எஸ்யூவி கார்களுக்கு விழுந்த மரண அடி! சின்ன கார்களுக்கு அடிக்கப்போகும் ஜாக்பாட்!
இந்தியாவில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் கடந்த ஆகஸ்ட் மாத விற்பனை விபரங்களை வெளியிட்டுள்ள நிலையில் இதில் டாப் 10 எஸ்யூவி கார்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் உள்ள பெரும்பாலான கார்கள் விற்பனையில் சரிவை சந்தித்துள்ளன. இந்நிலையில் சிறிய ரக கார்களின் விலை இந்த மாதம் குறையும் நிலையில் இனி எஸ்யூவி காரை விட சிறிய ரக கார்களின் விற்பனை அதிகமாகும் என எதிர்பார்க்கலாம். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
10.சோனட்
கியா நிறுவனத்தின் சோனட் கார் இந்த பட்டியலில் 10 வது இடத்தில் இருக்கிறது. இந்த கார் கடந்த ஆகஸ்ட் மாதம் மொத்தம் 7627 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 9459 கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது 1832 கார்கள் குறைவாக விற்பனையாகியிருந்தது. இது 19.37 சதவீத விற்பனை சரிவாகும்.

9. பொலிரோ
மஹிந்திரா நிறுவனத்தின் பொலிரோ கார் இந்த பட்டியலில் 9 வது இடத்தில் இருக்கிறது. இந்த கார் கடந்த ஆகஸ்ட் மாதம் மொத்தம் 8,054கார்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 8,840 கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது 786 கார்கள் குறைவாக விற்பனையாகியிருந்தது. இது 8.89 சதவீத விற்பனை சரிவாகும்.
8. வென்யூ
ஹூண்டாய் நிறுவனத்தின் வென்யூ கார் இந்த பட்டியலில் 8 வது இடத்தில் இருக்கிறது. இந்த கார் கடந்த ஆகஸ்ட் மாதம் மொத்தம் 8,814 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 7,419கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது 1395 கார்கள் கூடுதலாக விற்பனையாகியிருந்தது. இது 18.80 சதவீத விற்பனை வளர்ச்சியாகும்.

7. ஹைரைடர்
டொயோட்டா நிறுவனத்தின் அர்பன் க்ரூஸர் ஹைரைடர் கார் இந்த பட்டியலில் 7 வது இடத்தில் இருக்கிறது. இந்த கார் கடந்த ஆகஸ்ட் மாதம் மொத்தம் 9845 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 4385 கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது 5460 கார்கள் அதிகமாக விற்பனையாகியிருந்தது. இது 124.52 சதவீத விற்பனை வளர்ச்சியாகும்.
6. ஸ்கார்பியோ
மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்பியோ கார் இந்த பட்டியலில் 6 வது இடத்தில் இருக்கிறது. இந்த கார் கடந்த ஆகஸ்ட் மாதம் மொத்தம் 10,785 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 16,121 கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது 5336 கார்கள் குறைவாக விற்பனையாகியிருந்தது. இது 33.10 சதவீத விற்பனை சரிவாகும்.

5. பஞ்ச்
டாடா நிறுவனத்தின் பஞ்ச் கார் இந்த பட்டியலில் 5 வது இடத்தில் இருக்கிறது. இந்த கார் கடந்த ஆகஸ்ட் மாதம் மொத்தம் 12,825 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 13,902 கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது 1077 கார்கள் குறைவாக விற்பனையாகியிருந்தது. இது 7.75 சதவீத விற்பனை சரிவாகும்.
4. ஃபிராங்க்ஸ்
மாருதி நிறுவனத்தின் ஃபிராங்க்ஸ் கார் இந்த பட்டியலில் 4 வது இடத்தில் இருக்கிறது. இந்த கார் கடந்த ஆகஸ்ட் மாதம் மொத்தம் 12,872கார்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 10,925 கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது 1947 கார்கள் அதிகமாக விற்பனையாகியிருந்தது. இது 17.82 சதவீத விற்பனை வளர்ச்சியாகும்.
3. பிரெஸ்ஸா
மாருதி நிறுவனத்தின் பிரெஸ்ஸா கார் இந்த பட்டியலில் 3 வது இடத்தில் இருக்கிறது. இந்த கார் கடந்த ஆகஸ்ட் மாதம் மொத்தம் 13,747 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 12,237 கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது 1510 கார்கள் அதிகமாக விற்பனையாகியிருந்தது. இது 12.37 சதவீத விற்பனை வளர்ச்சியாகும்.
2. நெக்ஸான்
டாடா நிறுவனத்தின் நெக்ஸான் கார் இந்த பட்டியலில் 2 வது இடத்தில் இருக்கிறது. இந்த கார் கடந்த ஆகஸ்ட் மாதம் மொத்தம் 14,065 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 14,676 கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது 611 கார்கள் குறைவாக விற்பனவையாகியிருந்தது. இது 4.16 சதவீத விற்பனை சரிவாகும்.
1. கிரெட்டா
ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா கார் இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது. இந்த கார் கடந்த ஆகஸ்ட் மாதம் மொத்தம் 16,898 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 17,350 கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது 452 கார்கள் குறைவாக விற்பனவையாகியிருந்தது. இது 2.61 சதவீத விற்பனை சரிவாகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த டாப் 10 பட்டியலில் 6 கார்கள் விற்பனையில் சரிவை சந்தித்துள்ளன. இதற்கிடையில் சிறிய ரக கார்களின் விலை இந்த மாதம் 22ம் தேதி குறையப்போகிறது. இதை எல்லாம் கணக்கில் எடுத்து பார்த்தால் இந்தியாவில்இனி சிறிய ரக கார்களின் விற்பனை எண்ணிக்கை அதிகமாகும். எஸ்யூவி கார்களின் விற்பனை குறையும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









