ரோட்டுல எங்க திரும்பினாலும் இந்த கம்பெனி காரை பார்க்கலாம்! முதல் 10 இடத்தில் இந்த கம்பெனிகள் தான் இருக்குது!

இந்தியாவில் கடந்த மே மாத விற்பனை விபரங்களை வெளியிட்டுள்ளது. இதன்படி எந்தெந்த நிறுவனங்கள் எவ்வளவு வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்தாண்டு விற்பனையை விட தற்போது எவ்வளவு அதிகரித்துள்ளது. அல்லது குறைந்துள்ளது என்ற விரிவான விபரங்களை இங்கே காணலாம் வாருங்கள்.

இந்த பட்டியலில் 10 வது இடத்தில் ஃபோக்ஸ்வேகன் நிறவனம் இருக்கிறது. இந்நிறுவனம் கடந்த மே மாதம் 2848 வாகனங்கள் விற்னையாகி வருகிறது. இதுவே கடந்த 2024ம் ஆண்டு மே மாதம் 3273 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இதனால் கடந்தாண்டை விட 13 சதவீதம் விற்பனை குறைந்துள்ளது.

Top 10 Car Brands May 2025

இந்த பட்டியலில் 9வது இடத்தில் ஹோண்டா நிறுவனம் இருக்கிறது. இந்நிறுவனம் கடந்த மே மாதம் மொத்தம் 3950 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்த 2024ம் ஆண்டு மே மாதம் மொத்தம் 4822 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்தாண்டு விற்பனை 18.1 சதவீதம் அளவிற்கு விற்பனை குறைந்துள்ளது.

இந்த பட்டியலில் 8வது இடத்தில் எம்ஜி நிறுவனம் இருக்கிறது. கடந்த 2025ம் ஆண்டு மொத்தம் 6304 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்த 2024ம் ஆண்டு மே மாதம் மொத்தம் 4,769 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளது. கடந்த மே மாதம் விற்பனை 32.2 சதவீதம் அதிகரித்துள்ளது.

Top 10 Car Brands May 2025

இந்த பட்டியலில் 7வது இடத்தில் ஸ்கோடா நிறுவனம் இருக்கிறது. இந்நிறுவனம் கடந்த மே மாதம் மொத்தம் 6740 கார்கள் விற்பனையாகியள்ளது. இதுவே கடந்த 2024ம் ஆண்டு மே மாதம் 2884 கார்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தது. கடந்த மே மாதம் மொத்தம் 133.7 சதவீதம் அளவிற்கு விற்பனை வளர்ச்சியடைந்துள்ளது.

இந்த பட்டியலில் 6வது இடத்தில் கியா நிறுவனம் இருக்கிறது. கடந்த மே மாதம் மொத்தம் 22315 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்த 2024ம் ஆண்டு மே மாதம் மொத்தம் 19500 கார்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளது. தற்போது இந்த நிறுவனம் 14.4 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது.

Top 10 Car Brands May 2025

இந்த பட்டியலில் 5வது இடத்தில் டொயோட்டா நிறுவனம் இருக்கிறது. இந்நிறுனவம் கடந்த மே மாதம் மொத்தம் 29280 கார்கள் விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்த 2024ம் ஆண்டு மே மாதம் மொத்தம் 23,959 கார்கள் விற்பனையாகியிருந்தது. இந்த வகையில் இந்த நிறவனம் 22.2 சதவீதம் விற்பனை உயர்வை சந்தித்துள்ளது.

இந்த பட்டியலில் 4வது இடத்தில் டாடா நிறுவனம் இந்நிறுவனம் கடந்த ஆண்டுமே மாதம் 41557 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்த 2024ம் ஆண்டு மே மாதம் மொத்தம் 46700 வாகனங்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது 11 சதவீதம் விற்பனை குறைந்துள்ளது.

Top 10 Car Brands May 2025

இந்த பட்டியலில் 3வது இடத்தில் ஹூண்டாய் நிறுவனம் இருக்கிறது. இந்நிறுவனம் கடந்த மே மாதம் மொத்தம் 43681 வாகனங்கள் விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்த 2024ம் ஆண்டு மே மாதம் மொத்தம் 49,151 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதன் படி விற்பனை 10.8 சதவீதம் விற்பனை குறைந்துள்ளது.

இந்த பட்டியலில் 2வது இடத்தில் மஹிந்திரா நிறுவனம் இருக்கிறது. கடந்த மே மாதம் மொத்தம் 52431 வாகனங்களை இந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்த 2024ம் ஆண்டு மே மாதம் மொத்தம் 43218 வாகனங்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது 21.3 சதவீதம் அளவிற்கு விற்பனை சரிவடைந்துள்ளது.

இந்த பட்டியலில் முதலிடத்தில் மாருதி சுஸூகி நிறுவனம் தான் இருக்கிறது. இந்நிறுவனம் கடந்த மே மாதம் மொத்தம் 1,35,962 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்த 2024ம் ஆண்டு மே மாதம் 1,44,002 வாகனங்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது இந்நிறுவனம் 5.6 சதவீதம் அளவிற்கு விற்பனை சரிவடைந்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வாகன தயாரி்ப்பு நிறுவனங்களில் அசைக்க முடியாத இடத்தில் மாருதி நிறுவனம் இருக்கிறது. ஹூண்டாய், டாடா, மஹிந்திரா நிறுவனங்களுக்கு இடையே 2ம் இடம் இடத்திற்கு போட்டி அதிகமாகியுள்ளது. இந்த பட்டியலில் உங்களுக்கு பிடித்த நிறுவனம் எது? அந்நிறுவனத்தின் எந்த கார் உங்களுக்க பிடிக்கும்? என்பதை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Thursday, June 5, 2025, 9:50 [IST]
English summary
Top 10 car brands may 2025 maruti hyundai mahindra sales report
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X