தேதி குறிச்சிட்டாங்க! டெஸ்லாவின் முதல் இந்திய ஷோரூம் திறக்கபோறாங்க! காரோட விலை எவ்வளவு தெரியுமா?
டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது கார்களின் விற்பனையை துவங்கப்போவது உறுதியாகியுள்ள நிலையில் இது மிக விரைவில் நடக்கப்போவதாக தகவல் கிடைத்துள்ளது.ஏற்கனவே அந்நிறுவனம் மும்பை மற்றும் டெல்லியில் தனது ஷோரூம்களை அமைக்க திட்டமிட்டிருந்த நிலையில் தனது முதல் ஷோரூமை திறக்கும் தேதி வெளியாகியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம்.
டெஸ்லா நிறுவனம் உலகில் சிறந்த கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது. அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளில் இந்நிறுவனம் ஆலை அமைத்து வாகனங்களை தயார் செய்து வருகிறது. இந்நிறுவனம் உலகின் 3வது மிகப்பெரிய வாகன மார்கெட்டான இந்தியாவில் தனது வாகன விற்பனையை துவங்க முடிவு செய்துள்ளது. இந்தியாவில் இறக்குமதி வரி காரணமாக இவ்வளவு காலம் இந்நிறுவனம் வாகனங்களை விற்பனை செய்யாமல் இருந்து வந்தது.

இந்நிலையில் மத்திய அரசு இந்தியாவில் ஆலை அமைக்கும் குறிப்பிட்ட விதிமுறையின் கீழ் ஒரு நிறுவனம் வந்தால் அந்நிறுவனம் குறிப்பிட்ட அளவிலான வாகனங்களை குறைவான விலையில் இந்தியாவிற்குள் இறக்குமதி செய்ய முடியும் என புதிய திட்டத்தை அறிவித்த நிலையில் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது காரை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.
இந்நிலையில் ஏற்கனவே இந்நிறுவனம் டில்லி மற்றும் மும்பையில் தனது ஷோரூம்களை அமைக்க திட்டமிட்டிரந்த நிலையில் மும்பையில் தனது முதல் ஷோரூமை வரும் ஜூலை மாதம் திறக்க திட்டமிட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிறுவனம் படிப்படியாக இந்தியாவின் மற்ற நகரங்களிலும் ஷோரூமை திறக்கும் என எதிர்பார்க்கலாம்.

மும்பையை தொடர்ந்து இரண்டாவது ஷோரூம் டில்லியில் திறக்கப்படும் என என எதிர்பார்க்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல் இந்தியாவில் அந்நிறுவனம் முதலில் இறக்குமதி செய்து விற்பனை செய்யும் கார்கள் எல்லாம் சீனாவில் தயாரிக்கப்பட்ட கார்களாக இருக்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது போக வாகனங்களுக்கான சூப்பர் சார்ஜர் பாகங்கள், காருக்கான உதிரிபாகங்கள், ஆக்ஸசரீஸ், உள்ளிட்டவைகளை சீனா, அமெரிக்கால நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளது.
ஏற்கனவே இந்நிறுவனம் தனது மாடல் ஒய் காரை ஏற்கனவே மும்பைக்கு கொண்டு வந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த கார் இந்திய ரூபாய் மதிப்பில் ரூ27 லட்சம் என மதிப்பிடப்படுகிறது. தற்போது இந்நிறுவனம் இதுவரை இந்தியாவில் ஆலை அமைக்கும் ஒப்பந்தத்தை செய்யவில்லை என்றால் தற்போது உள்ள கார்களுக்கு 70 சதவீதம் வரி விதிக்கப்படும். அப்படி பார்த்தால் ரூ21 லட்சம் வரியாக மட்டுமே செலுத்த வேண்டும்.

இந்த இரண்டும் சேர்த்து தான் காரின் விலையாக இந்தியாவில் நிர்ணயம் செய்யப்படும். இந்த விலை அதிக விலையாக இருக்கலாம். இருந்தாலும் டெஸ்லா நிறுவனம் வாகன அறிமுகத்தின் போது தான் விலையை அறிவிக்கும். முதலில் மக்களின் கவனத்தை ஈர்க்கவும், விற்பனையை சூப்பராக ஸ்டார்ட் செய்யவும் இந்த நிறுவனம் விலையை குறைத்து விற்பனை செய்தாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் டெஸ்லா நிறுவனத்தின் வருகைக்காக பலர் காத்திருக்கின்றனர். இந்த கார் வந்ததும் புக்கிங் குவியும் என எதிர்பார்க்கலாம். ஆனால் ஆரம்பகட்டத்தில் இந்த காரின்விலை அதிகமாக இருந்தாலும் இந்த நிறுவனம் இந்தியாவில் ஆலை அமைக்கும் முடிவை உறுதிசெய்துவிட்டால் குறைந்த வரியில் வாகனத்தை இறக்குமதி செய்ய முடியும். ஆலை துவங்கப்பட்டால் மேலும் விலை குறையும் என நாம் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









