30 நாள் கூட ஆகல அதுக்குள் 2வது ஷோரூமை திறந்த டெஸ்லா!

அமெரிக்காவை அடிப்படையாக கொண்ட டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது காலடி தடத்தை கடந்த மாதம் எடுத்து வைத்தது. மும்பையில் தனது முதல் ஷோரூமை திறந்த திறந்த நிலையில் இரண்டாவது ஷோரூமை டெல்லியில் இன்ற திறந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

உலகின்மிகப்பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது வாகனத்தை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இந்நிறுவனம் இந்தியாவில் தனது முதல் ஷோரூமை மும்பையில் உள்ள பிகேசி பகுதியில் கடந்த மாதம் 15ம் தேதி திறந்தது. இது இந்தியா முழுவதும் பேசு பொருளானது.

Tesla Second Showroom

இந்நிலையில் இந்நிறுவனம் தனது ஷோரூமை விரிவுபடுத்தும் நோக்கில் இரண்டாவது ஷோரூமை முதல் ஷோரூம் திறந்த 30 நாட்களுக்குள் டில்லியில் திறந்துள்ளது. டில்லியில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே உள்ள ஏரோ சிட்டி என்ற இடத்தில் இந்த ஷோரூம் இன்று திறக்கப்பட்டுள்ளது.

தற்போது டெஸ்லா கார்கள் விற்பனையாகும் விலையை பார்க்கும் போது விமானத்தில் அடிக்கடி பயணிக்கும் திறன் கொண்ட வாடிக்கையாளர்கள் தான் டெஸ்லா காரை வாங்க வாய்ப்புள்ளதால் இந்த இடத்தை அந்நிறுவனம் தேர்வு செய்துள்ளது. இந்த இடத்தில் மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் வி4 சூப்பர் சார்ஜர்களை இந்த இடத்தில் அந்நிறுவனம் செட்டப் செய்துள்ளது.

Tesla Second Showroom

இது டில்லி என்சிஆர், நொய்டா பகுதிகளில் இருப்பவர்களால் எளிதாக பயன்படுத்த முடியும். மும்பை ஷோரூமில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் சூப்பர் சார்ஜர்களை அந்நிறுவனம் இன்ஸ்டால் செய்ததது. இந்த சார்ஜர்கள் டிசி சார்ஜர்களாக செயல்படும். இது போக ஏசி சார்ஜர் செட்டப்பையும் அந்நிறுவனம் செய்துள்ளது.

இது போக ஹைதராபாத், புனே, சென்னை, பெங்களூரு, ஆமதாபாத், ஜெய்பூர் ஆகிய பகுதிகளிலும் ஷோரூமை திறக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அந்நிறுவனம் செய்து வருகிறது. தற்போது அந்நிறுவனம் இந்தியாவில் மாடல் ஒய் என்ற காரை மட்டுமே விற்பனை செய்து வருகிறது. இந்த காரை இந்த சார்ஜரில் 15 நிமிடம் சார்ஜ் போட்டால் 267 கி.மீ பயணிக்கும் வகையில் ரேஞ்ச் தரும்.

Tesla Second Showroom

இந்த சார்ஜரில் டெஸ்லா நிறுவன வாடிக்கையாளர்கள் தங்கள் வாகனத்தை கனெக்ட் செய்து சார்ஜ் செய்து கொள்ளலாம். இதற்காக டெஸ்லா ஆப் மூலமே அதை சார்ஜ் செய்ய ஸ்லாட்டை புக் செய்யலாம். இந்த சார்ஜிங் நேரத்தில் அதற்கான நோட்டிஃபிகேஷன் கிடைக்கும். மேலுலும் அது மூலமே சார்ஜ் செய்யும் வசதியும் கிடைக்கும். இதற்கான கட்டணத்தையும் ஆப் மூலம் செய்து கொள்ள முடியும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் பல எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்கும் நிலையில் டெஸ்லா நிறுவனமும் முக்கியமான எலெக்ட்ரிக் கார்களை தயாரிக்கிறது. இந்த நிறுவனம் இந்தியாவில் ஆலை அமைத்து வாகனங்களை விற்பனைக்கு கொண்டு வந்தால் நிச்சயம் மிகப்பெரிய அளவில் விற்பனை செய்ய முடியும்.

More from DriveSpark

Article Published On: Monday, August 11, 2025, 18:55 [IST]
English summary
Tesla second showroom delhi aerocity with superchargers
மேலும்... #tesla #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X