தமிழ்நாடு லிஸ்ட்லயே இல்ல! இவி விற்பனையில் முதலிடம் பிடித்த மாநிலம் இது தான்!
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை மிக வேகமாக அதிகரித்து வருகிறது. பல மாநிலங்களில் மக்கள் அதிக அளவில் அளவில் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கி குவித்து வருகின்றனர். இதன்படி ஒவ்வொரு மாநிலங்களிலும் எவ்வளவு எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையாகியுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் முதலிடம் பிடித்த மாநிலம் எது? எவ்வளவு வாகனங்கள் விற்பனையாகியுள்ளது என்ற விபரத்தை காணலாம் வாருங்கள்.
உ.பி மாநிலம் தான் தற்போது எலெக்ட்ரிக் வாகன விற்பனையில் முன்னணியில் இருகு்கும் மாநிலம் ஆகும். இந்நிறுவனம் தற்போது எலெக்ட்ரிக் வாகன விற்பனையில் டில்லி, மகாராஷ்டிரா ஆகிய மாநிங்களை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த மாநிலத்தில் மொத்தம் 4.14 லட்சம் எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. அதே நேரம் டில்லியில் 1.83 லட்சம் வாகனங்களும், மகாராஷ்டிராவில் 1.79 லட்சம் வாகனங்களும் விற்பனையாகியுள்ளன.

இந்த மாநிலத்தில் மிக அதிக அளவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையாக முக்கியமான காரணம் அம்மாநிலத்தில் உள்ள எலெக்ட்ரிக் வாகன பாலிசி தான். ஃபேம் திட்டத்தின் மூலம் அம்மாநில அரசு பல சமலுகைகளை வழங்கி வருவதால் அங்கு எலெக்ட்ரிக் வாகனங்கள் சிறப்பாக விற்பனயைாகிறது. ஃபேம் 1 மற்றும் 2ம் கட்ட திட்டத்தில் அதிக பலன் பெற்றது உ.பி மாநிலம் தான்.
கடந்த 2022ம் ஆண்டு அம்மாநிலத்தில் எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டிற்கான புதிய பாலிசி ஒன்ற அம்மாநில அரசு அமலுக் கொண்டு வந்தது. இது எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனையை மேலும் அதிகரிக்க உதவியது. இது மட்டுமல்லாமல் அம்மாநிலத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களால் ரூ30 ஆயிரம் கோடி முதலீடும், 10 லட்சம் பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்பும் கிடைத்துள்ளது.

அம்மாநிலத்தில் ஒட்டு மொத்த விற்பனையில் எலெக்ட்ரிக் ரிக்ஷாக்கள் மட்டும் 85 சதவீத எலெக்ட்ரிக் வாகன விற்பனை இடத்தை பிடித்துள்ளது. இது தான் இவ்வளவு அதிகமான விற்பனைக்கு முக்கியமான காரணம். அம்மாநிலத்தில் உள்ள 300 முனிசிபல் பாடிகளில் தற்போது புதிய சார்ஜிங் ஸ்டேஷன்கள் அமைக்கப்பட்டுள்ளுது. அயோத்தி பகுதி தற்போது அதிக மக்கள் வரும் சுற்றுலா தளமாக இருப்பதால் அங்கும் இவி சார்ஜிங் ஸ்டேஷன்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தற்போது உ.பி மாநிலத்தில் மொத்தம் 33 ஆயிரம் இவி சார்ஜர்கள் பயன்பாட்டில் உள்ளது. அதில் 35 சதவீதம் ஃபாஸ்ட் சார்ஜர்கள் தான் வழங்கப்படுகிறது. சமீபத்தில் வெளியான ஒரு ஆய்வில் 2030ம் ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் 10 கோடிக்கும் அதிமான இவி வாகனங்கள் பயன்பாட்டில் இருக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்கள் இருக்கும் அளவிற்கு எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜர்கள் இல்லை. இந்த செட்டப்பை ஏற்படுத்துவதில் இந்தியா சற்று பின்தங்கியே உள்ளது. எலெக்ட்ரிக் வாகனங்கள் நீண்ட நேரம் சார்ஜ் ஏற வேண்டியது இருப்பதால் அங்கு வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இதை விற்பனையில் சற்று பின் தங்கியுள்ளனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் மிகப்பெரிய அளவில் விற்பனையை பெற்று வருகிறது. எதிர்காலத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களின் தாக்கம் அதிகமாக இருக்கும். உ.பி மாநிலம் இதற்கு முன்னுதாரணமாக இருக்கிறது. மற்ற மாநிலங்களிலும் இது போன்ற பாலிசியை கொண்டு வந்தால் இவி விற்பனை சிறப்பாக இருக்கும்.


Click it and Unblock the Notifications









