ஸ் செலுத்தி 7 நாட்களுக்கு பிறகும் நீங்கள் ரூ3 லட்சம் முன்பணம் செலுத்த வில்லை என்றாலும் நீங்கள் செலுத்திய ரூ22,220 கட்டணம் திரும்ப கிடைக்காது.

டெஸ்லா மாடல் ஒய் காரை பொருத்தவரை ஸ்டாண்டர்டு ரியர் வீல் டிரைவ் மற்றும் லாங் ரேஞ்ச் ரியர் வீல் டிரைவ் ஆகிய வேரியன்ட்களில் இந்த கார் கிடைக்கிறது. ஸ்டாண்டர்டு வேரியன்ட் கார் ஒரு முறை சார்ஜ் போட்டால் 500 கி.மீ வரை ரேஞ்ச் தரும். அதே போல இந்த கார் 0-100 கி.மீ வேகத்தை வெறும் 5.9 நொடியில் பிக்கப் செய்து விடும் திறன் கொண்டதாக இருக்கிறது.
லாங்க் ரேஞ்ச் ரியர் வீல் டிரைவ் வேரியன்ட் காரை பொருத்தவரை 622 கி.மீ ரேஞ்ச் தரும் அதே நேரம் 0-100 கி.மீ வேகத்தை வெறும் 5.6 நொடியில் பிக்கப் செய்து விடும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளுது. இந்த கார் 201 கி.மீ வேகத்தில் சீறி பாயும் திறன் கொண்டதாக இருக்கிறது. இந்த காரில் 19 இன்ச் கிராஸ்ஃப்ளோ அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த கார் 6 விதமான கலர் ஆப்ஷன்களி்ல இருக்கிறது. அமெரிக்காவில் உள்ளது போல ஃபுல் டிரைவிங் ஆப்ஷன் இந்த காரிலும் இருக்கிறது. இந்த ஆப்ஷனை பெற வேண்டும் என்றால் ரூ6 லட்சம் கூடுதலாக செலுத்த வேண்டும். இந்த கார் முதற்கட்டமாக மும்பை, புனே, டில்லி, குர்கிராம், ஆகிய பகுதிகளில் டெலிவரி செய்யப்பட்டும் மற்ற நகரங்களுக்க படிப்படியாக இதன் டெலிவரி விரிவுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் டெஸ்லா கார்கள் மீது மவுசு அதிகமாக இருந்த நிலையில் பலர் இந்த கார்களை வாங்க காத்திருந்தனர். தற்போது புக்கிங் துவங்கியுள்ள நிலையில் பலர் புக் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரின் டெலிவரி அடுத்த சில மாதங்களில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications









