7 பேர் போற காஸ்ட்லி காரா இருந்தாலும், இத்தனை ஆயிரம் பேர் இந்த காரை வாங்கிட்டாங்களா?
இந்தியாவில் 7 நபர்கள் பயணிக்கும் பயணிகள் வாகனங்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்ப்பு கிடைக்கிறது. குடும்பத்துடன் பயணிக்க ஏற்றதாக இருப்பதால் மக்கள் பலர் இந்த ரக கார்களை அதிகம் விரும்பி வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் கடந்த ஜூலை மாதம் விற்பனையான டாப் 10 7 சீட்டர் கார்கள் குறித்த விபரங்களை காணலாம் வாருங்கள்.
டாடா சஃபாரி
டாடா நிறுவனம் சஃபாரி கார் இந்த பட்டியலில் 10வது இடத்தில் இருக்கிறது. இ்நிறுவனம் கடந்த ஜூலை மாதம் 1242 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு ஜூலை மாதம் 2109 வாகனங்கள் விற்பனையாகியிருந்தது. இந்த காரின் விற்பனை 41 சதவீத விற்பனை சரிவை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ரெனால்ட் டிரைபர்
ரெனால்ட் டிரைபர் கார் இந்த பட்டியலில் 9வது இடத்தில் இருக்கிறது. இந்த கார் கடந்த ஜூலை மாதம் 1987 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு ஜூலை மாதம் வெறும் 1457 கார்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தது. இந்த காரின் விற்பனை 36 சதவீதம் விற்பனை அதிகமாகியுள்ளது.
மாருதி எக்ஸ்எல் 6
மாருதி நிறுவனத்தின் எக்ஸ்எல் 6 கார் இந்த பட்டியலில் 8வது இடத்தில் இருகு்கிறது. இந்த கார் கடந்த ஜூலை மாதம் 2146 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம் 2923 வாகனங்கள் விற்பனையாகியிருந்தது. இந்த காரின் விற்பனை 27 சதவீதம் விற்பனை குறைவாகியுள்ளது.

டொயோட்டா ஃபார்ச்சூனர்
டொயோட்டா நிறுவனத்தின் ஃபார்ச்சூனர் கார் இந்த பட்டியலில் 7வது இடத்தில் இருக்கிறது. கடந்த ஜூலை மாதம் மொத்தம் 3233 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம் 2380 கார்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தது. தற்போது 36 சதவீதம் விற்பனை அதிகமாகியுள்ளது.
மஹிந்திரா எக்ஸ்யூவி 700
மஹிந்திரா எக்ஸ்யூவி 700 கார் இந்த பட்டியலில் 6வது இடத்தில் இருக்கிறது. இந்த கார் கடந்த ஜூலை மாதம் 7054 கார்கள் விற்பனவையாகியுள்ளன. இதுவே கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம் 7769 கார்கள் விற்பவனையாகியுள்ளது. இந்த காரின் விற்பனை 9 சதவீதம் விற்பனை சரிவடைந்துள்ளது.

மஹிந்திரா பொலிரோ
மஹிந்திரா நிறுவனத்தின் பொலிரோ கார் பட்டியலில் 5வது இடத்தில் இருக்கிறது. கடந்த ஜூலை மாதம் 7513 கார்கள் விற்பனையாகியுள்ளது. இந்த கார் கடந்தாண்டு ஜூலை மாதம் 6930 கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது 8 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது.
கியா கேரன்ஸ்
கியா நிறுவனத்தின் கேரன்ஸ் கார் இந்த பட்டியலில் 4வது இடத்தில் இருக்கிறது. இந்த கார் கடந்த ஜூலை மாதம் 7602 கார்கள் விற்பனையாகியுள்ளது. இந்த கார் கடந்தாண்டு ஜூலை மாதம் மொத்தம் 5679 கார்கள் விற்பனையாகியுள்ளது. இந்த காரின் விற்பனை 34 சதவீதம் அதிகரித்துள்ளது.
டொயோட்டா இன்னோவா
டொயோட்டா நிறுவனத்தின் இன்னோவா காரை பொருத்தவரை இந்த பட்டியலில் 3வது இடத்தில் இருக்கிறது. இந்த கார் கடந்த ஜூலை மாதம் 9119 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு ஜூலை மாதம் 9912 கார்கள் விற்பனவையாகியுள்ளது. இதன் மூலம் இந்நிறுவனம் 8 சதவீத விற்பனை சரிவு ஏற்பட்டுள்ளது.
மஹிந்திரா ஸ்கார்பியோ
மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்பியோ கார் இந்த பட்டியலில் 2வது இடத்தில் இருக்கிறது. இந்த கார் கடந்த ஜூலை மாதம் 13747 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு ஜூலை மாதம் 12,237 கார்கள் விற்பனையாகியிருந்தது. இந்த காரின் விற்பனை 12 சதவீத விற்பனை அதிகரித்துள்ளது.
மாருதி சுஸூகி எர்டிகா
மாருதி நிறுவனத்தின் எர்டிகா கார் இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது. கடந்த ஜூலை மாதம் மொத்தம் 16,604 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம் 15,701 வாகனங்கள் விற்பனையாகியிருந்தது. இந்த கார் தற்போது 6 சதவீதம் விற்பனையாகியுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் 7 சீட்டர் வாகனங்கள் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. குடும்பத்துடன் பயணிக்க ஏற்ற காராக இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கார் மிகப்பெரிய அளவில் வளர்ச்சியை சந்தித்து வருவது தெளிவாக தெரிகிறது. இந்த கார்கள் எதிர்காலத்தில் மிகப்பெரிய அளவில் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது


Click it and Unblock the Notifications
