வெறும் 40 கார் தான் வித்திருக்குது! டெஸ்லாக்கு இந்தியா ராசியே இல்ல போல!

டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது ஷோரூம்களை திறந்து விற்பனையை துவங்கியது. இந்த நிறுவனத்தின் கார்கள் மிகப்பெரிய அளவில் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த அக்டோபர் மாத விற்பவனை விபரங்கள் வெளியாகியுள்ளது. இதில் ஒரு மாதம் முழுவதும் இந்த நிறுவனத்தின் கார்களை வெறும் 40 பேர் மட்டுமே வாங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட உலகின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமாக இருப்பது டெஸ்லா. உலகம் முழுவதும் அதிக அளவில் எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் இந்நிறுவனம் இந்தியாவிற்குள் வர பல்வேறு பிரச்சனைகளை தொடர்ந்து சந்தித்தது. இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் இந்நிறுவனம் முதல் முதலில் தனது ஷோரூமை திறந்து இந்தியாவிற்குள் கார்களை இறக்குமதி செய்து விற்பனை செய்ய துவங்கியது.

Tesla Sales Oct 2025

இந்த நிறுவனம் இந்தியாவிற்குள் வரும் போது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. இந்தியாவின் போட்டி நிறுவனங்களுக்கு எல்லாம் டெஸ்லா தலைவலியை தரும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் இந்நிறுவனத்தின் விற்பனை விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. இதன்படி கடந்த செப்டம்பர் மாதம் டெஸ்லா நிறுவனம் வெறும் 64 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. அக்டோபர் மாதம் இதை விட இன்னும் மோசமாக வெறும் 40 கார்களை மட்டுமே அந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது மாடல் ஒய் என்ற வாகனத்தை மட்டுமே விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் இந்தியாவில் மிக மோசமான விற்பனையை பெற்று வருகிறது. சர்வதேச அளவில் ஒவ்வொரு 4 மணி நேரத்திற்கும் இந்நிறுவனம் 100 கார்களை விற்பனை செய்து வருகிறது. இவ்வளவு பெரிய நிறுவனம் இந்தியாவில் கார்களை விற்பனவை செய்ய திண்டாடுவது ஆச்சரியமான விஷயமாக உள்ளது.

Tesla Sales Oct 2025

டெஸ்லா நிறுவனம் மும்பையில் தனது முதல் அனுபவ மையத்தை துவங்கி கார்களுக்கான புக்கிங்கை பெற துவங்கியது. இந்நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதம் தான் விற்பனையை துவங்கியது. இந்நிறுவனம் மாடல் ஒய் காரை மட்டுமே விற்பனை செய்து வரும் நிலையில் இந்தகார் ரூ59.89 லட்சம் என்ற நிலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

இந்த காரின் டெலிவரி துவங்கிய முதல் மாதமே 64 கார்கள் டெலிவரி செய்யப்பட்ட நிலையில் அடுத்த மாதமே இதன் விற்பனை 37.5 சதவீதம் சரிவடைந்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இதுவரைஇல்லாத அளவிற்கு அதிக விற்பனையை பெற்று விற்பனையில் சாதனைகளை பதிவு செய்த மாதம் ஆகும். பெரும்பாலான நிறுவனம் விற்பனையில் நல்ல வளர்ச்சியை பெற்ற அதே நேரத்தில் டெஸ்லா நிறுவனம் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

Tesla Sales Oct 2025

டெஸ்லாவின் மாடல் ஒய் கார் என்பது ஒரு மிட் சைஸ் கிராஸ் ஓவர் காராக குறைந்த விலையில் அமெரிக்காவில் விற்பனையாகி வருகிறது. ஆனால் இந்திய கார் இந்தியாவிற்குள் வரும் போது ஒரு சொகுசு காராக விற்பவனைக்கு வருகிறது. இதற்க முக்கியமான காரணம் விலை. அமெரிக்காவை விட சுமார் 70 சதவீதம் அதிகமான விலையில் இந்த கார் விற்பனைக்கு வந்துள்ளது.

டெஸ்லா நிறுவனம் இந்தியாவிற்குள் டெஸ்லா கார்களை தயாரக்கவோ அல்லது அசெம்பிள் செய்யவே இல்லை. முழுமையாக கட்டமைக்கப்பட்ட காராக இந்தியாவிற்குள் அந்நிறுவனம் கார்களை விற்பனை செய்துகிறது.இந்தியாவில் முழுமையாக கட்டமைக்கப்பட்ட காருக்கு 100 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. இதனால் டெஸ்லா கார்கள் இந்தியாவில் அதிக விலையில் விற்பனையாகி வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் டெஸ்லா நிறுவனத்தின் மீது மக்கள் மத்தியில் மதிப்பு அதிகமாக இருக்கிறது. இருந்தாலும் இந்த கார்களின் விலை அதிகமாக இருப்பதால்க மக்கள் மத்தயில் விற்பனை குறைவாக இருக்கிறது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Friday, November 28, 2025, 11:00 [IST]
English summary
Tesla sales oct 2025 low sales details
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X