7 பேர் போற கார்! காஸ்ட்லியா இருந்தாலும் இத்தனை பேர் வாங்குறாங்களா?

இந்தியாவில் 7 சீட்டர் கார்களின் விற்பனை கணிசமாக அதிகமாக உள்ளது. குடும்பத்துடன் பயணிக்க ஏற்ற கார்கள் என்பதால் இந்த ரக கார்கள் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகி வருகின்றன. அதன்படி கடந்த அக்டோபர் மாதம் இந்தியாவில் விற்பனையான டாப் 10 7 சீட்டர் கார்கள் குறித்த விபரங்களை காணலாம் வாருங்கள்.

10. டாடா சஃபாரி

டாடா நிறுவனத்தின் சஃபாரி கார் இந்த பட்டியலில் 10வது இடத்தில் இருக்கிறது. கடந்த அக்டோபர் மாதம் மொத்தம் 2510 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்தாண்டு அக்டோபர் மாதம் 2086 கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது 20 சதவீதம் அளவிற்கு விற்பனை அதிகமாகியுள்ளது.

Top 10 7 Seater Car oct 2025

9. டொயோட்டா ஃபார்ச்சூனர்

டொயோட்டா நிறுவனத்தின் ஃபார்ச்சூனர் காரை பொருத்தவரை கடந்த அக்டோபர் மாதம் 2920 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு அக்டோபர் மாதம் 3684 கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது இந்த காரின் விற்பனை 21 சதவீதம் குறைந்துள்ளது.

8. ரெனால்ட் டிரைபர்

ரெனால்ட் நிறுவனத்தின் டிரைபர் காரின் விற்பனை கடந்த அக்டோபர் மாதம் 3170 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு அக்டோபர் மாதம் 2111 கார்கள் விற்பனையாகியுள்ளன. தற்போது விற்பவனை 50 சதவீதம் அதிகமாகியுள்ளது.

Top 10 7 Seater Car oct 2025
Top 10 7 Seater Car oct 2025

7. மாருதி எக்ஸ்எல்6

மாருதி நிறுவனத்தின் எக்ஸ்எல் 6 காரை பொருத்தவரை கடந்த அக்டோர் மாதம் 3611 கார்கள் விற்பனவையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு அக்டோபர் மாதம் 3285 கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது விற்பனவை 10 சதவீதம் அதிகமாகியுள்ளது.

6 கியா கேரன்ஸ்

கியா நிறுவனத்தின் கேரன்ஸ் காரை பொருத்தவரை கடந்த அக்டோர் மாதம் 8779 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு அக்டோபர் மாதம் 6384 கார்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தது. தற்போது இந்த காரின் விற்பனை 38 சதவீதம் அதிகமாகியுள்ளது.

5. மஹிந்திரா எக்ஸ்யூவி 700

மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யூவி 700 காரை பொருத்தவரை கடந்த அக்டோபர் மாதம் 10,139 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு அக்டோபர் மாதம் 10,435 கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது இந்த காரின் விற்பனை 3 சதவீதம் குறைந்துள்ளது.

4. டொயோட்டா இன்னோவா

டொயோட்டா நிறுவனத்தின் இன்னோவா காரை பொருத்தவரை கடந்த அக்டோபர் மாதம் 11,089 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு அக்டோபர் மாதம் 8838 கார்கள் விற்பனையாகியிருந்தது.அதை ஒப்பிடும் போது தற்போது 25 சதவீதம் இந்த காரின் விற்பனை அதிகமாகியுள்ளது.

3. மஹிந்திரா பொலிரோ

மஹிந்திரா நிறுவனத்தின் பொலிரோ காரை பொருத்தவரை கடந்த அக்டோபர் மாதம் 14343 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு அக்டோர் மாதம் 9849 கார்கள் தான் விற்பனையாகயிருந்தது. தற்போது 46 சதவீதம் இந்த காரின் விற்பனை அதிகரித்துள்ளது.

2. மஹிந்திரா ஸ்கார்பியோ

மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்பியோ காரை பொருத்தவரை கடந்த அக்டோபர் மாதம் 17,880 கார்கள் விற்பனையாகியுள்ளது. கடந்தாண்டு அக்டோபர் மாதம் 15,677 கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது இந்த காரின் விற்பனை 14 சதவீதம் குறைந்துள்ளது.

1. மாருதி எர்டிகா

மாருதி நிறுவனத்தின் எர்டிகா காரை பொருத்தவரை கடந்த அக்டோபர் மாதம் 20,087 கார்கள் விற்பவனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு அக்டோபர் மாதம் 18,785 கார்கள் தான் விற்பனையாகயிருந்தது. தற்போது 7 சதவீதம் அளவிற்கு விற்பனை அதிகரித்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து : இந்தியாவில் 7 சீட்டர் காரின் விற்பனை மிக வேகமாக வளர்ந்து வருகிறது. தற்போது பலர் குடும்பத்துடன் பயணிக்க ஏற்ற காரை விரும்பி தேடி வாங்கி வருகின்றரன். இந்த கார்கள் நிச்சயம் எதிர்காலத்தில் பல்வேறு புதிய வரவுகளுடன் விரிவடையும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Friday, November 14, 2025, 17:50 [IST]
English summary
Top 10 7 seater car oct 2025 sales ertiga bolero innova
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X