0% வட்டியில் இவி காருக்கு கடன், வாழ்நாள் முழுவதும் இலவச சார்ஜிங் சேல்ஸ் பிச்சுக்கப்போகுது!
ஐரோப்பாவில் எலான் மஸ்க்கின் டெஸ்லா விற்பனையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதற்கு எதிராக, நிறுவனம் 0% வட்டி கடன் மற்றும் இலவச வாழ்நாள் சார்ஜிங் போன்ற ஈர்க்கும் சலுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. விற்பனை எண்ணிக்கை குறைந்து வருவதால், இவை அதிக வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
விற்பனையில் ஏற்பட்ட வீழ்ச்சிக்கு பதிலளிக்கும் விதமாக, டெஸ்லா பல சலுகைகளை வழங்கி வருகிறது. இந்நிறுவனம் 0% வட்டியில் கார் வாங்க கடன் வழங்குகிறது மற்றும் டெஸ்லா சூப்பர்சார்ஜர்களுக்கு வாழ்நாள் முழுவதும் இலவச சார்ஜிங் வசதியையும் வழங்குகிறது. அமெரிக்க அரசியலில் மஸ்க்கின் வளர்ந்து வரும் செல்வாக்கிற்கு எதிராக சில முக்கிய குழுவினர் டெஸ்லா வாகனங்களை புறக்கணித்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் 60,000 க்கும் மேற்பட்ட ஃபாஸ்ட் சார்ஜர்களை உள்ளடக்கிய டெஸ்லாவின் சூப்பர்சார்ஜர் நெட்வொர்க், எலெக்ட்ரிக் வாகனங்கள் வெறும் 15 நிமிடங்களில் 200 மைல் (சுமார் 322 கிமீ) வரை ரேஞ்சை வழங்குகிறது. இந்த இலவச சார்ஜிங் சலுகை, பாரம்பரிய பெட்ரோல் அல்லது டீசல் கார்களை விட டெஸ்லாவை வைத்திருப்பதற்கான செலவை மேலும் குறைக்கிறது.
இந்நிறுவனம் தனது சமீபத்திய மாடலான சைபர் டிரக்கின் விற்பனையிலும் போராடி வருகிறது. அதன் ஈர்ப்பை அதிகரிக்க, டெஸ்லா சைபர் டிரக்கிற்கு 1.99% விகிதத்தில் கடன் வழங்கி வருகிறது. இதே போல சில மாடல்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்கி வழங்குகிறது. வாடிக்கையாளர் ஆர்வத்தையும் விற்பனையையும் அதிகரிப்பதற்கான ஒரு திட்டின் ஒரு பகுதியாக இந்த முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.

புதிய மாடல் 3 காரை $7,500 வரி கிரெடிட்டுக்கு தகுதியான வாடிக்கையாளர்கள், டெஸ்லாவின் 'நல்ல' வாடிக்கையாளர் என்ற அளவுகோல்களை பூர்த்தி செய்தால் 0% வட்டியில் கடன் பெறலாம். இதற்கு குறைந்தது 700 கிரெடிட் ஸ்கோர் தேவை. வரி கிரெடிட்டைத் தேர்ந்தெடுக்காதவர்களுக்கு, 0.99% வட்டி விகிதத்தில் போட்டி விகிதத்தில் கடன்கள் கிடைக்கின்றன.
சில டெஸ்லா உரிமையாளர்கள், மஸ்க்கின் செயல்களால் அதிருப்தி தெரிவித்துள்ளனர். டெஸ்லா ஷோரூம்களில் வன்முறை மற்றும் தீவைப்பு சம்பவங்கள் வரை இந்த அதிருப்தி அதிகரித்துள்ளது. இதனால் டெஸ்லா நிறுவனத்திற்கு மிகப்பெரிய அளவில் கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளதால் விற்பனை கணிசமான அளவு பாதிக்கப்பட்டுள்ளது. இதை சமாளிக்கவே இந்த தள்ளுபடி மற்றும் சலுகைகளை வழங்கியுள்ளது.

டெஸ்லாவின் முயற்சிகள், கடன் சலுகைகள் மற்றும் இலவச சார்ஜிங் போன்ற கூடுதல் நன்மைகள் மூலம் தங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை அதிகம் ஈர்க்கும் வகையில் செய்வதன் மூலம் இந்த சவால்களை எதிர்கொள்ளும் நோக்கம் கொண்டவை. தற்போது மார்கெட்டில் சிரமங்கள் இருந்தபோதிலும் வாடிக்கையாளர் திருப்தியை அதிகரிக்கவும் விற்பனை வளர்ச்சியைத் தூண்டவும் இந்த நடவடிக்கைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஐரோப்பா மார்கெட்டில் இந்நிறுவனம் இப்படியான சலுகைகளை வழங்கினாலும் அமெரிக்க மார்கெட்டிற்கு இந்த சலுகைகள் பொருந்தாது. விரைவில் இந்நிறுவனம் இந்தியாவிற்கு வரவுள்ள நிலையில் இந்த மாற்றங்கள் எல்லாம் இந்தியாவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். இந்நிலையில் இந்நிறுவனம் இந்திய மார்கெட்டில் தனது காரை களம் இறக்கும்போது இதை விட அதிக சலுகைகளை வழங்கும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









