33 கிமீ மைலேஜ் தரும் கார் தான் இந்தியாவிலேயே அதிகமா விக்குது! டாப் 10 கார் பட்டியல் இது தான்!

ஆகஸ்ட் மாதம் பிறந்துள்ள நிலையில் கடந்த ஜூலை மாத விற்பனை விபரங்களை ஒவ்வொரு வாகன தயாரிப்பு நிறுவனங்களும் வெளியிட்டுள்ளன. அதன்படி இந்தியாவில் அதிகம் விற்பனவையான டாப் 10 கார்கள் பட்டியல் கிடைத்துள்ளது. முதலிடத்தில் இருக்கும் கார் எது? எவ்வளவு கார்கள் விற்பனையாகியுள்ளன? விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

மாருதி சுஸூகி நிறுவனத்தின் பலேனே கார்கள் தான் இந்த பட்டியலில் 10 வது இடத்தில் இருக்கிறது. கடந்த ஜூலை மாதம் மொத்தம் 12,503 கார்கள் விற்பனையாகியள்ளது. இதுவே கடந்தாண்டு ஜூலை மாதம் வெறும் 9,309 கார்கள் விற்பனையாகியிருந்து. தற்போத 34 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது.

Top 10 Cars July 2025

9வது இடத்தில் டாடா நிறுவனத்தின் நெக்ஸான் கார் இருக்கிறது. இந்த கார் கடந்த ஜூலை மாதம் மொத்தம் 12,825 கார்கள் விற்பனவையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு ஜூலை மாதம் 13,902 கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது 8 சதவீதம் அளவிற்கு இந்த காரின் விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளது.

8வது இடத்தில் மாருதி நிறுவனத்தின் ஃபிராங்க்ஸ் கார் இரக்கிறது. இந்த கார் கடந்த ஜூலை மாதம் 12,872 கார்கள் விற்பனையாகியுளு்ளது. இதுவே கடந்தாண்டு ஜூலை மாதம் 10,925 கார்கள் மட்டுமே விற்பனையாகியிருந்து 18 சதவீதம் அளவிற்கு இந்த காரின் விற்பனை கடந்த மாதம் வளர்ச்சிடையந்துள்ளது.

Top 10 Cars July 2025

7வது இடத்தில் மஹிந்திரா ஸ்கார்பியோ கார் இருக்கிறது.இந்த கார் கடந்த ஜூலை மாதம் 13,747 வாகனங்கள் விற்பனவையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு ஜூலை மாதம் 12,237 கார்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தது. தற்போது விற்பனை 12 சதவீதம் அளவிற்கு அதிகரித்துள்ளது.

6வது இடத்தில் மாருதி நிறுவனத்தின் பிரெஸ்ஸா கார் இருக்கிறது. இந்நிறுவனம் கடந்த ஜூலை மாதம் மொத்தம் 14,065 கார்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்தாண்டு ஜூலை மாதம் 14,676 கார்கள் விற்னையாகியிருந்தது. தற்போது 4 சதவீதம் அளவிற்கு விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளது.

Top 10 Cars July 2025
5வது இடத்தில் ஸ்விஃப்ட் கார் இருக்கிறது. இந்த கார் கடந்த ஜூலை மாதம் 14,190 கார்கள் விற்பனவவையாகியுள்ளன. இதுவே கடந்தாண்டு ஜூலை மாதம் 16,854 வாகனங்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது 16 சதவீதம் அளவிற்கு இந்த காரின் விற்பனை கடந்த ஜூலை மாதம் சரிவடைந்துள்ளது.

4வது இடத்தில் மாருதி நிறுவனத்தின் வேகன் ஆர் கார் இருக்கிறது. கடந்த ஜூலை மாதம் இந்த கார் 14,710 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு ஜூலை மாதம் 16,191 கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது 9 சதவீதம் அளவிற்கு இந்த காரின் விற்பனை சரிவடைந்துள்ளது.

Top 10 Cars July 2025
3வது இடத்தில் மாருதி நிறுவனத்தின் எர்டிகா கார் இருக்கிறது. இந்நிறுவனம் கடந்த ஜூலை மாதம் மொத்தம் 16,604 கார்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம் மாதம் 15,701 வாகனங்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது இந்த காரின் விற்பனை 6 சதவீதம் அதிகமாகியுள்ளது.

2வது இடத்தில் ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா கார் இருக்கிறது. இந்த கார் கடந்த ஜூலை மாதம் 16898 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு ஜூலை மாதம் 17,350 கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது 3 சதவீதம் அளவிற்கு இந்த காரின் விற்பவனை சரிவடைந்துள்ளது.

முதலிடத்தில் மாருதி நிறுவனத்தின் டிசையர் கார் இருக்கிறது. இந்த கார் கடந்த ஜூலை மாதம் 20,895 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டுஐ ஜூலை மாதம் 11,647 கார்கள் மட்டுமே விற்பனையாகியிரு்தது. தற்போது 79 சதவீதம் அளவிற்கு விற்பனை அதிகரித்துள்ளது. இந்த பட்டியலிலேயே அதிக விற்பனை வளர்ச்சியை பார்த்த கார் இது தான். இந்த கார் 33 கி.மீ மைலேஜ் தருவது தான் இதன் சிறப்பான விற்பனைக்கு முக்கியமான காரணமாக கருதப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் அதிகம் விற்பனவையாகும் கார்களின் பட்டியல் இதுதான் இதில் மாருதி நிறுவனத்தின் கார்கள் தான் அதிகமாக விற்பனையாகியுள்ளன. இந்த கார்கள் நிச்சயம் தொடர்ந்து சிறப்பாக விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

More from DriveSpark

Article Published On: Thursday, August 7, 2025, 13:10 [IST]
English summary
Top 10 cars july 2025 dzire creta ertiga nexon scorpio baleno
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X