கார் மட்டுமல்ல விற்பனையும் செம ஸ்பீடாகுது! டெஸ்லாவின் இரண்டாவது ஷோரூமும் ரெடியாகிடுச்சு!

டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது காலடி தடத்தை எடுத்து வைத்துள்ள நிலையில் மும்பையை தொடர்ந்து தனது இரண்டாவது ஷோரூமை டில்லியிலும் திறக்க முடிவு செய்துள்ளது. இதற்காக இடத்தையும் தேர்வு செய்துள்ளது. வரும் ஆகஸ்ட் 11ம் தேதி இந்த ஷோரூம் திறக்கப்படவுள்ளது. இது குறத்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

அமெரிக்காவை சேர்ந்த மிகப்பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா நிறுவனம் தற்போது இந்தியாவில் தனது காலடி தடத்தை எடுத்து வைத்துள்ளது. இந்நிறுவனம் ஏற்கனவே மும்பையில் தனது ஷோரூமை திறந்துள்ள நிலையில் தற்போது டில்லியில் தனது இரண்டாவது ஷோரூமை திறக்க முடிவு செய்துள்ளது.

tesla second showroom

டில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே உள்ள ஏரோ சிட்டி என்ற கமர்ஷியல் ஏரியாவில் தனது ஷோரூமை திறக்க இடத்தை தேர்வு செய்துள்ளது. இந்த பகுதியில் தற்போது ஷோரூமை திறப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த ஷோரூம் வரும் 11ம் தேதி திறப்படுகிறது.

டெஸ்லா நிறுவனம் ஏற்கனவே இந்தியாவில் மாடல் ஒய் என்ற காரை விற்பனைக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் எந்த மூலையில் இருந்தாலும் இந்த காரை புக்கிங் செய்ய முடியும். தற்போது செயல்பட்டு வரும் மும்பை ஷோரூம் மற்றும் விரைவில் திறக்கப்படவுள்ள டில்லி ஷோரூம் இரண்டுமே ஒரு அனுபவ மையமாக செயல்படும். அதே நேரம் அங்கு விற்பனையும் நடக்கும்.

tesla second showroom

நேரடியாக ஷோரூம் செல்ல முடியாதவர்கள் ஆன்லைன் மூலம் கூட இந்த காரை புக்கிங் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சீனாவில் தயாரிக்கப்படும் கார்களை தான் டெஸ்லா நிறுவனம் இந்தியாவிற்குள் இறக்குமதி செய்து விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் தற்போது டெலிவரியை துவங்கவில்லை.

டெஸ்லா நிறுவனம் தனது மாடல் ஒய் காரின் டெலிவரி குறித்த விபரங்களை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த காரின் ரியர் வீல் டிரைவ் வேரியன்ட் கார்கள் இந்தாண்டு 3வது காலாண்டில் டெலிவரி துவங்கப்படும் என்றும், லாங் ரேஞ்ச் வேரியன்ட் கார்களின் டெலிவரி 4ம் காலாண்டில் துவங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சரியான தேதி விபரங்கள் வெளியாகவில்லை.

tesla second showroom

டெஸ்லா மாடல் ஒய் காிரன் ரியர் வீல் டிரைவ் வேரியன்ட் ரூ59.89 லட்சம் என்ற விலையிலும், லாங் ரேஞ்ச் வேரியன்ட் ரூ67.89 லட்சம் என்ற விலையிலும் விற்பனையாகி வருகிறது. இந்த கார்களின் ஆன்ரோடு விலையை பொருத்தவரை ரியர் வீல் டிரைவ் வேரியன்ட் ரூ61.07 லட்சம் என்ற விலையிலும், லாங் ரேஞ்ச் வேரியன்ட் ரூ69.15 லட்சம் என்ற விலையிலும் விற்பனையாகி வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டெஸ்லா நிறுவனம் தீவிரமாக தனது கார்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் இந்தியா முழவதும் அடுத்தடுத்து ஷோரூம்களை திறக்கும் என எதிர்பார்க்கலாம். டெஸ்லா கார்கள் குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Tuesday, August 5, 2025, 13:45 [IST]
English summary
Tesla second showroom india delhi aerocity aug 11
மேலும்... #tesla #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X