விலை ஜாஸ்தியா இருந்தாலும் இந்தியாவிலேயே அதிக மக்கள் இந்த காரை தான் வாங்குறாங்க! ஏன் தெரியுமா?
கடந்த ஜூன் மாதம் இந்தியாவில் அதிகம் விற்பனையான கார்களின் டாப் 10 பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. வழக்கம் போல இந்த பட்டியலில் மாருத நிறுவனத்தின் கார்கள் தான் அதிகமாக உள்ளது. முதலிடத்தில் ஹூண்டாய் நிறுவனத்தன் கார் இருகு்கிறது. இது போக மஹிந்திரா டாடா, ஆகிய நிறுவனங்களின் கார்களும் உள்ளன. இந்த பட்டியலை விரிவான காணலாம் வாருங்கள்.
10வது இடத்தில் மாருதி நிறுவனத்தின் ஃபிராங்க்ஸ் கார் இருக்கிறது. கடந்த ஜூன் மாதம் மொத்தம் 9815 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்த 2024ம் ஆண்டு ஜூன் மாதம் 9688 கார்கள் விற்பனையாகியிருந்தன. தற்போது 1 சதவீதம் அளவிற்கு விற்பனை அதிகரித்துள்ளது.

9வது இடத்தில் டாடாநிறுவனத்தின் பஞ்ச் கார் இருக்கிறது. கடந்த ஜூன் மாதம் மட்டும் மொத்தம் 10,446 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்த 2024ம் ஆண்டு ஜூன் மாதம் 18,238 கார்கள் விற்பனையாகியிருந்தது. இதை ஒப்பிடும் போது கடந்த மாதம் 43 சதவீதம் விற்பனை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
8வது இடத்தில் டாடா நெக்ஸான் கார் இருக்கிறது. இந்த கார் கடந்த ஜூன் மாதம் மொத்தம் 11,602 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்தாண்டு ஜூன் மாதம் 12,066 கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது 4 சதவீதம் அளவிற்கு விற்பனை குறைந்ததுள்ளது.

7வது இடத்தில் மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்பியோ கார் இருக்கிறது. இந்த கார் கடந்த ஜூன் மாதம் 12,740 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு ஜூன் மாதம் 12,307 கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது 4 சதவீதம் அளவிற்கு கடந்த மாதம் விற்பனை அதிகரித்துள்ளது.
6வது இடத்தில் மீண்டும் மாருதி நிறுவனத்தின் கார் தான். வேகன் ஆர் கார் இருக்கிறது. கடந்த ஜூன் மாதம் 12,930 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்த 2024ம் ஆண்டு ஜூன் மாதம் 13790 கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது 6 சதவீதம் அளவிற்கு விற்பனை சரிவடைந்துள்ளது.

5வது இடத்தில் மாருதி நிறுவனத்தின் ஸ்விஃப்ட் கார் இருக்கிறது. இந்த கார் கடந்த ஜூன் மாதம் மொத்தம் 13,275 கார்கள் வி்றபனையானது. இதுவே கடந்த 2024ம் ஆண்டு ஜூன் மாாதம் 16422 கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது 19 சதவீதம் விற்பனை சரிவு ஏற்பட்டுள்ளது.
4வது இடத்தில் மாருதி நிறுவனத்தின் எர்டிகா கார் ிரக்கிறது. இந்த கார் கடந்த ஜூன் மாதம் 14,151 கார்கள் விற்பனையாகியுள்ளது.இதுவே கடந்த 2024ம் ஆண்டு ஜூன் மாதம் 15,902
கார்கள் விற்பனையாகியிருந்தது. இது 11 சதவீத விற்பனை சரிவை பெற்றுள்ளது.
3வது இடத்தில் மாருதி நிறுவனத்தன் பிரெஸ்ஸா கார் இருக்கிறது. கடந்த ஜூன் மாதம் மொத்தம் 14,507 கார்கள் விற்பனையாகியிருந்தது. கடந்தாண்டு ஜூன் மாதம் 13,172 கார்கள் விற்பனையாகியிருந்தது.
தற்போது 10 சதவீதம் அளவிற்கு விற்பனை அதிகரித்துள்ளது. இந்த பட்டியலில் ஃபிராங்க்ஸ் காருக்கு பிறகு விற்பனை அதிகரிப்பை பெற்ற மாருதி கார் இது தான்.
2வது இடத்தில் மாருதி நிறுவனத்தின் டிசையர் கார் இருக்கிறது. கடந்த ஜூன் மாதம் 15,484 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்த 2024ம் ஆண்டு ஜூன் மாதம் 13,421 கார்கள் விற்பனையாகியுள்ளது. 15 சதவீதம் அளவிற்கு விற்பனை வளர்ச்சியடைந்துள்ளது.
முதல் இடத்தில் ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா கார் இருக்கிறது. கடந்த ஜூன் மாதம் 15,786 கார்கள் வறி்பனையாகியுள்ளது. இதுவே கடந்த 2024ம் ஆண்டுஜூன் மாதம் 16,293 கார்கள் விற்பனையாகியுள்ளது. இது 3 சதவீதம் விற்பனை சரிவு ஏற்பட்டுள்ளதை காட்டுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் மக்களுக்கு பிடித்த சரியான காரை தயாரித்தால் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் என்பதற்குஇதுவே சாட்சி இதில் பெரும்பாலான கார்கள் நீண்ட ஆண்டுகளாக விற்பனையில் உள்ள கார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications









