குடும்பத்தோட 7 பேர் ஒரே கார்ல போறதுக்கு எந்த காரை அதிகமா வாங்குறாங்க தெரியுமா?
இந்தியாவில் குடும்பத்துடன் பயணிக்கும் ரக கார்களின் விற்பனை சமீபகாலமாக அதிகமாகி வருகிறது. அதிக சீட்டர் கொண்ட கார்களை மக்கள் விரும்ப துவங்கிவிட்டனர். இதனால் 7 சீட்டர் கார்களின் விற்பனை அதிகரித்து வருகிறது. இதன்படி கடந்த நவம்பர் மாதம் இந்தியாவில் விற்பனையான டாப் 10 7 சீட்டர் கார்கள் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
10. டாடா சஃபாரி
டாடா நிறுவனத்தின் சஃபாரி கார் இந்த பட்டியலில் 10வது இடத்தில் இருக்கிறது. இந்த கார் கடந்த நவம்பர் மாதம் மொத்தம் 1895 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு நவம்பர் மாதம் 1563 கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது 21 சதவீதம் அளவிற்கு இந்த காரின் விற்பனை வளர்ச்சியடைந்துள்ளது.

9. ரெனால்ட்
ரெனால்ட் நிறுவனத்தின் டிரைபர் கார் இந்த பட்டியலில் 9வது இடத்தில் இருக்கிறது. இந்த கார் கடந்த நவம்பர் மாதம் மொத்தம் 2064 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு நவம்பர் மாதம் 1486 கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது 21 சதவீதம் அளவிற்கு இந்த காரின் விற்பனை வளர்ச்சியடைந்துள்ளது.
8. மாருதி எக்ஸ்எல்6
மாருதி நிறுவனத்தின் எக்ஸ்எல்6 கார் இந்த பட்டியலில் 80வது இடத்தில் இருக்கிறது. இந்த கார் கடந்த நவம்பர் மாதம் மொத்தம் 2445 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு நவம்பர் மாதம் 2483கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது 2 சதவீதம் அளவிற்கு இந்த காரின் விற்பனை குறைந்துள்ளது.

7. டொயோட்டா ஃபார்ச்சூனர்
டொயோட்டா நிறுவனத்தின் ஃபார்ச்சூனர் கார் இந்த பட்டியலில் 7வது இடத்தில் இருக்கிறது. இந்த கார் கடந்த நவம்பர் மாதம் மொத்தம் 2676கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு நவம்பர் மாதம் 2865 கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது 7 சதவீதம் அளவிற்கு இந்த காரின் விற்பனை குறைந்துள்ளது.
6. மஹிந்திரா எக்ஸ்யூவி 700
மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யூவி 700 கார் இந்த பட்டியலில் 6வது இடத்தில் இருக்கிறது. இந்த கார் கடந்த நவம்பர் மாதம் மொத்தம் 6176 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு நவம்பர் மாதம் 9100 கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது 32 சதவீதம் அளவிற்கு இந்த காரின் விற்பனை வளர்ச்சியடைந்துள்ளது.

5. கியா கேரன்ஸ்
கியா நிறுவனத்தின் கேரன்ஸ் கார் இந்த பட்டியலில் 10வது இடத்தில் இருக்கிறது. இந்த கார் கடந்த நவம்பர் மாதம் மொத்தம் 6530 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு நவம்பர் மாதம் 5672 கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது 15 சதவீதம் அளவிற்கு இந்த காரின் விற்பனை வளர்ச்சியடைந்துள்ளது.
4. டொயோட்டா இன்னோவா
டொயோட்டா நிறுவனத்தின் இன்னோவா கார் இந்த பட்டியலில் 4வது இடத்தில் இருக்கிறது. இந்த கார் கடந்த நவம்பர் மாதம் மொத்தம் 9295 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு நவம்பர் மாதம் 7867 கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது 18 சதவீதம் அளவிற்கு இந்த காரின் விற்பனை வளர்ச்சியடைந்துள்ளது.
3. மஹிந்திரா பொலிரோ
மஹிந்திரா நிறுவனத்தின் பொலிரோ கார் இந்த பட்டியலில் 3 வது இடத்தில் இருக்கிறது. இந்த கார் கடந்த நவம்பர் மாதம் மொத்தம் 10,521 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு நவம்பர் மாதம் 7045 கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது 49 சதவீதம் அளவிற்கு இந்த காரின் விற்பனை வளர்ச்சியடைந்துள்ளது.
2.மஹிந்திரா ஸ்கார்பியோ
மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்பியோ கார் இந்த பட்டியலில் 2 வது இடத்தில் இருக்கிறது. இந்த கார் கடந்த நவம்பர் மாதம் மொத்தம் 15,616 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு நவம்பர் மாதம் 12,704 கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது 23 சதவீதம் அளவிற்கு இந்த காரின் விற்பனை வளர்ச்சியடைந்துள்ளது.
1. மாருதி எர்டிகா
மாருதி நிறுவனத்தின் எடிர்கா கார் இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது. இந்த கார் கடந்த நவம்பர் மாதம் மொத்தம் 16,197 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு நவம்பர் மாதம் 15,150 கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது 7 சதவீதம் அளவிற்கு இந்த காரின் விற்பனை வளர்ச்சியடைந்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் குடும்பத்துடன் பயணிக்க ஏற்ற காருக்கு சமீப காலமாக டிமாண்ட் அதிகமாகிவரும் நிலையில் இந்த செக்மெண்டில் மார்கெட் விரிவடைந்து வருகிறது. பல புதிய கார்களும் வருகின்றன. இதனால் விற்பனை சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications









